சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா; அசத்தும் சுவையில் பாரம்பர்ய உணவுகள்…
சென்னையில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியின் முன்னெடுப்பில் சென்னை சங்கம ம் என்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பர்ய கலை நிகழ்வுகள் சென்னை மாநகரெங்கும் நடத்தப்பட்டன. பின்னர் சில அரசியல் சர்ச்சைகள் காரணமாக பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த நிகழ்வு கைவிடப்பட்டது.
Must Read:தி.நகர் வாணி மகால் கேப்பிட்டல் கிச்சன் உணவுகள் எப்படி இருக்கிறது தெரியுமா?
இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்ட திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை சங்கம ம் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் விழாவுடன் சேர்த்து சென்னை சங்கம ம் நம்ம ஊரு திருவிழா கடந்த 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி வரை சென்னையில் தீவுதிடல், நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயர் நகர் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
நம்ம ஊரு திருவிழாவின் ஒரு கட்டமாக பாரம்பர்ய உணவு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. உணவுத்திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள் மற்றும் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன.

18 இடங்களிலும் உணவுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. "எங்களிடம் பல இனிப்பு தின்பண்டங்கள், தோசை மற்றும் உணவுகள் உள்ளன. கேழ்வரகு, தினை, சாமை, கம்பு, சோளம், போன்றவற்றில் செய்யப்பட்ட உணவுகள் உள்ளன. பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, மற்றும் மூங்கி அரிசி ஆகியவற்றில் சமைக்கப்பட்ட உணவுகளும் அடங்கும், ”என்று லட்சுமி கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளர் மாதம்பட்டி நாகராஜ் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மெட்ரோ நகரங்களில் நடைபெறும் இது போன்ற பாரம்பரிய உணவுகள் கொண்ட திருவிழாக்கள் மக்களை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார். "மக்கள் தினை உள்ளிட்ட சிறுதானிய உணவுகளில் செய்யப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கினால்,அவற்றின் தேவையை அதிகரித்து, விவசாயிகள் அதனை விளைவிக்க உதவியாக இருக்கும்" என்றும் மேலும் கூறினார்.
Must Read: சின்ன மெஸ். பெரிய மனஸ்…எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவ பகிர்வு…
தூத்துக்குடி மக்ரூன்ஸ், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, வர்க்கி, மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி, மக்கன் பேடா, ரிப்பன் பக்கோடா, அறுசுவை அதிரசம் போன்றவற்றையும் மக்கள் ருசிக்கலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ள ஸ்டால்களில் இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
“மக்ரூன் எனும் திண்பண்டம் போர்த்துகீசியர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இலங்கை வழியாக வந்ததாக கூறப்படுகிறது. துறைமுக நகரம் என்பதால் தூத்துக்குடியில் பிரபலமடைந்தது. நாங்கள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தேவை குறைவாகவே உள்ளது. இது போன்ற பாரம்பர்ய விழாக்கள் மக்ரூன்களை பிரபலப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்,” என்று அபி மக்கரூன்ஸின் எம்டி எஸ்டி பொன்சீலன் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பேட்டியில் கூறினார்.
##TrationalFoods ##ChennaiSangamam #NammaOoruThiruvila #FoodFestival
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

Comments
View More