தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். 

Also Read: உயர் ரத்த அழுத்த ஆபத்தை ஏற்படுத்தும் உடல் எடையை குறைப்பது எப்படி?

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

மானாவாரி பயிர்களுக்கான கருத்தரங்கம் & கண்காட்சி 

கோவையில் வானகம் அமைப்பின் சார்பில் வரும் 28.11.2021 ஞாயிறு அன்று காலை 9:30 -மணி முதல்  மாலை 04:00 மணிவரை மானாவாரி பயிர்களுக்கான கருத்தரங்கம் & கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மானாவாரி பயிர்கள் சாகுபடி வல்லுநர் (விதைப்பு முதல் அறுவடை வரை) திரு மருதையப்பன், சிறுதானிய மற்றும் உணவு பதம் செய் ஆராய்ச்சியாளர் முனைவர் திரு.சு.கணேசன் B.E(Ag), M.E(Ag),Ph.D.அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப ஆய்வாளர்.ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.  

மானாவரி பயிர்கள் குறித்த கருத்தரங்கம்மானாவாரி பயிர்களின் விதைகள் & விளைபொருட்கள் கண்காட்சி நடைபெறும்.  மானாவாரியாக விளைந்த தங்களின் உற்பத்தி & மதிப்புகூட்டு பொருட்களை காட்சிப் படுத்தவிரும்பும் உழவர்கள் 95666 65654 என்ற எண்ணில் அழைத்து விளக்கம் பெறலாம்.  

Also Read: பூசணி அல்வா செய்வது எப்படி?

மதிய உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்ள நன்கொடை: ரூ. 300/- செலுத்த வேண்டும். நிகழ்வில் பங்கேற்க 8489750624 , 9600873444 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு;  செஞ்சோலை, இயற்கைவழி வேளாண் பண்ணை, கலங்கல் சாலை, சூலூர், கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். கூகுள் வழி வரைபடம்; https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

Comments


View More

Leave a Comments