மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?


மது, புகை பழக்கங்களை விட நினைப்பவர்கள் முதலில் அவர்கள் உண்ணும் உணவில் இனிப்பு சுவையை நிறுத்துவது நல்லது. மாவுச்சத்தைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்பும்  சரியான விகிதத்தில் புரதத்தையும் உண்ணும் பழக்கத்திற்கு மாறுவது  போதை வஸ்துகள் தரும் போதையில் இருந்து வெளி வர உதவக் கூடும். 

பொதுவாக தொடர்ந்து மது அருந்தும் ஒருவர் திடீரென மதுவை நிறுத்தும் போது அவருக்கு மது நிறுத்தம் சார்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். இதை WITHDRAWAL SYMPTOMS என்கிறோம். பலரும் இந்த WITHDRAWAL SYMPTOMS க்கு பயந்தே மது மற்றும் புகையை விட மறுக்கின்றனர். 

Must Read: ஆணின் உயிரணுக்களை எதிர்த்த பெண்ணின் உடல்; குழந்தையின்மை சிகிச்சையின் வெற்றிக்கதை

கீடோஜெனிக் உணவு முறை / பேலியோ உணவு முறை / குறை மாவு சரியான புரதம் &  ஆரோக்கிய கொழுப்பு உணவு முறை (LOW CARB HEALTHY FAT APPROPRIATE PROTEIN)  மது புகையை நிறுத்தும் போது ஏற்படும் போதை நிறுத்தம் சார்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்க உதவும். 

புகை பழக்கத்தில் இருந்து விடுபட உண்ண வேண்டிய உணவு

ரத்தத்தில் கீடோன்களை உண்டாக்கும் கீடோஜெனிக் உணவு முறையினால் மூளை கீடோன்கள் மூலம் இயங்கும் நிலையில் இருக்கும். இவ்வாறு கீடோன்களில் மூளை இயங்கும் போது மது / புகை  அதீத உந்துதலை ( CRAVINGS)  ஏற்படுத்த இயலாது. எனவே மதுப் பழக்கத்தை விட்டவர்ஙள் மீண்டும் மதுப்பழக்கத்துக்கு வரும் வாய்ப்பு குறையும். 

நமது மூளையில்  மது அருந்தும் போதும்  புகை பிடிக்கும் போதும் கஞ்சா அடிக்கும் போதும் கொக்கைன் அடிக்கும் போதும்  மூளையின் "ஹிப்போகேம்பஸ்" எனும் பகுதியில் பரிசளிக்கும் மையத்தைத் தூண்டுகின்றன. அதாவது மூளைக்கு "ஹை" எனும் சிறிய நேர இன்பத்தை ஃபேண்டசி போதை உணர்வைத் தரக்கூடிய வஸ்துக்களை உட்கொள்ளும் போது இந்த பரிசளிக்கும் மையத்தைத் ( REWARD CENTRE) தூண்டி மூளை தனது நினைவாற்றல் மையத்தில் சேமித்து வைத்து விடுகிறது 

தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வஸ்துவை உட்கொள்ளத் தூண்டுவதும் இந்த பரிசளிக்கும் மையங்கள் தான். அந்த குறிப்பிட்ட வஸ்து குறித்த பேச்சு வந்தால் , அதைக் கண்ணால் பார்த்தால், அதன் வாசனையை நுகர்ந்தால் என்று இந்த CRAVING ஐ மூளைத் தூண்டில் கொண்டு இருக்கும். நீங்கள் நம்புவீர்களா? 

மூளையில் மது/ கொகய்ன்/ புகை இன்ன பிற போதை வஸ்துகள் "ஹை" வழங்கும் அதே பரசளிக்கும் மையங்களை நாம் உண்ணும் "இனிப்பு" (SWEET FOODS)  தூண்டுகின்றன என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். எலிகளை வைத்து செய்த பரிசோதனைகளில் கொகய்னுக்கு அடிமையான எலிகளுக்கு சில நாட்கள் கழித்து  கொகய்னும் சீனியும் கொடுக்கப்பட்டதில் கொகய்னை விடவும் சீனியைத் தேர்ந்தெடுத்தன என்கின்றன ஆய்வுகள். 

உண்ணும் உணவில் மாவுச்சத்தை குறைப்பதும் தேவையான புரதச்சத்தை உண்பதும்  ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உணவை அதிகரிப்பதும் மூளையை கீடோன்களைக் கொண்டு இயங்க வைக்கின்றன. இதன் விளைவாக மனத்தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்பும் குன்றுவதாகத் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மது, புகை  பழக்கங்களை விடுவது நல்லது

நம்மில் யாரும் மது புகை இன்ன பிற போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் தங்களின் உணவு முறையில் மாவுச்சத்தைக் குறைத்து இனிப்பு சுவை தரும் அனைத்தையும் நிறுத்தி  ஆரோக்கியமான கொழுப்பைக் கூட்டி  தேவையான புரதத்தை உட்கொள்ளும் போது மேற்சொன்ன தீய பழக்கவழக்கங்கள் கட்டுப்படும்- நீங்கும் வாய்ப்பு அதிகம். 

எனது சிறிய அனுபவத்தில் நான் கண்ட சில விசயங்கள்  குறை மாவு ஆரோக்கியமான கொழுப்பு உண்ணும் உணவு முறைக்கு மாறிய நபர்கள் மது போதையில் இருந்து விடபட்டதையும் அவர்களுக்கு மது நிறுத்தப்படும் போது ஏற்படும்  WITHDRAWAL SYMPTOMS  மிகவும் குறைவாக அல்லது இல்லாமல் போனதையும் கண்டிருக்கிறேன்

மீண்டும் அதே நபர்கள் பேலியோவை விட்டு அதிக மாவுச்சத்து மற்றும் இனிப்பு உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மீண்டும் மது அருந்த ஆரம்பித்ததையும் கண்டிருக்கிறேன் இதை  CROSS DEPENDANCE  என்று அழைக்கிறோம்  

Must Read: சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…

இனிப்பு சுவை  அதிக மாவுச்சத்து  மது புகை இதர போதை வஸ்துகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று லிங்க் ஆனவை.  எனவே சொந்தங்கள் அனைவரும்  தங்களின் உணவு முறையை குறை மாவு நிறை கொழுப்பு உணவுமுறைக்கு மாற்றி  இனிப்பை அறவே நிறுத்தினால் மது புகை போன்ற பழக்கங்களில் இருந்து எளிதில் வெளிவர முடியும் என்று நம்புகிறேன் 

மது நோய் புணரமைப்பு மையங்களில் குறை மாவு நிறை புரதம் ஆரோக்கியமான கொழுப்பு உண்ணும் பேலியோ உணவு முறையை குடிநோயில் இருந்து மீள்பவர்களுக்குப் பரிந்துரைத்தால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் 

கட்டுரைக்கான ஆதாரங்கள், ஆய்வுகள் 

1.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8670944/

2.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8034849/

3.https://pubmed.ncbi.nlm.nih.gov/33837086/

4.https://pubmed.ncbi.nlm.nih.gov/33053357/

5.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8034849/…

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#WITHDRAWALSYMPTOMS #DontDrinkAndSmoke #AvoidDrinkAndSmoke

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments