மருத்துவப்பிரிவுகளிடையே வரம்புகளைப் புரிந்து கொள்வோம்…
மாற்று மருத்துவம் என்கிற சொல்லாடல் Alternative medicine என்கிற எங்கள் துறையின் அலுவலக சொல்லாடலில் இருப்பது.இதில் இவர்கள் AYUSHல் உள்ள ஆயுர்வேதா, யோகா,யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமுறைகளையே Alternative medicine அதாவது மாற்று மருத்துவம் என்கின்றனர்.
மாற்று மருத்துவம் என்கிற சொல்லாடலில் கூட முரண் உள்ளது.ஒருவர் மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியை எடுத்துக்கொண்டு அதன்பிறகு மருத்துவமனைக்கு வந்தால் H/O taken native medicine என case sheetல எழுதுவோம்.அதாவது அவர் native medicine எடுத்தபிறகு எங்களிடம் வந்திருக்கார் என்பதை எழுதுவோம்.அடிபட்டு நுடவைத்தியசாலை சென்று கட்டுபோட்டுவிட்டு அதன்பிறகு எலும்பு மருத்துவரிடம் வந்தால் H/O native treatment present என எழுதுவோம்.

துறை ரீதியாகவே "Native" என்றும் "Alternative" என்றும் AYUSH மருத்துவமுறை அழைக்கப்படுவது இங்குள்ள முரண். மருத்துவத்துறையில் பழக்கத்தில் உள்ள "மாற்று மருத்துவம்" என்கிற சொல்லாடலையே நான் பயன்படுத்துகிறேன் இங்கும்.மருத்துவ துறையில் அலுவலகமொழியாக இதையே தினம் தினம் உபயோகிப்பதால் அதையே நானும் பயன்படுத்துகிறேன்.
Must Read: மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?
என் பெற்றோர் இருவருமே AYUSH மருத்துவ முறைகளை மட்டுமே பின்பற்றக்கூடியவர்கள்.அதனால் என் சிறுவயது முதல் இந்த மருத்துவமுறைகள் என் உடலோடு கலந்தன.நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது தான் என் நிலை.சளி பிடித்தால் உடனே ஆடாதொடை கஷாயமும்,தும்பை பூ ரசமும் வந்துவிடும்.குடித்தே ஆகவேண்டும்.இது என் வீட்டின் வழக்கம்.
மலசிக்கல் என்றால் பிரண்டை துவையல்,பேதி என்றால் மாதுளை பிஞ்சு கசாயம்,சோர்வாக இருந்தால் செம்பருத்தி கசாயம்,காய்ச்சல் என்றால் வேப்பம்பூ ரசம்,வில்வ இலை கசாயம்,கசப்பான வாய்க்கு ஏலக்காய் அல்லது கிராம்பு. தலை முடிக்கு சீயக்காய்,உடலுக்கு சோற்றுக் கற்றாழை, பாசிப்பருப்பு மாவு. வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது.
மஞ்சள் மற்றும் பச்சைக்கற்பூரம் கலந்த நீரைக்கொண்டு மட்டுமே வாரம் இருமுறை வீடு துடைப்பது. இவை அனைத்துமே எங்கள் வீட்டின் எழுதப்படாத ஒரு சட்டம்.இவற்றை பின்பற்றியே ஆகவேண்டும்.
அம்மாவின் இறப்புவரை(2020ஜனவரி) இதே நிலையே நீடித்தது.இப்ப தான் கொஞ்சம் மாறிக்கொண்டோம்,ஆனால் அப்பா இன்னும் மாறவில்லை,மாறவும் மாட்டார், அவரை மாற்றவும் முடியாது சிறுவயதில் விளையாட்டில் ஆர்வம் உடையவள் நான்.அப்படி விழுந்து அடிபட்டதா அல்லது sciatica பிரச்சனையா என தெரியாது.அது sciatica என பின்னாளில் உறுதிப்படுத்தினார்கள்.
பள்ளிக்காலம் தொட்டே நான் கால்வலியில் அவதிப்பட்டபோது ஒரு ஊசி கூட எனக்கு என் பெற்றோர் போடவில்லை.மாறாக "பிளிச்சல்" சிகிச்சை முறையை ஆயுர்வேத வைத்தியசாலையிலும், "வர்மா" சிகிச்சைமுறையை புதுக்கோட்டையில் ஒரு வர்மமருத்துவரிடமும் தான் கொடுத்தார்கள்.நான் அப்போது பள்ளிமாணவி. குன்றக்குடியில் இருந்து தினமும் carல என்னை புதுக்கோட்டை அழைத்துச்சென்று "வர்மா" சிகிச்சை கொடுத்தார்கள்.
என் அம்மா அப்பா செய்தது செய்வது சரியா? சரி தான்.இந்த வாழ்வியல்முறை நல்லதொரு நோய்எதிர்பாற்றலை எனக்கு அளித்து இருக்கிறது.அதை மறுக்க முடியாது. அதை நான் கொரோனா பேரிடர்காலத்தில் கண்டேன்.அம்மைபோட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோதும் கண்டேன்.
ஆனால் என்ன! அதில் உள்ள limitationsஐ என் பெற்றோர் ஏற்க மறுத்தார்கள்,இப்பவும் அப்பா மறுக்கிறார். அதன் limitationஐ அம்மா உணர்ந்து இருந்தால் நிச்சயம் அம்மாவை 57வயதில் புற்றுநோய்க்கு பறிகொடுத்து இருக்கமாட்டேன்.
மருத்துவம் என்பது மக்களுக்கானதாக இல்லாமல் அதாவது நோய் தீர்க்கும் தீர்வாக மட்டும் இல்லாது அது பொருளீட்டும் முக்கிய வணிகமாகி போவதாலேயே பல்வேறு குழப்பங்கள் இங்கு உள்ளன.மருத்துவம் என்பது அடிப்படை உரிமை.அது 100% அரசின் கைகளில் மட்டுமே இருந்தால் இத்துறையில் போட்டாபோட்டிகள் இருக்காது.
Modern medicine,Alternative medicine என்கிற போட்டாபோட்டி மட்டுமல்ல இதில் ஒரேபிரிவுக்குள்ளும் போட்டிநிலை தான் உள்ளது.அந்த காலத்தில் MBBS முடித்தவர்களுக்கும் இப்ப MBBS முடிப்பவர்களுக்குமே நிறைய வித்தியாசம் உள்ளது.பழைய மருத்துவர்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும் அவர்கள் அத்துணை துறைகளையும் விரல்நுனியில் வைத்து இருப்பார்கள்.அதே சமயம் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இன்று அந்த நிலை இல்லை. இன்று மருத்துவம் என்பது ஒரு மாபெரும் வணிகம்.இந்நிலையில் மற்றத்துறை சார்ந்த மருத்துவத்தை ஏற்பது என்றில்லை தன் துறையிலேயே ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையோடு தான் பெரும்பாலும் உள்ளனர். இந்த போட்டி மனப்பான்மை அதிகரிப்பதால்தான் ஊடகங்களில் மருத்துவ வழிமுறைகளை கூறுகிறோம் என்கிற பெயரில் பலரும் பலவாறு உளறிக்கொண்டு இருக்கின்றனர்.
ஷர்மிகாவின் நுங்கு பிரச்சனையும் இப்படி தான்.இங்கு தானே எல்லாமே வணிகமாச்சே.வியாபார நோக்கில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைதானே உள்ளது இங்கு. Not only every system,every doctor has their own limitations.அதை நாம் உணர வேண்டும்.
Must Read:சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…
எனக்கு இன்னொரு மருத்துவரிடம் opinion வாங்குவது என்பது கௌரவக்குறைவா நினைக்க கூடாது.இந்த case என் கைமீறி போகிடும் என நினைத்தால் அதை இன்னொரு senior மருத்துவர் கையில் handover செய்ய தயங்க கூடாது. அத்துறையில் கற்றறிந்த ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் மாறாக bridge course மாதிரி நுனிப்புல் மேய்பவரிடம் ஒப்படைக்கவும் கூடாது.

இதன் அடிப்படையில்தான் NMC ஆனது Pharmacy,Nursing,AYUSH முடித்த மருத்துவர்களுக்கு Bridge course வைத்து கிராமப்புறங்களுக்கு பணியமர்த்துவோம் என்றபோது அதை எதிர்த்தேன். Bridge course மூலம் என்னால் ஒரு ஆயுர்வேத சிகிச்சையை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்ள முடியாது,அதேபோல் ஆயுர்வேத மருத்துவரான என் தோழி செந்திஅரசி Senthiarasi Thamizhmani ஆறே மாதத்தில் மகப்பேறு மருத்துவத்தை கற்றுக்கொள்ள முடியாது.
நானும் செந்தியும் பள்ளி பருவம் முதல் நண்பர்கள்.இன்று அவர் ஒரு அரசு ஆயுர்வேதா மருத்துவர்.நான் அரசு மகப்பேறு மருத்துவர்.என்னால் அவர் துறையை மதிக்கவும் ஏற்கவும் முடியும்.அவரும் அதேபோல் என் துறையை மதிக்கிறார் ஏற்கிறார்.Because we know our limitations in our respective fields.அவரும் ஒருங்கிணைந்த மருத்துவமுறையின் மூலம் ஆட்டிசம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.அதில் நிறைய வெற்றியும் பெற்றுள்ளார்.
நீங்கள் வேறு ஒருவரிடம் சிகிச்சை எடுத்துவிட்டு பிறகு ஒரு மருத்துவரிடம் சென்றால் அந்த மருத்துவர் அவரின் புது நோயரான உங்களிடம் "அந்த மருத்துவர் கொடுத்த சிகிச்சை தவறு,அவர் தவறா சிகிச்சை அளித்து இருக்கார்" என இன்னொருவரை கைகாட்டும் மருத்துவர்களை நான் நிறைய அறிவேன். இவை அனைத்துமே போட்டியின் விளைவே.மருத்துவம் வணிகமயமானதன் விளைவே.
#allopathicmedicine #AYUSH #alternatemedicine

Comments
View More