20 வகை ருசிகளில் அசத்தும் சேலம் கந்தன் தட்டுவடை செட் கடை..


சேலம் டவுன் வாசவி மஹால் அருகே பாலத்தில் டிவிஎஸ் வண்டியில் மாலை நேரத்தில் செயல்படுவது தான் கந்தன் தட்டுவடை செட் கடை..சேலத்தின் ஸ்பெஷல் தட்டுவடைசெட் என்பார்கள். அதேபோல காரப்பொரியும் சேலத்தின் ஸ்பெஷல்களில் ஒன்று தான். அந்தக் காரப்பொரியில் விதவிதமான ருசிகளில் தயாரித்து அசத்துவது சேலத்தில் கந்தன் தட்டுவடை செட் கடை ஒன்றுதான்.

அவர் கடையில் டிவிஎஸ் 50 வண்டி கேரியரில் ஒரு மரப்பெட்டியில் ஒரே அளவான பிளாஸ்டிக் டப்பாக்களில் மிளகாய் பொடி மிளகு பொடி பருப்பு பொடி வரமிளகாய் ஒரு கடலை பொட்டுக்கடலை கேரட் துருவல் எலுமிச்சை துருவல் பீட்ரூட் துருவல் சிறிதாக நறுக்கப்பட்ட வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பார்.அவரை செட்டியார் என்று அன்போடு அழைப்பார்கள்.

Must Read: மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஒரு எவர்சில்வர் கப்பில் இரண்டு கைப்பிடி பொரியை போட்டு, வரமிளகாய் பொடி, மிளகுப்பொடி, பருப்பு பொடி போட்டு மூடியில் சிறு துளையிட்ட பாட்டிலில் இருக்கும் தேங்காய் எண்ணெயை சரிவாக சாய்த்து, கையில் இருக்கும் ஸ்பூனால் கடகடவென்று உள்ளே விட்டு கலக்குவார். 

அசத்தும் சுவையில் காரப்பொரி

பழைய ஆனந்த விகடன், குமுதம் பத்திரிக்கைகளில் இருந்து நடுப்பக்கத்தை கிழித்து கோன் மாதிரி செய்து பொரி கீழே சிந்தாமல் இருக்க அடி பாகத்தை சிறிது மடக்கி விட்டு கலக்கி வைத்த பொறியை ஸ்டைலாக பேப்பர் போனில் போட்டு நம்மிடம் கந்தன் நீட்டுவார்.அவர் பொரியை கலக்கும் விதமே நம் நாக்கில் நீரை வரை வளர்த்து விடும்.

பொதுவாகவே பொரியில் காரம் சற்று அதிகமாக இருக்கும் அது காரப்பொரி.இதுவே பொரியுடன் கரம் சேர்த்து ( வரமிளகாய் பீட்ரூட் காம்பினேஷன்) வறுகடலை கொத்தமல்லி கேரட் துருவல் வெங்காயம் சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்தால் அதுவே கரம் பொரி.இரவில் குளிர் நேரத்தில் சாப்பிட கரம்பொரி அமிர்தமாய் இருக்கும்.

அன்பு சகோதரர் கந்தன் தட்டுவடை செட் கடையில் மிளகு சீரகம் ஓமம் ஜாதிக்காய் பிரியாணி என  பொடி வகை பொரிகளும், மா இஞ்சி பூண்டு கதம்பம் கொத்தமல்லி புதினா கருவேப்பிலை தக்காளி முட்டைகோஸ் கதம்பம் மிளகாய் என்ன விதவிதமான சட்னி பொரி வகைகளும் செம டேஸ்ட்டில் கிடைக்கும்.

சேலம் கந்தன் கடை காரப்பொரி

மேலும் 12 வகை தட்டு வடை செட் இங்கு கிடைக்கும்..! ஆனியன் செட் தக்காளி செட் தக்காளி நொறுக்கல் என அனைத்தும் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.அத்துடன் கந்தன் அவர்கள் கடையில் விற்கப்படும் பிஸ்கட் ஜாம் மிகவும் இனிப்பாக ருசியாக தித்திப்பாக இருக்கும்.அதை  குழந்தைகள் விரும்பி தேடி வந்து சாப்பிடுவார்கள்.

Must Read: தொப்பை குறைய; மூட்டுவலி நீங்க, தூக்கம் வர மூன்று விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

இன்று என்ன தான் பானிபூரி பேல்பூரி மசால்பூரி பீட்சா பர்கர் என வந்துவிட்டாலும் சேலம் மாநகரத்தில் மாலை நேர ஸ்நாக்ஸ் விற்பனையில் வசூல் ரேசில் முன்னணியில் இருப்பது தட்டுவடைசெட்டும் காரப்பொரியும் தான்.

அன்புச் சகோதரர் கந்தன் அவர்களின் தந்தை பாலகிருஷ்ணன் 53 வருடங்களுக்கு முன்பு இளநீர்க்கடை சந்தில் ஆரம்பித்த இந்த தட்டுவடை செட் வியாபாரம் கடந்த 30 ஆண்டுகளாக வாசவி மஹால் ஆத்தோர வீதியில் சூப்பராக நடைபெற்று வருகிறது.

ருசி ருசியாக காரப்பொரி சாப்பிட விரும்புபவர்கள் உடனே கந்தன் தட்டுவடை செட் கடைக்கு விசிட் செய்யவும்.சேலம் வாசவி மஹால் ஆத்தோர வீதி கந்தன் தட்டுவடைசெட் கடையும் சேலத்தின் ஒரு அடையாளம் தான்.தந்தை பாலகிருஷ்ணன் ஐயாவிற்கு பிறகு மிகவும் சிறப்பாக தட்டுடை செட் காரப்பொரி விற்பனையில் அசத்தி வரும் திரு கந்தன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.அவர் வணிகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

படங்கள் மற்றும் செய்தி நன்றி; ஈசன்_எழில்விழியன்

#KandanThaduvadaiSetKadai   #KaraPori  #SalemKandanKadai


Comments


View More

Leave a Comments