நீரிழிவு நோயாளிகள் எப்படி நோன்பும்விரதமும் இருக்க வேண்டும் தெரியுமா?


நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் நோன்பு/ விரதம் வைக்கலாமா? என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. நீரிழிவு குறைபாடு என்பது மாவுச்சத்து,புரதச்சத்து,கொழுப்புச்சத்து ஆகியவற்றை கிரகிப்பதில் ஏற்படும் பிரச்சனை என்று கொள்ளலாம்  அதிலும் மாவுச்சத்து எனும் CARBOHYDRATESஐ கிரகிப்பதில் மிகப்பெரும் குறைபாடு ஏற்படுகிறது. எனவே ஒருவர்  மாவுச்சத்து உணவை உண்ணும் போது ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் கூடும்ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடும் போது கணையம் (pancreas)"இன்சுலின்" எனும் ஹார்மோனை சுரக்கும்

Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…

நீரிழிவு நோயாளிகளில் இத்தகைய இன்சுலின் சுரப்பும் சரியாக இருக்காது(Insulin deficiency ).சுரந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யாது. ( Insulin Resistance). எனவே ரத்த க்ளூகோஸ் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்.இதைத்தான் "டயாபடிஸ்" என்கிறோம்

ஆரோக்கியமான நோம்பு உணவு

 

இதை சரி செய்யஇன்சுலினை சுரக்க வைக்க ( Secretagogues) அல்லது சுரக்கப்பட்ட இன்சுலினை முறையாக வேலை( Insulin sensitizers)  செய்ய வைக்க தேவையான மாத்திரைகள் வழங்கப்படும் கடந்த மூன்று மாதங்களாக ரத்த க்ளூகோஸ் அளவுகள் சராசரியான Hba1c 7 க்கு கீழும்கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சையில்  மாற்றங்கள் இல்லாமல்  இருந்தால்  தங்களின் மருத்துவரின் அறிவுரையின் படி நோன்பு நோற்பது குறித்து  முடிவெடுக்கலாம். Hba1c அளவுகள் 8 க்கு மேல் இருப்பின் உங்களுக்கு சராசரி ரத்த க்ளூகோஸ் அளவுகள் எப்போதும் 200க்கு மேல் இருக்கும் என்று பொருள் இது சரியான பராமரிப்பு அன்று.இத்தகையோர் நோன்பு வைப்பது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

Must Read: தேரிக்காட்டு முந்திரி, மலைமட்டி பாரம்பர்யத்துடன் இயற்கை விளை பொருட்கள்…

அதிலும் Hb1c 10க்கு மேல் இருப்பின் நோன்பு வைப்பது உடலுக்கு  தீமைகளை உருவாக்கலாம். இவர்கள் பெரும்பாலும் இன்சுலின் அல்லது இன்சுலினை ஒத்த பலமான மருந்துகளில் இருப்பார்கள். மேலும் டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள்  நோன்பு வைத்தல் ஆபத்தில் முடியலாம்.

நீரிழிவு நோயாளிகள் நோன்பு வைக்கும் போதுமாத்திரைகள் எடுக்கலாமா?

நீரிழிவிற்கு வழங்கப்படும் மாத்திரைகள் ரத்த க்ளூகோஸ் அளவுகளைக் குறைக்கும். இவற்றை HYPOGLYCEMIC DRUGS என்று அழைக்கிறோம். இத்தகைய மாத்திரைகளை காலை உணவான சஹருடன் எடுக்கக்கூடாது.எடுத்தால் மதிய நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் ஆபத்தான அளவில் குறைந்து ஹைப்போக்ளைசீமியா ஏற்படும் வாய்ப்பு உண்டு ஹைப்போக்ளைசீமியா குறித்து விகடன் மின்னிதழுக்கு நான் எழுதிய எனது இந்த பதிவையும் ஹைப்போகிளைசீமியா ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக்குறித்த பதிவையும் படிக்க இந்த வரிகளை கிளிக் செய்யுங்கள்.

எனவே நீரிழிவு  மாத்திரைகளை மாலை நோன்பு திறக்கும் போது உண்ணும் உணவுடன் எடுப்பதே சரியானது  நீரிழிவு நோயாளிகள் சஹர் உணவை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் ?

ஒரு கைப்பிடி கஞ்சி வடிகட்டப்பட்ட சோறு (75 கிராம் சோறு)

ஒரு கைப்பிடி காய்கறி ( 75 கிராம் )

ஒரு கைப்படி கீரை (75 கிராம்)

ஒரு கைப்பிடி மாமிசம் (75 கிராம்)

2 முட்டைகள்

150 மில்லி மோர்

1500 மில்லி தண்ணீர்

இது மாவுச்சத்து குறைவான உணவு இதன் மூலம் ரத்த சர்க்கரை ரொம்பவும் ஏறாது - ஆபத்தான அளவிலும் குறையாது என்று நம்புகிறேன்கட்டாயம் காலை சஹர் இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடக்கூடாது

நீரிழிவு நோயாளிகளின் இஃப்தார் எப்படி இருக்கலாம்?

200 கிராம் காய்கறிகள் போட்டு செய்த சூப் அதில் 10 கிராம் வெண்ணெய் கலந்துபட்டர் வெஜ் சூப் பருகி நோன்பை விடலாம் காளிபிளவர் ஹலிம் செய்து பருகலாம்.கூடவே கடற்பாசி ( இனிப்பு இல்லாமல் ) பருகலாம்/ உண்ணலாம்  முட்டை ஆம்லெட் உண்ணலாம்பேலியோ பனீர் வடை செய்து சாப்பிடலாம்.உடனே இரவு மாத்திரை போட்டு விட வேண்டும்.கட்டாயம் நோன்புக்கஞ்சி குடித்து தான் நோன்பை விட வேண்டும் என்று  இல்லை. மீண்டும் கூறுகிறேன் நான் கூறும் இந்த அறிவுரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு என்றே எழுதப்பட்டாலும் இதை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.நீரிழிவு நோயாளிகள்நோன்பு திறக்கபேரீச்சம் பழம் வேண்டாம் . அது சர்க்கரை அளவுகளை அதிகமாக ஏற்றும் இயல்புடயைது.டம்ளர் தண்ணீர் கொண்டு நோன்பு திறக்கலாம்.பேரீச்சம் பழம் எடுத்தே ஆக வேண்டும் என்றால் அரைப்பழம் அல்லது கால் பழம் எடுத்து நோன்பு விடுங்கள்

இரவு உணவாக 100 கிராம் மாமிசம் /மீன்,3 தோசைகள்,அல்லது 3 சப்பாத்திகள் அல்லது 3 இட்லி உண்ணலாம்,கூட ஒரு லிட்டர் தண்ணீர் பருகவும் நீரிழிவு நோயாளிகளும் சரி ஏனையோரும்  சரி கட்டாயம் இந்த நோன்பு மாதத்தில் இனிப்பு கலந்து பானங்கள் எண்ணெயில் பொறித்த உணவுகள் பேக்கரி பண்டங்கள் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக நோன்பு நோற்கலாம்நமது நோன்புகளை இறைவன் ஏற்பானாக உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்த நோன்புகளாக அவை அமையட்டும்

-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#RamzanFasting  #RamzanFastingForDiabetes #IftarFasting


Comments


View More

Leave a Comments