தூத்துக்குடி ஓலை புட்டு உணவகம்… இலங்கை தமிழ் அகதிகள் நடத்தும் பாரம்பர்ய உணவகம்


இலங்கைத் தமிழர்களின் இதுவரை அறியப்படாத பாரம்பரிய உணவுகளை ருசிக்க விரும்பினால், இனி நீங்கள் இலங்கை செல்ல வேண்டியதில்லை. தூத்துக்குடியில் இலங்கை தமிழ் அகதி பெண்களால் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள, ஓலைப்புட்டு எனும் உணவகத்தில் இலங்கையின் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே கிடைக்கின்றது. 

செயின்ட் பேட்ரிக் சர்ச் அருகே கார்பெண்டர் தெருவில் முதல் கேட் அருகே. தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் கட்டப்பட்ட கடை ஒன்றில் இலங்கைத் தமிழர்களின் ‘ஓலை புட்டு’ உணவகம் செயல்படுகிறது. 

Must Read: #Shorts நேந்திரம் வாழைபழத்தில் உள்ள நன்மைகள் என்ன?

புனர்வாழ்வு முகாம்களில் உள்ள 300 சுயஉதவி குழு  பெண்கள் தன்னிறைவு அடையும் வகையில், சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்க, சுழல் நிதியாக 1.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்துதான் , சமையல் திறன் கொண்ட பெண்களைக் கொண்ட ‘சாதனைப் பூக்கள்’ சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுதான் இப்போது ஓலை புட்டு உணவகத்தை நிர்வகித்து வருகிறது. 

இலங்கை பெண்கள் திறந்துள்ள உணவகம்

இலங்கையில் கொழும்பு அருகே நீர் கொழும்பு கிராமத்தை சேர்ந்தவர் ரோகிணி. தனது ஐந்து சகோதரிகளுடன் சேர்ந்து குடும்பத்துக்காக சமைப்பதில் மிகவும் விருப்பத்துடன் ஈடுபடுவது வழக்கம். போர் காரணமாக தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்த ரோகிணி தூத்துக்குடியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறார். அவரும், அவருடன் முகாமில் வசிக்கும் பத்து பெண்களும்  சமைக்கின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள ஓலைபுட்டு உணவகம் திமுக எம்பி கனிமொழியின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் நிதி உதவி அளித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் மற்றும் ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு, தமிழ்நாடு அரசு ஆகியவை இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.முகாம்களில் சமைப்பதையே இப்போது உணவகத்தில் சமைத்து விற்பனை செய்கின்றனர். இந்த இலங்கை தமிழர்களின் பாரம்பர்ய உணவு தூத்துக்குடியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓலை புட்டு உணவகத்தில் பணியாற்றும் இலங்கை தமிழ் பெண்கள் 11 பேருக்கும் திருநெல்வேலி நகரில் ஜிஆர்டி ஹோட்டல்ஸ் நிர்வாகத்தின் வாயிலாக சிறிய பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் என்டே கேரளம், த மெரினா, அஞ்சப்பர், ஹாட்பிரட்ஸ் ஆகிய பிரபல உணவகங்களின் சமையல்கலைஞர்கள் இந்த பெண்களுக்கு கூடுதல் பயிற்சிகளை வழங்கினர்.

தூத்துக்குடி அருகில் உள்ள மாப்பிள்ளையூரணி, தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்து நகர் உள்ளிட்ட முகாம்களில் இருந்து காலை முதல் பேருந்தில் தூத்துக்குடி வரும் இந்த பெண்கள் மதிய உணவு, இரவு உணவு சமைக்கத் தொடங்குகின்றனர்.மதிய உணவாக சாதம், மீன், இறால், கனவா மீன் மசாலா, நண்டு, காய்கறி, கீரைக்கூட்டு, சுண்டல், மாசி சாம்பல் எனப்படும் இலங்கை உணவு ஆகியவற்றை சமைக்கின்றனர். அசைவ உணவு ரூ.120க்கு கொடுக்கின்றனர். சைவ உணவு ரூ.90க்கு கொடுக்கின்றனர்.

ஓலை புட்டு உணவகம் திறப்பு

இடியாப்பம், புட்டு, பரோட்டா ஆகியவை இரவு உணவுக்கு தயாரித்துத் தருகின்றனர். தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் சொதியும், கோழிக்கறி ஆகியவையும் தருகின்றனர். டின்னருக்கு தோராயமாக ஒரு நபருக்கு ரூ.90 ஆகிறது. ஓலைப்புட்டு எனப்படும் இலங்கை உணவும் பனைஓலைகளில் வழங்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் பெண்களும் இந்த உணவகத்துக்கு வந்து பார்த்து செல்கின்றனர். விரைவில் பல்வேறு முகாம்களின் சார்பில் இதுபோன்ற உணவகங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

1999ஆம் ஆண்டு முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் வசந்தி. அவர் தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. வீட்டில் இலங்கை தமிழர் உணவு, தமிழ்நாட்டு உணவு என்று இரண்டும் கலந்த உணவுகளை சமைத்து உண்கின்றனர். எனினும், புட்டு உணவுடன் சைட் டிஷ்ஆக இறால் குழம்பும் சேர்த்து சாப்பிட்டால், அதை விட சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை என்கிறார். தமிழ்நாட்டு உணவுக்கும், இலங்கை உணவுக்கும் உள்ள வித்தியாசம் தேங்காய் பால் மட்டும்தான் என்கின்றனர் இவர்கள். பெரும்பாலான குழம்பு வகைகளில் முக்கியமாக மீன் குழம்பில் தேங்காய் பால் சேர்த்து சமைக்கின்றனர்.

இன்னொரு பெண்ணான ரோகிணி கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 9மாத மகனுடன் வந்து தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்து இறங்கினார்.கடலில் படகில் பயணித்து இரண்டு நாட்கள் பசியோடு வந்து இறங்கிய அவருக்கு தமிழ்நாட்டில் கருவாட்டு குழம்புடன், உணவு தரப்பட்டது. அந்த உணவின் ருசியை இன்றளவும் தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார் ரோகிணி. 

கட்டுரை ஆதாரம்; THE HINDU

படங்கள்; திமுக எம்பி கனிமொழி அவர்களின் டிவிட்டர் பதிவு

#SrilankaTraditonalFood  #OlaiPuttu  #LankanTamilFoods

 



 


Comments


View More

Leave a Comments