நீங்கள் தயிர் பிரியரா? கட்டாயம் இதைப் படிக்கவும்


ஆரோக்கியமான, புத்துணர்ச்சியூட்டும் உணவை பற்றி பேசும்போது, தயிர் தான் நம் மனதைக் கடக்கும் முதல் தேர்வாகும், ஏனென்றால் தயிர் செரிமானத்திற்கு சிறந்த புரோபயாடிக் கூறுகளைக் கொண்டுள்ளது. லாக்டோபாகிலஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாவுடன் பால் நொதித்தல் செயல்முறையால் தயாரிக்கப்படும் தயிரின் குளிரூட்டும் பண்புகள் செரிமான அமைப்பையும் குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

இதனால்தான் தயிர் நம்மில் பெரும்பாலோருக்கு பிடிக்கும், ஆனால் தயிரை சில உணவுகளுடன் இணைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தயிருடன் எல்லா உணவுப் பொருட்களையும் சுலபமாக சேர்த்து சாப்பிட்டு விடக்கூடாது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இது சிலருக்கு தெரிந்து இருந்தாலும், பலருக்கு இன்னுமும் தெரியாமல் தான் இருக்கிறது. தயிர் சாப்பிடும் ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

1) தயிர் ஏன் மிகவும் ஆரோக்கியமானது?

லாக்டிக் அமிலத்துடன் நொதித்தல் செயல்முறையின் காரணமாக தயிர் ஒரு அடர்த்தியான, கிரீமி அமைப்பைக் கொடுக்கும், இது புரோபயாடிக் கூறுகளால் நிறைந்துள்ளது. வைட்டமின் மற்றும் வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. இருப்பினும், சில உணவுகளுடன் தயிர் இணைப்பது உங்கள் செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது சருமத்தில் முறிவுகளுக்கு வழிவகுக்கும். ஆயுர்வேதத்தின்படி கூட இந்த உணவுகளை தயிர் இணைப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை தவறான சேர்க்கைகளாக கருதப்படுகின்றன.

2) தயிர் சாப்பிட்ட உடனே எண்ணெயில் செய்த உணவுகளை உண்பதை  உண்பதை நிறுத்துங்கள்

எண்ணெயில் பொரித்த உணவு வகைகளுடன் தயிர் சேர்த்து உண்பதை கூடுமானவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக இரவு நேரங்களில் பொரித்த உணவு வகைகளுடன் தயிர் சேர்த்துக் கொள்வது செரிமான பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

3) மீன் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஆகும். இது மாடுகளில் இருந்து பெறப்படுவதால், இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும். அதேபோல், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன், இன்னொரு தாவர வகை புரதத்தையோ சேர்த்து சாப்பிடக் கூடாது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும்.

இதையும் படியுங்கள்; உடலுக்கு நன்மை அளிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்


4) ஒரே நேரத்தில் பால் அல்லது தயிரை உட்கொள்ள வேண்டாம்

பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட உணவாக தயிர் இருந்தாலும் பாலுடன் இதனை சேர்த்து சாப்பிடுவது சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. பாலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற தொந்தரவுகளும், வயிற்றுப் போக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே பாலுடன் தயிரை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

எந்தெந்த உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம் தெரியுமா

5) மாம்பழத்துடன் தயிர் சேர்ப்பதை தவிர்க்கவும் 

தயிருடன் ஒரு சிலர் மாம்பழம் வைத்து சுவைப்பது உண்டு. இது சூப்பரான காம்பினேஷனாக இருந்தாலும் உடலுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. மாம்பழம் அதிக சூட்டை ஏற்படுத்தும் என்பதால் இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் தவிர்ப்பது நல்லது.

6) உளுந்தம்பருப்பால் ஆன பொருட்களுடன் தயிர் உண்ணாதீர்கள்

தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்புசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

7) தயிர் மற்றும் நட்ஸ்

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரத சத்து அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். 

8) பிரியாணியுடன் தயிர் பச்சடி சாப்பிடலாமா?

பிரியாணி வகையை அடிக்கடி சாப்பிடுபவர்கள் அதனுடன் தயிர் பச்சடி எடுத்துக் கொள்வது வழக்கம். பிரியாணியில் இருக்கும் மசாலா வகையறாக்கள் உடலுக்கு பிரச்சனைகளை தரக் கூடாது என்பதால் வெங்காயத்துடன் தயிர் சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஆனால் வெங்காயம் சூட்டை கொடுக்கக் கூடியது மற்றும் தயிர் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இரண்டும் எதிரெதிர் தன்மையை கொண்டுள்ளதால் சில நேரங்களில் உடலுக்கு உபாதை விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடும். எனவே பிரியாணியுடன் அதிகமாக தயிர் பச்சடியை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை.

9) தயிர் சாப்பிட சிறந்த நேரம் எது?

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிர் உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். 

-பாஸ்கர் சாய்

#Yogurt  #Curd  #HealthyYogurt  

 

Comments


  • Raju

    பரம்பரையாகவே பிராமணர்கள் இரவில் தயிர் சாதம் தான் சாப்பிடுகிறார்கள் என்று நான் நன்கு அறிவேன். அவர்களுக்கு ஒன்றும் ஆவது இல்லையே!!

    Jun, 20, 2021
View More

Leave a Comments