பிஷ் அண்ட் சிப்ஸ் : மீன் பஜ்ஜி தேசிய உணவான கதை


ஆஸ்திரேலியா பயணங்களின் போது தான் இந்த உணவைக் குறித்து முதல் முதலில் நான் அறிந்தேன். Fish and chips என்றால் நம்மூர் பஜ்ஜி போல் ஒரு பெரிய முட்கள் இல்லா மீனின் துண்டை பஜ்ஜிபோலவே பொறிக்கிறார்கள்  அத்துடன் பொறித்த உருளைக்கிழங்கு துண்டுகள்(battered deep-fried fish with deep-fried chipped (slab-cut) potatoes.). இத்துடன் ஒரு எலுமிச்சை கொஞ்சம் பிரஞ்சு சாஸ் அல்லது தக்காளி சாஸ். நம்மூர் உணவுகளுடன் ஒப்பிடும் போது பெரிய ருசி எல்லாம் இல்லை 

Must Read: மரபீனி மாற்றக் கடுகு - உணவும் உழவும் உணர்வும்-பாமயன்

ஆனால் சாப்பிட்ட போது எனக்கு எவ்வித தொந்தரவும் இல்லை. ஒகே ஆனால் மெல்ல மெல்லப் பல கடைகளில் மாறி மாறி இதைச் சாப்பிட்ட போது இதில் பலவித தயாரிப்பு முறைகள் இருப்பதை அறிந்து கொண்டேன். பெரிய உணவுத் தொழிற்சாலைகளின் பர்கர்களைவிடவும் இது நல்ல, ஆரோக்கியமான, உடனடியாக தயாரிக்கும் உணவு என்பதை மட்டும் அறிந்து கொண்டேன்.

இந்த லண்டன் பயணத்திலும் பிஷ் அண்ட் சிப்ஸ் என்னை வரவேற்றது. இது ஆஸ்திரேலியா, பிரிட்டனில் தேசிய உணவாக உள்ளது. தேசிய உணவாக இந்த உணவு அறிவிக்கப்பட்ட போதிலும் இது அந்த நாடுகளில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தான் புழக்கத்தில் வந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கு பிரிட்டனுக்குள் நுழைகிறது, அவித்த உருளைக்கிழங்குகள் (Chipped Potato) தான் அங்குள்ள மேட்டுக்குடியினரின் விருப்ப உணவாக இருக்கிறது. 

பிரிட்டிஷ் தேசிய உணவு

நாம் அரிசியை உட்கொள்வது போல் அவர்கள் உருளையை உண்ணுகிறார்கள். அந்த உருளைப் பயன்பாட்டை அப்படியே ஐரோப்பா, ரஷ்யா தொடங்கி வட இந்தியா வரை நீங்கள் கவனிக்கலாம். வட இந்தியாவில் உருளைக்கிழங்கு இரண்டு நாட்கள் கிடைக்கவில்லை எனில் பெரும் கலவரமே வெடித்து விடும். அந்த அளவிற்கு உலகின் பல நாடுகளில் உருளைக்கிழங்கு என்பது அவர்களின் தேசிய உரிமைகளில் மறுக்க முடியாத ஒன்று. 

1800களில் பெரும் கூட்டமாக அகதிகள் ஐரோப்பா முழுவதும் இருந்து பிரிட்டன் நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக லண்டனுக்குள் நுழையும் போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிய அகதிகள் பெரும் எண்ணிக்கையில் குடியேறுகிறார்கள், இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் யூதர்கள். இந்த யூத அகதிகள் தான் இந்த உணவுகளைச் செய்து விற்பனை செய்கிறார்கள், தங்களின் வீட்டு ஜன்னல் வழியே அல்லது வீட்டின் முன் அறையில் இந்த உணவுகளைப் பொறித்து விற்பனை செய்கிறார்கள். லண்டன் ஏழைகளின் உணவாக பிஷ் அண்ட் சிப்ஸ் மாறுகிறது.   

1839 சார்லஸ் டிக்கன்ஸ் தனது ஆலிவர் ட்விஸ்ட்(Oliver Twist). நாவலில் ஒரு மீன் பொறிக்கும் கடையை குறீப்பிடுவார் என்பது உங்கள் நினைவுக்கு வந்தால், ஆம் அது ஒரு பிஷ் அண்ட் சிப்ஸ் கடையே தான்.  தொழில் புரட்சியின் காலத்தில் வேகவேகமா எழுந்து தொழிற்சாலைகளின் அடிமைகளாகக் கூலி வேலை செய்து கிடக்கும் மனிதர்கள் அவர்களின் குடும்பத்தார் என அனைவருக்கும் இதுவே முதன்மை உணவாக மாறுகிறது. நாளிதழ்களின் தாளில் இது மடித்துக் கொடுக்கப்படுகிறது. அப்படியே சுருட்டிக் கொண்டு வீதியில் நின்று தின்றபடி அல்லது பாதி சாப்பிட்டு பாதியை வேலை நேரத்தில் உண்ண எடுத்துச் செல்ல ஏதுவாக இந்த உணவு இருந்தது.

அவித்த உணவு தான் பிடிட்டிஷாரின் உணவு, பொறித்த உணவு என்பது ஏழைகளில் தெருவோர உணவு. ஏழைகளின் தெருவோர உணவாக இருந்து பிஷ் அண்ட் சிப்ஸ் மெல்ல மெல்ல மேட்டுக்குடியினரையும் அரண்மனைகளையும் ரகசியமாக எட்டிப்பார்க்கிறது. 

Must Read:தூத்துக்குடி ஓலை புட்டு உணவகம்… இலங்கை தமிழ் அகதிகள் நடத்தும் பாரம்பர்ய உணவகம்

ஆக ஆங்கிலேயர்களின் தேசிய உணவு என்பது ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய அகதிகள் கொடுத்த கொடையாகவே திகழ்கிறது. நான் லண்டன் ஐ-க்கு அருகில் ஒரு கடைக்குச் சென்று பிஷ் அண்ட் சிப்ஸ் ஆர்டர் கொடுத்த போது அங்கே அவர்கள் பெருமிதமாக “The Spanish and Portugese gave British their best food, Natioal food" என்று கடை நீளத்திற்கே ஒரு பதாகை வைத்திருந்தார்கள்.

இது ஒரு புறம் இருக்க இன்று வரை இந்த உருளைக்கிழங்கை  முதல் முதலில் பொறித்தது யார் என்கிற பட்டிமன்றம் பிரஞ்சு நாட்டவருக்கும் பெல்ஜியம் நாட்டவருக்கும் நடுவில் இரண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது ”which one of the nations decided to fry potatoes to create the glorious chip.French or Belgians??

அடுத்த ஆண்டு நான் பிரான்சுக்கும் பெல்ஜியத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன், நான் இந்த நாடுகளுக்குச் சென்று திரும்பும் போது இந்த வரலாற்றுப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் 

-அ.முத்துக்கிருஷ்ணன்

#FishAndChips  #UKFoods  #NationalFood

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments