தமிழர்களின் மிளகு ரசத்தில் இருந்து உருமாறிய முல்லிகாடாவ்னி சூப் பற்றி தெரியுமா?


200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முல்லிகாடாவ்னி சூப் (மிளகு டவ்னி சூப் Milagu Tawny Soup என்றும் அழைக்கப்படுகிறது) ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளின் ஆரம்பகால உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காய்கறிகள், அரிசி, மசாலாப் பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், பகுதியளவு திரவ உணவாகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியர்களின் உணவில் தவறாமல் இடம் பெறும் மிளகு ரசமே இந்த முல்லிகாடாவ்னி சூப்பின் மூலமாகும். மிளகு ரசம் என்பதுதான் இந்திய சமையல்காரர்களால் சற்றே மாற்றியமைக்கப்பட்டு, முல்லிகாடாவ்னி என்று தயாரிக்கப்பட்டது.

இது ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு பிடித்தமான  சூப்பாக இருந்தது. இன்றும் இங்கிலாந்தில் இந்த சூப் புகழ்பெற்று விளங்குகிறது.

Must Read: தமிழக உணவுகளின் நிரந்தர சூப்பர்ஸ்டார் இட்லி என்பது தெரியுமா? 

முல்லிகாடாவ்னி சூப் முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளிடம்  வேலை செய்த தமிழ்நாட்டின் சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்டது. பின்னர் இது அதே நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் வசித்த பிரித்தானியர்களிடையே இந்த சூப் ஒரு பிரபலமான உணவுப் பொருளாக மாறியது,

ஆங்கிலேயர்கள் இந்த சூப் குறித்து உணவு குறித்து பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்.  1784 கடற்படை சாண்டியை மேற்கோள் காட்டி ஆங்கில இராணுவப் பாடலில் இந்த சூப் குறித்த குறிப்பு ஒன்று காணப்படுகிறது:

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்களில் பலர் தங்கள் தாய்நாட்டின் சமையலறை பொருட்களை தம்முடன் கொண்டு வந்தாலும், இந்திய சமையல்காரர்களின் கைப்பக்குவத்தை நம்பியிருந்தனர்.

மிளகு ரசம் சூப் ஆக மாறிய கதை

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த அதிகாரிகள், உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இருப்பினும், இந்திய சமையல்காரர்களுக்கு, அத்தகைய உணவைத் தயாரித்து பரிமாறுவது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

ஆங்கிலேயர்களை மகிழ்விப்பதற்காக, சமையல்காரர்கள் தமிழ்நாட்டின் ரசத்தை அவர்கள் அறிமுகம் செய்தனர். நிறைய மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சூப் ஆக அது இருந்தது. காய்கறிகளுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களின் ருசியின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த சூப்பில் கோழி மற்றும் மட்டன் போன்ற இறைச்சி பொருட்களும் சேர்க்கப்பட்டன.

Must Read: “மீன் அசைவம் என்று சொல்வதால், அதில் உள்ள சத்துகளை பலர் அறிவதில்லை…”

காலப்போக்கில், ஆங்கிலேயர்களின் குடும்பங்களின் மெனுவில் முல்லிகாடாவ்னி சூப்பைச் சேர்க்கத் தொடங்கினர். அக்கால சமையல் புத்தகங்கள் சூப் தயாரிப்பதற்கான பல்வேறு சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டன,

1850 களில், ஹெய்ன்ஸ் மற்றும் தாமஸ் நெல்சன் உள்ளிட்ட உணவு ஜாம்பவான்கள் பிரிட்டனில் சூப் கலவையை விற்பனை செய்தனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டோனால்  பின்னர் இது ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது பயணக் குறிப்பு ஒன்றில்,  'கடினமான 40 நாள் மலையேற்றத்திற்குப் பிறகு (ஆப்பிரிக்காவில்), 6 அக்டோபர் 1859 அன்று, நான் மீண்டும் கப்பலுக்கு வந்தேன். நாங்கள் பைகளில் எடுத்துச் செல்லும் முல்லிகாட்டவ்னி பேஸ்டிலிருந்து சூப் தயாரித்தோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த சூப் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கும், பின்னர் உலகின் பிற பகுதிகளுக்குப் பயணம் செய்தது. இப்போது சென்னையில் உள்ள சில நட்சத்திர உணவகங்களில் விஐபி வாடிக்கையாளர்களாக இந்த சூப் வழங்கப்படுகிறது.

-ருசி பிரியன்

#Milagutawnysoup  #angloindiansoup #rasam #chennaiday

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


 


Comments


View More

Leave a Comments