
ஆடிப்பட்டத்தை அமர்களமாய் தொடங்க அக்ரி இன்டெக்ஸ் 2023
கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2023’ (Agri Intex 2023) விவசாய கண்காட்சி இன்று தொடங்கி 17-ஜூலை திங்கள் வரை நடக்கிறது.ஆடிப்பட்டத்தை அமர்க்களமாய் ஆரம்பிக்க சரியான நேரத்தில் இந்த கண்காட்சி வருடா வருடம் நடக்கிறது.
பாரம்பரிய விதைகளைக் கொண்ட அரங்குகள் நிறைய காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். தேவையான அரிதான நாட்டு காய்கறி விதைகளை அந்த அரங்குகளில் வாங்கலாம். விதைகள் தாண்டி பாரம்பரிய கிழங்கு வகைகள் அவ்வளவாக இது மாதிரி கண்காட்சிகளில் கிடைப்பதில்லை. நான் போன பட்டத்தில் முடிந்த அளவுக்கு விட விதமான பாரம்பரிய கிழங்கு வகைகளை வளர்த்து நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தேன்.
Must Read: நெல்லை சந்திரவிலாஸ் உணவகத்தில் தொடரும் அதே பாரம்பர்ய சுவை….
இந்த வருடம் கிருஷ்ணா பாரம்பரிய விதைகள் ஸ்டால்ல நிறைய கிழங்கு வகைகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நானும் அவர்களுக்கு விதைகள் பற்றி, என்ன விதைகள் நண்பர்கள் தேடுகிறார்கள், அதை கொண்டு வர சில பரிந்துரைகள் கொடுப்பதுண்டு.
இந்த வருட கண்காட்சியில் கிழங்கு வகைகளில் purple ராசவள்ளிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, ஆட்டுக்கொம்பு காவள்ளிக் கிழங்கு, வெற்றிலைவள்ளிக் கிழங்கு, காவள்ளிக் கிழங்கு என்று நிறைய அரிதான பாரம்பரிய விதை கிழங்குகள் கிருஷ்ணா பாரம்பரிய விதைகள் ஸ்டால்ல கிடைக்கும்.
கூடவே நிறைய பேர் தேடிக்கொண்டு இருக்கும் லகடாங்க் மஞ்சள் (Lakadong Turmeric), கருமஞ்சள், கரு இஞ்சி, மா இஞ்சி எல்லாமே கிடைக்க செய்து இருக்கிறார்கள். காய்கறி விதைகளில் நீட்ட சிறகு அவரை, நெய் மிளகாய் மாதிரி அரிதான விதைகளும் கிடைக்கும். அவர்கள் ஸ்டால் Hall G-ல் Stall No. 11,12 மற்றும் 82. கிழங்கு வகைகள் தேவைப்படும் நண்பர்கள் அவங்க ஸ்டால்ல இருந்து வாங்கிக்கலாம்.
Must Read: ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடும் முறையை தவிர்க்க முயலுங்கள்; எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அறிவுறுத்தல்
நான் முன்பு அறிவித்த படி சனிக்கிழமை மதியம் 2:30 க்கு நண்பர்கள் சந்திப்பு ஒன்றும் திட்டமிட்டு இருக்கிறோம். எல்லோரும் வாங்க. கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.50. நீங்கள் Agri Intex வெப்சைட்ல உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்தால் அது போதுமானதா இருக்கும்.
நுழைவுக் கட்டணம் பொதுவாக கேட்க மாட்டார்கள். https://visitor.codissia.com/ கொடுத்துள்ள லிங்க்-ல Register செய்வதில் எதும் சவால்கள் இருந்தால் எனக்கு உங்கள் பெயர்கள், மொபைல் என், ஊர், pincode விவரங்களை WhatsApp செய்யுங்கள் (809 823 2857). நேரம் இருந்தால் நான் register செய்து தருகிறேன்.
கண்காட்சிக்கு வரும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். முடிஞ்ச அளவுக்கு மதிய சாப்பாட்டை நீங்களே எடுத்து வந்து விடுங்கள். அமர்ந்து சாப்பிட அங்கே நிறைய இடம் இருக்கிறது. கண்காட்சியில் food Court எல்லாம் போனால் அதிக கூட்டமா இருக்கும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நிற்க வேண்டிய வரும். அதிக நேர விரயம் ஆகும். திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
#AgriIntex2023 #Agriexpo #agriexpocoimbatore
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments