கற்றாழை பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா?
கற்றாழை பாயசம் எப்படி செய்வது?
கற்றாழையில் உள்ள சத்துகள்
கற்றாழை சாப்பிடுவதால் நன்மைகள்
கற்றாழை எங்கு கிடைக்கும்?
கற்றாழை பாயாசம் செய்முறை
“எங்கள் வீட்டில் அண்மையில் கற்றாழைப் பாயாசம் செய்தோம். கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு குழாய்த்தண்ணீரில் நன்றாகக் கழுவினேன். முன்னதாக பாசிப்பருப்பை லேசாக வறுத்தெடுத்து சூடு ஆறியதும் நீர் ஊற்றி வேக வைத்து தயாராக வைத்து விட்டேன். .
இதையும் படியுங்கள்:மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம்
இதற்கிடையே முந்திரி, திராட்சை போன்றவற்றை வறுத்து வைத்துக் கொண்டேன். வெல்லம் இருந்தால் சேர்க்கலாம். வெல்லம் இல்லையெனில் சர்க்கரையில் நீர் ஊற்றி நன்றாகக் காய்ச்சி அதில் வேகவைத்த பாசிப்பருப்பு, வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு கிளறும்போது கடைசியில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த கற்றாழைத்துண்டுகளைப் போட வேண்டும். ஓரளவு நீர் வற்றியதும் இறக்கினால் கற்றாழை பாயாசம் தயார்.
கற்றாழை உண்பதால் பலன்கள்
இது உடல் சூட்டைத் தணிப்பதுடன் மேகவெட்டை, பெண்களுக்கான மாதவிடாய்க்கோளாறு, ஆண் பெண் இருவருக்கும் சிறுநீர் கழிக்கும் இடங்களில் வரக்கூடிய எரிச்சல், வலி உள்ளிட்ட பல்வேறு நலக்குறைவுகளில் இருந்து பாதுகாக்கும்,” என்றார்.
கற்றாழையில் உள்ள சத்துகள்
கற்றாழையில் கால்சியம், தாமிரம், பொட்டாசியம்போன்ற தாது பொருட்கள் உள்ளன. குரோமியம், செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சத்துகளைப் பொறுத்தவரை கற்றாழையில் வைட்டமின் சி, ஈ, ஏ ஆகிய மூன்று சத்துகள் உள்ளன. இறைச்சி, முட்டை மீன் உணவுகளில் மட்டுமே அதிகம் இருக்கும் அமினோ அமிலங்கள் கற்றாழையில் அதிகம் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 15-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளன.
கற்றாழையில் உள்ள சத்துகள் காரணமாக நமது உடலில் ஜீரண சக்தியில் முக்கிய பங்கு வகிக்கும் குடல்களின் செயல்பாட்டில் உள்ளகுறைகளை சரி செய்ய முடியும்.
இதையும் படியுங்கள்:கலவைக் கீரை செய்யறது ரொம்ப ஈஸி….
சென்னை, வேலூர் போன்ற வெயில் நகரங்களில் வசிப்பவர்கள் உடல் சூட்டை தணிக்க கற்றாழை ஜூஸ் போன்றவற்றை அருந்தலாம். கற்றாழையில் உள்ள சத்துகள்பெண்களின் கருப்பை கோளாறுகளை சரி செய்யும், ஆண்களுக்கு விந்தணு குறைப்பாட்டை போக்கும் சகதி படைத்தது கற்றாழை.
எந்த கற்றாழை நல்லது
கற்றாழை என்றவுடன் சோற்றுக்கற்றாழை என்ற பெயர்தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆம் சோற்றுக்கற்றாழைதான் எல்லா இடத்திலும் கிடைக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதில்தான் ஏகப்பட்டசத்துகள் உள்ளன. சோற்றுக்கற்றாழையை வாங்கி உபயோகிப்பது நல்லது. கற்றாழையை உபயோகிக்கும் முன்பு பல முறை கழுவ வேண்டியது முக்கியம்.
எச்சரிக்கை அவசியம்
சர்க்கரை நோய், நீரழிவு நோய் போன்ற குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைக்குப் பின்னரே கற்றாழை சாப்பிட வேண்டும். சித்தமருத்துவர்கள் பரிந்துரைப்படி, பரிந்துரை செய்த அளவுகளில், பரிந்துரை செய்த முறைகளில் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். உரிய பரிந்துரை, உரிய பக்குவம் இல்லாமல் கற்றாழையை சாப்பிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உரிய எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கற்றாழை எங்கு கிடைக்கும்?
கற்றாழை இப்போது அமேசானிலேயே கிடைக்கிறது. Aloe Vera Leaf என்று ஆங்கிலத்தில் தேடினால், அமேசானிலேயே நீங்கள் வாங்க முடியும். சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள SGVM Cactus & Succulents 098846 75745 என்ற நிறுவனத்தில் கற்றாழை கிடைக்கிறது. சேலையூரில் உள்ள Cactus World 091766 00024 என்ற நிறுவனத்திலும் கற்றாழை கிடைக்கும்.
-ஆகேறன்
#KattralaiBenefits #HealthyKattralai #AloeVeraLeaf #AloeVeraBenefits #AloeVeraJuice
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments