
மாற்றுத்திறனாளி உணவு விநியோக முகவர்…இணையத்தில் வைரல் ஆன இன்ஸ்டாகிராம் பதிவு
மாற்று திறனாளி Zomato உணவு விநியோக முகவரின் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய காலகட்டத்தில், உணவு நமது இடத்துக்கே வந்து விநியோகிக்கப்படுவது நமக்கு முழுமையான மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. நம்முடைய பிஸியான வாழ்க்கை முறையால் நம்மில் பலருக்கு சமைக்க நேரம் கிடைப்பதில்லை.
நம்மில் சிலர் எல்லாவற்றையும் நாமே செய்துகொள்ளும் அளவுக்கு சிறந்த சமையல்காரராகவும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே, பசிக்கும்போது சுவையான உணவை சாப்பிட விரும்பினால்- உணவு வகைகளை நமது வீட்டுக்கே வரவழைத்து உண்ணும் நடைமுறைக்கு நாம் மாறிவிட்டோம்.
Must Read: #BestCoffeeInChennai சென்னையில் அதிகாலை நான்கு மணி.. அருமையான காபி எங்கு கிடைக்கும் தெரியுமா?
நாம் ஆர்டர் செய்த உணவை நமக்கு கொண்டு வரும் நபர் எத்தகைய சிரமத்துடன் அதனை கொண்டு வருகிறார் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று, டெலிவரி ஏஜென்ட் நம் வீட்டிற்கு வருவதற்கு எடுக்கும் முயற்சி. அல்லது நேரம் எதுவாக இருந்தாலும், அவர் கடினமான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில், மாற்று திறனாளி Zomato உணவு விநியோக முகவரின் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது. @groming_bulls என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் Zomato உணவு விநியோக முகவர் உணவு விநியோகிக்க செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. பின்னால் உணவு வகைகளை வைத்திருந்தார். அந்த வீடியோவில், "முடியாது எதுவும் இல்லை, என்னால் முடியும் என்ற வரிகள் இன்ஸ்டா கிராமில் பதிவிடப்பட்டுளது.
இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது முதல், இது 9.77 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது, 1.36 லட்சம் லைக்குகள் அள்ளியுள்ளன. 500 க்கும் மேற்பட்ட கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி உணவு விநியோக நபரின் கடின உழைப்பால் பலர் ஈர்க்கப்பட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம், அண்ணா, உங்களுக்கு பெரிய சல்யூட் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு நபர், "கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பாராக" என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர், "உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு சல்யூட் மற்றும் மரியாதை, ஐயா. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! என்று கூறியுள்ளார்.
Must Read: #TrendingHealthstory கொரோனா காலத்தில் இந்தியர்கள் எந்த உணவுக்கு அதிகம் செலவிட்டார்கள் தெரியுமா?
மேலும் பலர் மாற்றி திறனாளி நபர்களை பணியமர்த்துவதற்காக Zomato நிறுவனத்தைப் பாராட்டியுள்ளனர். ஒரு மாற்றுத்திறனாளிக்கு வேலையை வழங்கியதற்காக Zomato சேவைக்கு ஒரு சல்யூட் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், "வேலை கொடுத்த Zomato மேற்பார்வையாளருக்கு மரியாதை" என்று எழுதினார்.
"இது மிகவும் ஊக்கமளிக்கிறது, ஆனால் மாற்று திறனாளி நபர்களுக்கு வேலை வழங்கியதற்காக Zomatoவுக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஊனத்தை இயல்பாக்குவதற்கும் அதை ஒரு நோயாகக் கருதாமல் இருப்பதற்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.
-ரமணி
#DisabilityFoodDeliveryAgent #ZomatoFoodDelivery #ViralPost #Zomato #ZomatoAgent
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments