நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் கருங்குறுவை அரிசி உணவு


பாரம்பர்யம் மிக்க கருங்குறுவை 

எதிர்ப்பு சக்தி நிறைந்த கருங்குறுவை அரிசி 

கருங்குறுவை அரிசியில் உள்ள சத்துகள் 

கருங்குறுவை கஞ்சி செய்வது எப்படி?

தமிழர் உணவில் அரிசிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக பாரம்பர்ய நெல்ல்லில் இருந்துதயாரிக்கப்பட்ட அரிசி ரகங்களில் நிறைய சத்துகள் நிறைந்துள்ளன. பாரம்பர்ய நெல் வகைகளில் ஒன்று கருங்குறுவை. கருங்குறுவை அரிசியானது நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடியது. நமது பாரம்பரியமான சித்தமருத்துவத்தில் பல மருந்துகளின் மூலப்பொருளாக கருங்குறுவை பயன்படுத்தப்படுகிறது.  தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலத்தில்தான் அதிகம் பயிரிடப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயிகள் பலர் இந்த நெல்லை விளைவிக்கின்றனர். நெல் பயிரிட்டதில் இருந்து அறுவடைக்கு வர சராசரியாக நான்கு மாதங்கள் ஆகும். கருங்குறுவை நெல்லானது கருப்பாக இருக்கும். இதன் அரிசி சிவப்பாக இருக்கும்.  

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கருங்குறுவை அரிசியை உழவர் வ.சதீஸ் பயிரிட்டு அறுவடைசெய்துள்ளார். அவருடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

இதையும் படியுங்கள்: தேன்வில்வம் சாப்பிட்டால் 21 விதமான நன்மைகள்

“அறல் கழனி யில் விளைந்த கருங்குருவை அரிசி விற்பனைக்கு தயாராகிவுள்ளது., கருங்குருவை அறுவடை செஞ்சிட்டு இத unpolished அரைக்கலாமா. Semi polished அரைக்கலாமானு ஒரு கேள்வி மனசுல உளாவிக்கிட்டே இருந்துச்சு. 

உழவர் சதீஸ் வயலில் அறுவடைக்கு தயாராக கருங்குறுவை நெல்

தீட்டாத அரிசி அரைக்க ஆலை எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை “அதனால் என்னை போன்ற கடைக்கோடி விவசாயி 100-150கி.மீ தொலைவில் உள்ள ஆலை இருக்கும் பகுதிக்கு நெல் ஏற்றி செல்ல வேண்டியிருந்தது! இதனால் போக்குவரத்து செலவு அதிகமானது

திட்டாத அரிசி சத்தானது என்றாலும் சாப்பிடுவது எளிதல்ல.. அவசரமாக வேலைக்கு செல்லும் நம் நகரத்து வாடிக்கையாளர்கள் இதை week end அரிசியாகவே பாவிக்கின்றனர்.. அல்லது இட்லி அரிசியாகவே 70% பயன்படுத்துகின்றனர்

இதனால் அரிசி விற்பனை 25 கி சிப்பமாக செல்லாமல் 2கி, 5 கி என்று சில்லறை விற்பனையே பெரும்பாலும் நடக்கின்றது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என்றால் 2 மாசத்துல விக்க முயற்ச்சிக்கலாம். 

பாதி தீட்டிய அரிசி சாப்பிட கொஞ்சம் எளிமை அதன் மகிமை. சாதாரண அரிசி ஆலையிலேயே அரைக்கலாம் 20-30 கி.மீ சுற்றளவிற்குள்ளாகவே.இதனால் தான் இந்த முறை நம் கருங்குருவை அரிசியை semi polished அரிசியாக அரைத்துள்ளோம்” என்றார். 

கருங்குறுவை அரிசியில் இருக்கும் சத்துக்கள் 

இரும்புச்சத்து(IRON), கால்சியம் (calcium), வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ(VITAMIN A,B,B12,K),  மாவுச்சத்து(CARBOHYDRATE), புரதச் சத்தும்(PROTEIN)  நிரம்பியுள்ளன. பாரம்பரிய பழக்கமாக நம் முன்னோர்கள் காலத்தில் வைத்தியர்கள் மருந்தை கருங்குறுவை அரிசியுடன் சேர்த்து கொடுத்தனர் இப்படி கொடுப்பதன் மூலம்மருந்தின் பலன் முழுமையாக கிடைக்கும் 

இதையும் படியுங்கள்: கற்றாழை பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா?


கருங்குறுவை அரிசியின் மருத்துவ பயன்கள் (HEALTH BENEFITS):

 1. மலச்சிக்கலைப் போக்கும்.

 2. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

 3. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

 4. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கும் .

 5. இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

 6. பித்தம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும்.

 7. தேகம் செழுமையுடன் இருக்க செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருங்குறுவை அரிசி

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்த்து உண்ணும்போது அதன் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள். கருங்குறுவை அரிசி கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை திரும்பப்பெற முடியும். 

உணவுப் பயன்பாடு 

கருங்குறுவை அரிசியை பெரும்பாலும் இட்லி, தோசை தயாரிக்கவே மக்கள் பயன்படுத்துகின்றனர். இது தவிர கருங்குறுவை அரிசியில் கஞ்சி தயாரித்தும் குடிக்கலாம். 

கஞ்சி தயாரிப்பது எப்படி?

கருங்குறுவை அரிசியை தனியாக கஞ்சி தயாரிப்பதை விடவும் கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி தயாரித்து அருந்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். கருப்பு உளுந்து சேர்ப்பதனால் நமக்கு ஏற்படும் மூட்டு வலி, கழுத்து வலி போன்றவற்றில்இருந்து விடுபடலாம். 

 என்னென்ன பொருட்கள் தேவை 

கருங்குறுவை அரிசி 1கப், கருப்பு உளுந்து அரை கப், நான்கு காய்ந்த மிளகாய், பூண்டு பத்து பல், ஜீரகம் அரை டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவியது 1 கப், கறிவேப்பில்லை, எண்ணைய், உப்பு மூன்றும் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். 

எப்படி செய்ய வேண்டும்?

கருங்குறுவை அரிசி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் அதனை அரை நாள் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பின்னர் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்தையும் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் இரண்டையும் ஒன்றாக போட வேண்டும். 

கருங்குறுவை அரியுடன் கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி தயாரிக்கலாம்

இத்துடன் பூண்டு, சீரகம், வெங்காயம், தேங்காய் துருவல், போதுமான அளவு உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். 6 விசில் வந்த உடன் இறக்கிவிட வேண்டும். கடையில் எண்ணைய் ஊற்றி, கறிவேப்பில்லை, கடுகு உளுந்து போட்டு தாளித்து இதனை வேக வைத்த கஞ்சியில் சேர்க்க வேண்டும். சூடான சுவையான கருங்குறுவை கருப்பு உளுந்து கஞ்சி தயாராகி விடும். கருங்குறுவை, கருப்பு உளுந்து இரண்டிலும் உள்ள சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கும். 

கருங்குறுவை அரிசி எங்கே கிடைக்கும்?

இயற்கை விவசாயம் மூலம் தயாரித்த கருங்குறுவை அரிசி தேவைப்படுவோருக்கு Organic shoppe pondicherryயில் கிடைக்கும். அவர்களை 9003699188 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகில் உள்ள கோட்டப்பூண்டியில் உள்ள அறல் கழனி விவசாயி உழவர் வ.சதிஸ்.,B.E (Civil) அவர்களிடம் கிடைக்கும. உழவர் சதீஸை 8940462759 என்ற மொபைல் எண்ணில் அழைத்து விவரங்களை அறியலாம். 

தகவல் உதவி; Organic shoppe pondicherry

கட்டுரை; ஆகேறன்

#KarunguruvaiRice  #OrganicRice #OrganicFarmer #BenefitsOfKarunguruvaiRice  #HealthBenefitsOfKarunguruvaiRice 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments