ரோசெல்லா தேநீர் செரிமானத்திற்கு உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும்
ரோசெல்லா பற்றிய பதிவுகளோ விளக்கங்களோ இதுவரை அதிகம் பகிர்ந்ததில்லை. ரோசெல்லாவைப் பற்றி ஏற்கனவே தெரிந்த நண்பர்களுக்காகவும் புதிதாக தெரிந்துகொள்ளும் நண்பர்களுக்காகவும் இப்பதிவு. ரோசெல்லாவானது நம் ஊர்களில் பரவலாகக் காணப்படும் புளிச்சைக்கீரையில் சிவப்பு நிற புளிச்சைக்கீரை ரகத்தின் பூவின் இதழ் எனலாம்.
நமது கணையத்தில்(Pancreas) உருவாகும் ஒருவித நொதியே(Enzyme) அமிலேஸ் என்றழைக்கப்படுகிறது. அதை போர்சின் பேன்கிரியாட்டிக் ஆல்ஃபா அமிலேஸ்(Porcine pancreatic α-amylase) என்பர்.
Must Read:சித்த மருத்துவத்தில் வெளிசிகிச்சையுடன், உள சிகிச்சையும் முக்கியம்...
இந்த அமிலேஸானது நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஸ்டார்ச்சை(Starch) எளிதில் சர்க்கரையாக மாற்றுகிறது. அதுமட்டுமின்றி அதிகப்படியான கார்போஹைட்ரேட்டையும் நம் உடலில் சேர்க்கிறது. அமிலேஸ் என்சைம் உற்பத்தி செய்யும் சர்க்கரையானது நீரிழிவு பிரச்சினைகளுக்கும் மற்றும் அது தொடர்பான அனைத்து உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.
ரோசெல்லாவும் அமிலேஸும்.
இந்த அமிலேஸின் உற்பத்தியானது குறைவான அளவில் இருப்பதே நம் உடலுக்கு நன்றாகும்.அச்செயலை ரோசெல்லா செய்கிறது. இதன் மூலம் உடலில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் எடை குறைந்து இருதய நோய் மற்றும் நீரிழிவு பிரச்சினைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.
ரோசெல்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
▪︎வைட்டமின்கள் - ஏ, பி2, பி3 மற்றும் சி,
▪︎புரதம்,
▪︎சுண்ணாம்புச் சத்து,
▪︎இரும்புச்சத்து,
▪︎மெக்னீசியம்,
▪︎பாஸ்பரஸ்,
▪︎பொட்டாசியம்
▪︎சோடியம் மற்றும்
▪︎இயற்கையான கொழுப்புகள்.

பிற நன்மைகள்:
செரிமானத்திற்கு உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும், உடல் எடை குறைக்க உதவும், இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள்(Flavonoids) உடல் மற்றும் மனதிற்கு ஒரு தளர்வான உணர்வை உருவாக்கும்,
ரோசெல்லாவின் ஹைபிஸ்கஸ் ப்ரோட்டோக்கேட்டிக்யூயிக் அமிலத்தில்(Hibiscus Protocatechuic Acid) புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, ஹார்மோன் சமநிலையை மீட்டமைத்து மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும், சளி இருமல் மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணமளிக்கும்,
Must Read:சிறுநீரக ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன தெரியுமா?
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க இருதய சங்கம்(American Heart Association) வெளியிட்ட அறிக்கையில் ரோசெல்லா டீ குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் குறையும் எனக் கூறப்படுகிறது, இதிலுள்ள ஆன்டிஆக்சிடன்ட்ஸ்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி கல்லீரலை பாதுகாக்கிறது, பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாக்க உதவும்.இவ்வாறு பல வகைகளில் நமக்கு நன்மையளிக்கும் ரோசெல்லாவை பானமாக அருந்தலாம்.
செய்முறை மற்றும் பயன்பாடு:
ஒரு நபருக்கு மூன்று முதல் ஐந்து இதழ்கள் விகிதம் எடுத்து 150மி.லி. நீரைக் கொதிக்க வைத்தபின் இதழ்கள் மற்றும் இனிப்பை நீரில் போட்டால் ஒரு நிமிடத்திற்கு பின் பானம் தயார். இனிப்பிற்கு நாட்டுச்சர்க்கரை கருப்பட்டி பனங்கற்கண்டு தேன் என நம் விருப்பப்படி தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.
இயற்கையாகவே நல்ல சுவை மற்றும் மனம் கொண்ட ரோசெல்லா பானத்தில் புதினா இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது மேலும் சுவையை அதிகரிக்கும். இப்பானத்தை குளிரூட்டியும் அருந்தலாம். குளிர்பானங்களை விட சிறப்பாக இருக்கும். காலை மாலை என எப்போது வேண்டுமானாலும் பருகலாம். தொடர்புக்கு; 08940882992
தகவல் மற்றும் புகைப்படங்கள் நன்றி; Karthick Mat முகநூல் பதிவு
#Rosella #RosellaBenefits #RosellaTea

Comments
View More