கருவளையம், தோல் அரிப்பு, படர்தாமரை, முகப்பருவுக்கு தீர்வு தரும் பச்சை மஞ்சள் சாறு…


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஏர் முனை என்ற விவசாய அமைப்பு இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உரிமையாளர் திருமூர்த்தி, இயற்கை வேளாண்மையில் வேளாண்பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி அந்த பொருட்கள் அனைத்தையும் தானே சந்தைப்படுத்தி வருகிறார். 

வேளாண் பொருட்களை மதிப்புகூட்டியும் சந்தைப்படுத்துகிறார். இதனால், அவரது வேளாண் முயற்சிகள் அவருக்கு மிகுந்த பலன்களை கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் அறம் சார்ந்த மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமூர்த்தி. 

Must Read:எளிய மருத்துவம் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சி….

அவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னுடைய மதிப்புக்கூட்டும் பொருள் தயாரிப்பு முயற்சிகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அவரது முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் எழுதியிருந்த  "பச்சை மஞ்சள் சாறு". என்ற மதிப்பு கூட்டல் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். 

பச்சை மஞ்சள் சாறு

பச்சை மஞ்சனா மஞ்சள் பச்சையாக இருக்கும்னு நினைக்க வேண்டாம்.அறுவடை முடிந்தவுடன் கிடைப்பதுதான் (விரலி மஞ்சள்) பச்சை மஞ்சள்னு சொல்வோம். மஞ்சளில் ஏகபட்ட டயட் வந்த பிறகு பச்சை மஞ்சள் என்பது மறுவி பசுமஞ்சள் ஆகிடுச்சு.சரி இந்த பச்சைமஞ்சள் சாறின் பயன்களை சொல்லிவிடுகிறேன்..

இப்போது உள்ள அவசர உலக வாழ்க்கையில் ஒருசிலருக்கு பெரும் பிரச்சனையா இருப்பது தோல் சம்ந்தபட்ட பிரச்சனைதான். அதிலும் நாற்பது வயதை கடந்தவங்களுக்கு மிகமிக முக்கியமான பிரச்சனை முகத்தில் வரும் "மங்கு" பிரச்சனைதான்.கண்ணிற்கு கீழேயோ,அல்லது மூக்கு பகுதியிலோ கருப்பாக இருப்பதைதான் மங்குனு சொல்கிறோம். இதற்காக எத்தனை வைத்தியம் பார்த்திருந்தாலும் நிரந்தரமான தீர்வு கிடைத்தானு கேட்டால், இல்லைனுதான் சொல்வேன்..

ஏன்னா கடந்த ஆறு மாதமா எனக்கும் இதே பிரச்சனை இருந்தது..சரி நம்ம பச்சை மஞ்சள் சாறு விசயத்திற்கு வருகிறேன்.அறுவடை முடிந்து கிடைக்கும் பச்சை மஞ்சளை நீர்விட்டு கழுவி சிறிது நேர ம் காயவச்சு அதை துண்டுதுண்டாக நறுக்கி துணியில் பிழிந்து அந்த சாற்றை எடுப்பதுதான் பச்சை மஞ்சள் சாறு ங்க..ஒன்றரை கிலோ பச்சை மஞ்சளை பிழிந்து எடுத்தால் 80 லிருந்து 90 மில்லி பச்சை மஞ்சள் சாறு கிடைக்கிறது..

#பயன்படுத்தும் #முறை..

இந்த சாறை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு  இரவு தூங்க போவதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவிவிட்டு மங்கு இருக்கிற இடத்தில் இந்த பச்சை மஞ்சள் சாறை போடுங்க.மின்விசிரி காற்றில் (Fan) போட்டால் இரண்டு அல்லது மூன்று முறை போட்டு லேசா தேய்த்துவிடுங்க..பிறகு அப்படியே உறங்கிவிட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் போதும். தொடர்ந்து பதினைந்து நாட்கள் இதை செய்து பாருங்க மங்கு மறைந்துவிடும்..

பச்சை மஞ்சள் சாறு

இதை நாங்க கடந்த மூன்று மாதமாக செய்து பார்த்து தெரிந்து கொண்டது..சரி இந்த பச்சைமஞ்சள் சாறு மங்கு மட்டும்தான் தீர்வானு கேட்டீங்கனா இல்லைங்க. கருவளையம், தோல்_அரிப்பு,வண்டுகடினு சொல்கிற படர்தாமரைக்கும், பருவுக்கு கூட இது ஓர் தீர்வு..

எனக்கும் விஷ செடியான பார்த்தீனிய செடி அருகில் போனாலோ கையில் தொட்டாலோ கை எல்லாம் அரிக்க ஆரம்பிக்கும். ரத்தம் வருகிற அளவுக்கு சொரிய வேண்டியது இருக்கும்.. நிறையா வைத்தியம் செய்து பார்த்தோம். தீர்வே கிடைக்கல. சரி நம்ம பச்சைமஞ்சளை சீவி அதன் மீது தேய்த்தேன்.. ஓரளவு பலன் கிடைத்தது. சீவி வைப்பதைவிட சாறு எடுத்து அந்த காயத்தின் மேல போட்டு பார்ப்போமேனு போட்டு பார்த்தேன்.. நான்கே நாளில் நல்ல பலன்ங்க. தினமும் இதை பயன்படுத்தும் போது பாட்டிலை திறந்து மூடிவிட்டு அதன் பிறகு பாட்டிலை நல்லா குலுக்கி இரண்டு அல்லது மூன்று சொட்டு பச்சை மஞ்சள் சாறை பயன்படுத்துங்க. காரணம் மூடியே வைக்கும் போது உள்ளே கேஸ்  உருவாகிறது. இதை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்..(தயவுசெய்து பிரிஜ்ல் வைக்காதீங்க) ஒரு மாதம் ஆகும் போது மஞ்சள் சாறு மணம் மாறி கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வரும்..அது ஒன்னும் பிரச்சனையில்லைங்க.

Must Read:கோவை மாவட்டத்தின் கறிசோறும், விரதமும்

நம்ம கிட்ட குளியல் சோப்பு வாங்குபவர்கள் பெரும்பாலானோர்கேட்பது "மங்கு போக உங்களிடம் சோப்பு இருக்கா"னுதான். இப்பதான் அதற்கு ஒரு தீர்வே கிடைச்சு இருக்குங்க.. முடிஞ்சவங்க தயாரித்து பயன்படுத்தி பாருங்க.. தயாரிக்க வாய்ப்பு இல்லாதவங்க கீழே எனது வாட்ஸ்ப் லிங்கை கொடுக்கிறேன்  எங்க மஞ்சளில் மஞ்சள்தூள், பசுமஞ்சள்தூள், மிளகு மஞ்சள்தூள், பசுமஞ்சள் மால்ட், பசுமஞ்சள் ஊறுகாய், கிழங்கு மஞ்சள் குங்குமம்,பூசுமஞ்சள்தூள், மஞ்சள் குளியல் சோப், மஞ்சள் ஹேர் டை (ஜுன் மாதத்திலிருந்தே கிடைக்கும்)இப்படி இதுவரை 9 பொருட்களை மதிப்புக்கூட்டபட்ட பொருளாக மாற்றி நேரடி சந்தைபடுத்துகிறோம்.

அந்த வரிசையில் 10ஆவது பொருளா "பச்சை மஞ்சள் சாறும் சேர்ந்திருக்கிறது. இதனால எங்க உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைத்தாலும்நம்ம விளைபொருளை வாங்கி பயன்படுத்தி அதனோட பலனை அவர்கள் சொல்லும் போது எங்களுக்கு கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கு பாருங்க, தினம் கோடி ரூபாய் சம்பாத்திபவனுக்கும்கூட கிடைக்காதுங்க..ஏர் முனையின் மற்ற மதிப்புக்கூட்டபட்ட பொருளை பற்றி தெரிந்துகொள்ள  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்க. https://wa.me/c/918903469996   ஏர் முனை youtube channel link https://youtube.com/channel/UCQoRUbuZbHTDIirfmB90t3A

#RawTurmericExtract  #BenefitsOfTurmeric   #RawTurmericExtractSkinCare

 


Comments


View More

Leave a Comments