அதிக சத்துகள் கொண்ட மீன் முட்டைகள்...


கேவியர் என்பது ஸ்டர்ஜன்(Sturgeon ) என்ற மீன் குடும்பத்தை சேர்ந்த மீன்களின் முட்டைகளாகும்(இவை மீனின் ஓவரி என்றும் அழைக்கப்படுகின்றன). இந்த மீன் முட்டை மிகவும் விலை உயர்ந்த கடல் உணவாகும். சிறியதாக மற்றும் முத்து போன்ற வடிவத்தில் இந்த முட்டைகள் இருக்கும். கருப்பு முதல் பச்சை வரை நிறங்களில் இருக்கும். 

கேவியர் சிற்றுண்டி, வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காக்டெய்ல்களையும் அலங்கரிக்கிறது. கேவியர் ஒரு ஆடம்பர உணவாகக் கருதப்படுகிறது, எனவே அவற்றை அடிக்கடி உண்பது சாத்தியமற்றது. ஆனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் கண்டிப்பாக உண்ண வேண்டும். கேவியர் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, 

தோல் வயதைக் குறைக்கிறது

கேவியர் முட்டை ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் இவற்றை உண்பதால் தோலுக்கு நல்லது. கேவியர் அடிபோனெக்டின், குளுக்கோஸைக் கட்டுப்படுத்தும் பிளாஸ்மா மற்றும் நமது வளர்சிதை மாற்ற விகிதங்களையும் கொண்டிருக்கலாம். அடிபொனெக்டின் உங்கள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. கேவியர் சாறு உங்கள் தோல் முதிர்வடைவதை தாமதப்படுத்தும். நமது சருமத்தை கட்டமைக்க இதில் உள்ள கொலாஜன் முக்கியமானது. 

கேவியர் மீன் முட்டை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கேவியரில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மூளையில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது, இதனால் உங்கள் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. அல்சைமர் நோயை எதிர்த்துப் போராட இந்த உணவு உங்களுக்கு உதவக்கூடும். மனச்சோர்வு உள்ளவர்கள் உடலில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் இல்லாததால், மன அழுத்தத்த பாதிப்புகள் அதிகமாகின்றன. எனவே மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு கேவியர் முட்டைகள் பல நன்மைகளை அளிக்கும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. கேவியர் இயற்கையாவே மன அழுத்தத்தைப் போக்கும் வல்லமை கொண்டது என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவும். 

ஆண்களுக்கு ஏற்றது

ஆண்களின் விந்தணுக்களில் டி.எச்.ஏ (டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம்) குறைந்த அளவில் இருந்தால், பெண்கள்  கருத்தரிக்காமல் இயலாது. இதனை போக்க கேவியர்  முட்டைகள் சாப்பிடலாம். இதில் DHA நிறைந்துள்ளது. இது விந்தணுவின் தரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.  ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 

ஊட்டச்சத்துகள்

கேவியர் ஒரு நல்ல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. புரதம், வைட்டமின் பி 12, செலினியம் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 அவசியம். டி.என்.ஏ மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது. கேவியரில் சிறிய அளவு வைட்டமின் ஏ, டி மற்றும் கால்சியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதய ஆரோக்கியம்

ஒமேகா -3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கு இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுவதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, கொழுப்பின் அளவை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகின்றன. நம் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றிணைந்து கட்டிகளை உருவாக்குவதை அனுமதிக்காததன் மூலம் ரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது.  

-பா.கனீஸ்வரி

#LuxuryDelicacyCaviar #HeathyCaviar #Caviar #FishEgg  

கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
 


Comments


View More

Leave a Comments