
முருங்கை விதை, முருங்கை பொடி, முருங்கை எண்ணைய்… முழுமையான பலன்களை தரும் முருங்கை
முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்துமே உணவுக்காக பயன்படக் கூடிய ஒன்று. இதன் காரணமாக தேவை அதிகரித்து இன்றைக்கு முருங்கை மட்டுமே பயிரிட்டு பலர் லாபம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து முருங்கை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி அதிக அளவு நடைபெற்று வருகிறது.உலகின் முருங்கை உற்பத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 25 விழுக்காடு உற்பத்தியாகிறது.
உள்நாட்டிலும் முருங்கை பவுடர், முருங்கை எண்ணைய் என விதம்விதமான பெயர்களில் முருங்கையை மதிப்பு கூட்டி உப பொருட்களாக தயாரிக்கின்றனர். குறிப்பாக கரூரை சேர்ந்த சரோஜோ குமார் என்ற இயற்கை பெண் விவசாயி முருங்கையின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து பல தகவல்களை குறிப்பிடுகிறார். உலகம் முழுவதும் தேவை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் அந்த அளவுக்கு முருங்கையின் மருத்துவ பலன்களும் ஏராளமாக உள்ளது என்பதுதான்.
Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…
காய்ந்து போன முருங்கை காயை பலர் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், அதிலும் அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. காய்ந்த முருங்கைக்காயில் உள்ள விதைகளை எடுத்து அதனை நட்டு வைத்தால் முருங்கை கன்றாக வளரும். முருங்கை கன்றுகளை குறைந்தது தலா 10 ரூபாய்க்கு கூட விற்கலாம். ஒரு காய்ந்த முருங்கைக்காயில் இருந்து 10க்கும் மேற்பட்ட விதைகள் கிடைக்கும்.
இது தவிர முருங்கை விதையை உடைத்தால் உள்ளே பருப்பு போல பொருள் கிடைக்கும். முருங்கை பருப்பில் இருந்து எண்ணைய் ஆட்டலாம். மரச்செக்கில் எண்ணை ஆட்டி முருங்கை எண்ணை என்ற பெயரில் முருங்கை விதை எண்ணெயில் வைட்டமின் சி, இ ஆகியவை உள்ளன. முருங்கை எண்ணையை தலைமுடியில் தேய்க்கும் போது முடிகளை வலுவாக்க செய்கிறது.
பல்வேறு அழகு பொருட்களிலும் முருங்கை எண்ணைய் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை எண்ணையை உடலில் தேய்பதன் மூலம் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பு கிடைக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் முருங்கை எண்ணையை முக்கிய மூலிகை மூலப்பொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன .
Must Read: திருநெல்வேலி கை சுத்து முறுக்கு… ஒரு நினைவலை..
முருங்கை எண்ணைய் என்று அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட்டில் போட்டு பார்த்தால் 100 மில்லி முருங்கை எண்ணைய் குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கு விற்கிறார்கள். 250 மில்லி 1000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. எனவே முருங்கை எண்ணைய் விற்பனை நல்ல பலன்களைக் கொடுக்கும். முருங்கை எண்ணைய் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. தொழிற்சாலை இயந்திரங்களில் மசகு எண்ணையாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. லூப்ரிகண்ட் ஆயிலாகவும் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை காய்தானே காய்ந்து போனதுதானே என்று நினைக்காதீர்கள். அதிலும் அற்புதமான வாய்ப்புகள் உள்ளன.
காய்ந்து போன முருங்கை காயில் இருந்து விதைகளை எடுத்த பின்னர், முருங்கை சக்கையை நீங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக க் கொடுக்கலாம். அந்த சக்கையில் இருக்கும் சத்துகள் கால்நடைகளுக்கு வலுவூட்டும். எனவே, முருங்கைக்காயில் எதுவுமே வீணானது என்பது இல்லை.
-ஆகேறன்
#MurungaiOil #MurungaiSeed #MurungaiBenefits
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments