கரூரில் மூன்று நாள் சர்வதேச முருங்கை கண்காட்சி வரும் 4ம் தேதி தொடக்கம்…
கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் முருங்கை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. முருங்கை மதிப்புக்கூட்டு பொருட்களும் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இயற்கை வேளாண் விவசாயி சரோஜா குமார் போன்றோர் முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து முருங்கை மற்றும் முருங்கை மதிப்புக்கூட்டுப் பொருட்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகின்றனர்.
Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டின் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் அவ்வப்போது முருங்கை மதிப்புக்கூட்டு தொழில் பற்றி பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முருங்கைக்கு இருக்கும் சர்வதேச சந்தைவாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் கரூரில் வரும் 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டி தயாரிக்கப்பட்ட 27 வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழக மின்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் சிறு குறு தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்
Must Read: 12ம் தேதி காந்திக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை உரைக்கோவைகள்
முருங்கையை உற்பத்தி செய்யக்கூடிய முறைகள், இயந்திர உற்பத்தி முறைகளை காட்சிபடுத்துதல், ஏற்றுமதி செய்யும் முறைகள், இயற்கை வேளாண்மை அரங்குகள், முருங்கை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த வல்லுநர்களின் ஆலோசனைகள் ஆகியவையும் இடம் பெற உள்ளன.

இக்கண்காட்சியில் பிரேசில், ஜப்பான்,கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபனான், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருங்கை விவசாயிகள், இளம் தொழில் முனைவோர்கள், முருங்கை மேம்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.
கரூர் மாவட்ட நிர்வாகம், இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் இந்த சர்வதேச கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்; https://www.youtube.com/watch?v=ncFmsVOS0zc
#KarurMurungaiConference #InternationalMurungaiExpo #MurungaiExpo #InternationalMurungaiConference
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More