தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Also Read: ’எகிப்து நாட்டின் புதுமையான டாப் டக்கர் ’டக்கா மசாலா எப்படி செய்வது தெரியுமா?
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
சோற்றுக் கற்றாழை பயிற்சி முகாம்
விவசாயி,- தொழில் முனைவோர், -நுகர்வோர் ஆகியோர் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையிலான விவசாயிகளின் வருவாய்க்கும் மக்களின் நலவாழ்விற்குமான விவசாயிகள் சந்திப்பு வரும் 14.12..2021 செவ்வாய் கிழமை அன்று நடைபெற உள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாம், அறிவுத்தோட்டம், காளாம்பட்டு, வேலூர் மாவட்டம் என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

முப்பது வருடம் அனுபவம் கொண்ட இந்தியா முழுவதும் வேளாண் துறையில் பல்வேறு தொடர்புகளைக் கொண்ட அலோவெரா அய்யா இராம.சண்முகம் அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்.
Also Read: உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் மஞ்சள் பூசணியை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்...
தினசரி உணவு, உடல் தூய்மை, அழகு, ஆரோக்கியம் உள்ளடங்கிய - வேளாண்மை, தொழில், வணிக வாய்ப்புக்கள் செய்முறை விளக்கங்கள் & பயிற்சிகள் குறித்து திரு அ.சீனிவாசன், அசோக் செடிகள் பண்ணை, காந்திநகர்,வேலூர் பயிற்சி அளிக்கிறார்.
அனுமதி இலவசம். பதிவு அவசியம். பதிவு இன்றி அனுமதியில்லை. 10.12.2021 வரை மட்டும் முன்பதிவு செய்யப்படும். முன்பதிவு & தொடர்புக்கு : திரு.கு.செந்தமிழ் செல்வன், 9443032436
#AgriEvents #OrganicTraining #NaturalLife

Comments
View More