
உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் பூண்டு வெறுக்கப்படுவது ஏன்?
வெள்ளைப்பூண்டின் மகிமை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பூண்டு சாப்பிட்டு அதன் பலனை உணர்ந்து பார்த்தவன் என்ற முறையிலும், நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டது என்ற வகையிலும் இந்தப் பதிவை எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.
என் அனுபவத்தில் நான் கண்டது என்னவென்றால் அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் எத்தனையோ அளப்பரிய மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்று சொன்னதும் இது அலோபதிக்கு எதிரானது என்று யாரும் நினைக்க வேண்டாம்.
Must Read: ஆடிப்பட்டத்தை அமர்களமாய் தொடங்க அக்ரி இன்டெக்ஸ் 2023
எந்த பாகுபாடில்லாமல் எல்லோருமே இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அவற்றின் மருத்துவ குணங்கள் நமக்கு நலமளிக்கின்றன என்பது உண்மை. ஏற்கெனவே நான் சொன்னதுபோல இஞ்சிக்கு மருத்துவ குணம் இருக்கிறது என்பதற்காக அதை தொடர்ந்தோ, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அது ஏற்படுத்தும் பின்விளைவு மோசமாகவே இருக்கும்.
அதேபோல் வெள்ளைப்பூண்டினை பச்சையாக எடுத்துக்கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. வேகவைத்துச் சாப்பிட்டாலே அதன் மருத்துவ குணம் நமக்கு கிடைத்துவிடும். நள்ளிரவில் நெஞ்சை பிசைந்ததுபோல் இருக்கும்போது முழு வெள்ளைப்பூண்டினை தீயில் சுட்டு சாப்பிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய அனுபவம் எனக்கு உண்டு. சிலநேரம் பூண்டு சாப்பிட்டதும் மலம் கழிந்த பிறகு இயல்புக்கு வந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
Must Read: நெல்லை சந்திரவிலாஸ் உணவகத்தில் தொடரும் அதே பாரம்பர்ய சுவை….
பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 மிமீ எச்ஜி என்ற அளவில் இருக்க வேண்டும். சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் உறவினருக்கு தொடர்ந்து 200/110 என்ற அளவில் இருந்தது. உடனே வெள்ளைப்பூண்டினை வேக வைத்து சாப்பிட சொன்னதில் அன்றைக்கே 170-க்கு வந்தது. மறுநாள் 140-க்கு வந்தது.
வயது 80-ஐ கடந்த நிலையில் இந்த அனுபவம். வீடு திரும்பிய பிறகு ஒருநாள் முழுக்க கிறக்க நிலையில் இருந்த அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்தபோது 178/110 என்று இருந்தது. உடனே சட்டென பூண்டு வேக வைத்துக் கொடுத்து அடுத்த 10-வது நிமிடத்தில் 140-க்கு வந்தது.
அப்படியொரு அதிசயம். இஞ்சி, பூண்டு என்றாலே ஏதோ அது தீண்டத்தகாத பொருள் என்பதுபோல் பார்த்த அவர்களது அடுத்த தலைமுறை உறவினர்களும் இதைக்கண்டு வாயடைத்துப் போனார்கள். என்ன செஞ்சீங்க..? வெறும் பூண்டு சாப்பிட்டதும் இப்பிடி ஆயிட்டா? என்று கேட்டார்கள். இப்படி சில அனுபவங்கள் இருக்கின்றன.
எம்.மரியபெல்சின் மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617
#garlicforhypertension #garlicbenefits #goodhealthforgarlic
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments