புரதத்தால் கிட்னிக்கு ஆபத்து, கொழுப்பால் இதயத்துக்கு ஆபத்து என்பது சரியா?
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
1970களில் பேருக்கு பத்து பேர் என்று இருந்த டயாபடிஸ் 1990களில் தெருவிற்கு ஒருவர் என்ற நிலை தாண்டி 2000களில் குடும்பத்தில் உள்ள முப்பது நாற்பது வயதினருக்கு வந்தது 2022இல் 30 வயதுகளுக்குள்ளேயே பலருக்கு டயாபடிஸ் மற்றும் ரத்த கொதிப்பு இருக்கிறது
இதற்கான முக்கிய காரணம் என்ன என்று நமக்குத் தெரிந்தும் அதை நாம் சரிசெய்ய முன்வருவதில்லை அதுவே நமக்கு டயாபடிஸை வரவழைக்கிறது. நாம் தினசரி உண்ணும் உணவில் மாவுச்சத்தை அதிகம் கொண்டுள்ள தானியங்களை அதிகம் சார்ந்திருக்கிறோம்
Must Read: உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…
தானியங்கள் மீதோ விவசாயத்தின் மீதோ நமக்கு எந்த தனிப்பட்ட ஒவ்வாமையும் பிரச்னையும் கிடையாது. ஆனாலும் ஏன் தானியங்களை உணவில் சுருக்கச் சொல்கிறோம்? காரணம் நமது மூன்று வேளை உணவும் முழுக்க முழுக்க தானியங்களை மட்டுமே சார்ந்து இருக்குமாறு நமது உணவுச் சூழல் அமைக்கப்பட்டுள்ளது
சரிவிகித உணவு முறை என்று அழைக்கப்படும் BALANCED DIET களில் கூட 50-60% ஒரு நாளைய கலோரி தேவை கார்போஹைட்ரேட்ஸ் ( மாவுச்சத்து) மூலம் கிடைக்குமாறு தான் வடிவமைக்கப்படுகிறது இது குறித்து உணவியல் வல்லுநர்களும் உணவியல் ஆய்வாளர்கள் மற்றும் பரிந்துரையாளர்கள், மருத்துவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டும்.
தற்கால அதிகரிக்கும் நீரிழிவும் உடற்பருமனும் நமது உணவு சார்ந்த பார்வையில் மாற்றத்தை கோருவதைப் பற்றி நாம் இன்னும் சிந்திக்க வேண்டும். சமகால சராசரி தமிழனுக்கு உணவின் மூலம் கிடைக்கும் மாவுச்சத்து ( carbohydrates), புரதச்சத்து ( Protein),,கொழுப்பு ( Fats),,நுண்சத்துகள் & தாதுப்பொருட்கள்( vitamins & minerals) ,குறித்து தெரியாது.,
பனிரெண்டாம் வகுப்பு படித்து வெளியேறும் மக்களுக்கு பத்தாம் வகுப்பு வரை பயாலஜியில் இது குறித்து பேசப்பட்டாலும் மாவுச்சத்தை அதிகம் சார்ந்துள்ள நமது உணவு முறை குறித்து பேசப்படுவதில்லை ஆனால் காணும் திசையெங்கும் புரதச்சத்து என்றால் கிட்னிக்கு ஆபத்து போலவும் கொழுப்பு என்றால் இதயத்துக்கு ஆபத்து என்றும் பொய்யான சித்தரிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் எவ்வளவு கிராம் மாவுச்சத்து / புரதச்சத்து / கொழுப்பு இருக்கிறது என்பதை எந்த கூகுள் உபயோகிக்கத் தெரிந்த நபரும் அறிய முடியும் உங்களுக்கு நூறு கிராம் சோறில் உள்ள மாவுச்சத்தை கண்டறிய வேண்டும் Carbohydrates in 100 grams of cooked rice என்று டைப் செய்தாலே கிடைத்து விடும்.
இப்படியாக விழிப்புணர்வு இல்லாமல் தானியங்கள் இனிப்பு நிறைந்த உணவுகள் இனிப்பு சுவை நிறைந்த பழங்கள் பேக்கரி உணவுகள் நொறுக்குத் தீனிகள் என்று அனைத்திலும் வரம்பு மீறி சாப்பிட்டு கொஞ்சம் கூட உடல் உழைப்புக்கு நேரம் ஒதுக்காமல் இருப்பதாலும் சேர்த்து நீரிழிவு வருகிறது. உடல் பருமன் ஏற்படுகிறது.
தினமும் சராசரித் தமிழன் 300 கிராம் மாவுச்சத்து சாப்பிட்டு வருகிறான் ஆனால் நம்மால் 100 கிராமிற்கு குறைவாக மாவுச்சத்தை சாப்பிட்டும் உயிர் வாழ முடியும் பேலியோ எனும் குறை மாவு வாழ்வியலில் 50 கிராமிற்கு குறைவாக மாவுச்சத்தை சாப்பிட்டு பல வருடங்களாக ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து மக்கள் இங்கு பலர் உண்டு.
மாவுச்சத்து உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து எனும் மாய பிம்பத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பலரும் நினைப்பது உடல் பருமன் / நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம் - உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது என்று
Must Read: சர்க்கரை நோயாளிகள் பாதங்களைப் பேணுவது ஏன் முக்கியம்?
மேற்சொன்ன நோய்கள் ஏற்படுவதற்கு முதல் முக்கிய காரணம் தவறான மாவுச்சத்தை அதிகம் உண்ணும் உணவுப் பழக்கம் தான் என்பதை ஆய்வுகளும் உண்மைப் படுத்தியிருக்கின்றன. உடல் உழைப்பின்மை என்பதும் காரணம் என்றாலும் அது உணவுக்கு பின்னால் தான் வருகிறது.
நாம் உணவு முறையை சரிசெய்யாமல் இந்த நோய்களில் உடல் உழைப்பை செலுத்தினாலும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்த முடியும் என்பது கண்கூடு நாம் அதிகம் சிந்திக்க வேண்டும் அதிகம் படிக்க வேண்டும் இங்கு எதுவும் எளிதில் கிடைத்து விடாது அறிவும் அப்படியே முயற்சிகளை தொடர்வோம்
-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா ,பொது நல மருத்துவர், சிவகங்கை
#Diabetes #DiabetesinIndia #understandtheDiabetes #proteinfordiabetes #understandcholesterol
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
Comments