உச்சிப்பிள்ளையார் கோயில் 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டையின் வரலாறு…
விழாக்கள் என்றால் பக்தியுடன், பிரசாதமும் முக்கிய இடம் வகிக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படும் திருவிழாவின் முக்கிய அம்சமே கொழுக்கட்டைதான். பிள்ளையாருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளை படைத்து விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் உள்ள சிறிய அளவிலான பிள்ளையார் கோயில்கள் முதல் பெரிய ஆலயங்களில் உள்ள பிள்ளையார் சன்னதிகள் வரை அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில், திருச்சி மலைகோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
Must Read: ரூ400 காபியை ரூ.190க்கு வாங்கிய வாடிக்கையாளரின் உத்தி
குறிப்பாக திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். உச்சி பிள்ளையார் கோயிலில் வழக்கமாக மாதம் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் வழக்கமாக சிறிய அளவிலான கொழுக்கட்டைகள் செய்யப்பட்டு விநாயகருக்குப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு இதில் ஒரு மாற்றமாக பிரமாண்ட கொழுக்கட்டை செய்யும் வழக்கம் தொடங்கியது. தலா 75 கிலோ வீதம் இரண்டு கொழுக்கட்டைகள் தயாரித்து அதில் ஒன்று மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், மலைக்கு கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னதியில் இன்னொரு கொழுக்கட்டையும் படைக்கப்படும்.
பிரமாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் செலவை திருச்சியில் உள்ள அகஸ்தியர் பதிப்பகத்தினர் ஆண்டுதோறும் ஏற்றுக் கொள்கின்றனர். இது குறித்து ஆங்கில இந்து நாளிதழுக்கு அகஸ்தியர் பதிப்பகத்தின் உரிமையாளர் ஜி.கிரிஷ் அளித்த பேட்டியில், “ கொழுக்கட்டை தனியாக பிடித்து, பின்னர் அதில் மோதகத்தை வைத்து கொழுக்கட்டை தயாரிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் போன்றவற்றை ஒன்றாக கலந்து வேக வைத்து பிரமாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது, “ என்றார்.
“வழக்கமாக நாங்கள் மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தியின்போது 108 சிறிய கொழுக்கட்டைகள் செய்து கொடுத்து வருகின்றோம். பிள்ளையார் சதுர்த்தியின்போது மட்டும் பிரமாண்ட கொழுக்கட்டை செய்து கொடுக்கின்றோம். 50 கிலோ அரிசி மாவு, 60 கிலோ வெல்லம், 30 லிட்டர் நெய், துருவப்பட்ட தேங்காய் 6 கிலோ ஆகியவை பயன்படுத்தி கொழுக்கட்டை செய்யப்படுகிறது,” என்றும் கிரிஷ் தெரிவித்தார்.
மேலும் பேசிய கிரிஷ், “அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோயிலில் கொடுத்து விடுவோம். அதே போல வெல்லம், ஏலக்காய், தேங்காய் எல்லாவற்றையும் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து விடுவோம். அவர்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்,” என்றார்.
Must Read: 10 ஆப்பிளை விட 1 விளாம் பழம் சாப்பிடுவதே சிறந்தது…
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு பிரமாண்ட கொழுக்கட்டை தயாரிப்பது கொரோனா காலகட்டத்தில் மட்டும் தடைபட்டது. கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 60 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை தயாரித்து 30 கிலோ உச்சிப்பிள்ளையாருக்கும், 30 கிலோ மாணிக்க விநாயகருக்கும் படைக்கப்பட்டது.
இந்த ஆண்டும் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயில்களுக்கு 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டை இன்று படைக்கப்படுகிறது. விநாயகருக்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டை பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியாகிக்கப்படுகிறது. இதனால் உச்சி பிள்ளையார் கோயிலில் விநாயகர் சுதுர்த்தி விழா களைகட்டியுள்ளது
-ரமணி
#vinayagarchaturthi2023 #pillayarchaturthi2023 #kolukattai #modagam
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More