வானகம் நடத்தும் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி அக்டோபர் 7ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது


கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள வாகனம் அமைப்பின் சார்பில் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது.  .

இப் பயிற்சியில்  இயற்கை வழி வேளாண்மை, மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி, களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

மேலும், கால் நடை பராமரிப்பு, நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு, மரபு விளையாட்டு  ஆகியவை பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. .

Must Read: வெண்டைக்காய் முதல் வில்வப்பழம் வரை புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள், பழங்கள்

வானகம் கல்விக் குழுவினர் பயிற்சி அளிக்கின்றனர். வருகிற அக்டோபர் 7ம் தேதி காலை 9.00 மணிக்கு தொடங்கி அக்டோபர் 9ம் மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

3 நாள் பயிற்சி முகாம்

“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்  சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம். என்ற முகவரியில் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)  தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : 

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது.  முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்  முன்பதிவுக்கு  :  8668098492,  8668098495   9445879292  ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 

Must Read: எந்தெந்த நோய்க்கு பேலியோ உணவு முறை சரியானது?

பயிற்சியின் போது வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது. பாலித்தின் பைகள்,  சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும். 

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

 வானகம் குறித்த மேலும்‌ விவரங்களை : https://vanagam.org  என்ற இணையதளம் அல்லது  https://vanagam.page.link/app என்ற செயலியில் அறியலாம். 

#NaturalWayofLife  #VanagamTraining  #AgriTraining #OrcanicAgricultureTraining

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

 


Comments


View More

Leave a Comments