#Worldobesityday2022 சப்பாத்தி உடல் எடையை குறைக்க உதவுமா?
சப்பாத்தியை ஆரோக்கியமான உணவாக்கலாம்
கோதுமை மாவுடன் பலதானிய மாவு கலக்கலாம்
வெண்ணெய், நெய் உபயோகிக்கக்கூடாது
உங்கள் சப்பாத்தியை ஆரோக்கியமான எடை குறைந்த உணவாக மாற்றுவதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் சாதாரண சப்பாத்தியை சரியான எடை இழப்பு உணவாக மாற்றியமைக்க முடியும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆரோக்கியமாக இருக்க உணவுத் திட்டத்தை வகுக்கும்போது, நம்மில் பெரும்பாலோர் சப்பாத்தி மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என்று நினைக்கின்றோம். இந்த உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது உடல் எடையை குறைக்க உதவும், ஆனால் அது உண்மையில் உங்களுக்கு உதவிகரமாக இருக்குமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
சப்பாத்தியை எடை இழப்பு உணவாக மாற்றுவது எப்படி?
முழு கோதுமையால் தயாரிக்கப்பட்ட மாவில் இருந்து சமைக்கப்படும் சப்பாத்திகளில் அரிசியை விட அதிக நார்சத்து உள்ளது. இது எடை இழப்புக்கு நல்லது, ஆனால் அதனை மிதமான அளவில்தான் உட்கொள்ள வேண்டும்.
Also Read:உடல் எடையை குறைக்கும் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியம்…
சராசரி தனிநபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 28-30 கிராம் நார்சத்து தேவைப்படுகிறது, இது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு போதுமானது. முழு கோதுமை மாவில் தயாரிக்கபட்ட ஒரு ரொட்டியில் சுமார் 0.4 கிராம் நார்சத்து உள்ளது,
இது உங்கள் உடலுக்கு போதுமான நார்ச்சத்தாக இருக்கும். இருப்பினும், நீங்கள் சிறிது எடையை குறைக்க திட்டமிட்டால், உங்கள் உணவில் நார்ச்சத்து உட்கொள்வது செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே எடையை குறைக்க உதவும்.
சமையல் முறையை மாற்றுவதன் மூலம் உங்கள் வழக்கமான முழு கோதுமை தானியத்தால் தயாரிக்கப்பட்ட ரொட்டியை நார்சத்து நிறைந்ததாக மாற்றலாம். ராகி, பஜ்ரா மற்றும் பிற தானியங்கள் போன்ற ஆரோக்கியமான மாவுகளை கோதுமை மாவுடன் சேர்ப்பதால், நார்ச்சத்து அதிகரித்து, உங்கள் வழக்கமான சப்பாத்தியை ஆரோக்கியமான எடை இழப்பு உணவாக மாற்ற முடியும்.
Also Read:உடலுக்கு நன்மை அளிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்
மேலும், முழு கோதுமை தானியத்தால் தயாரிக்கப்பட்ட மாவுடன் 1: 1 என்ற விகிதத்தில் பல்வகை தானியங்களின் மாவை கலப்பது உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.ஸ்டப்டு (stuffed )பராத்தாவை சாப்பிட விருப்பம் உள்ளவர்கள் அதனுடன் கேரட், முள்ளங்கி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற புதிய காய்கறிகளைச் சேர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வையும் உணவு உண்ட திருப்தியை அளிக்கும்.
எடை இழப்புக்கு சப்பாத்தி சாப்பிடுவது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
சப்பாத்தி நல்லது என்பது முற்றிலும் தவறான கருத்து. அரிசியின் கிளைசெமிக் குறியீடு கோதுமையை விட சற்றே அதிகமாக இருந்தாலும், சப்பாத்தியை விட அரிசி குறைவான கலோரிகளையும் அதிக திருப்தியையும் அளிக்கிறது,
முழு கோதுமையிலும் அதிக நார்ச்சத்து உள்ளது
அரிசியை கொதிக்க வைக்கும்போது அது விரிவடைந்து அளவு அதிகரிக்கும் என்பதால் நீங்கள் குறைவான அரிசியை உட்கொள்கிறீர்கள். கோதுமையில் அரிசியை விட சற்று அதிக அளவில் சில தாதுக்களைக் கொண்டுள்ளது மற்றும் முழு கோதுமையிலும் அதிக நார்ச்சத்து உள்ளது, ஆனால் கலோரிகள் மற்றும் எடை இழப்புக்கு அரிசியை அடிப்படையாக கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்ளும்போது அது எடையிழப்புக்கு நன்றாக உதவும்..
உங்கள் வழக்கமான சப்பாத்தி அல்லது ரொட்டியை எப்படி ஆரோக்கியமாக செய்யலாம்?
உங்கள் சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமாக இருக்க, ஓட்ஸ், பாதாம், தினை (ஜோவர்) அல்லது ராகி போன்ற ஆரோக்கியமான மாவுகளை கோதுமை மாவுடன் எப்போதும் கலக்கவும்.அவற்றை சரியான விகிதங்களில் கலக்க வேண்டும். வெண்ணெய், நெய் ஆகியவற்றை சப்பத்தாயுடன் உபயோகிக்கக் கூடாது. உங்கள் சப்பாத்தியில் கொழுப்பைக் குறைக்க விரும்பினால் அதில் பால் சார்ந்த கொழுப்புகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
Also Read:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள் சீத்தா பழம்...
பலதானிய மாவு அல்லது ராகி அல்லது நாச்னி போன்ற முழு தானிய மாவைப் பயன்படுத்துவது சப்பாத்திகளின் கலோரி உள்ளடக்கத்தை குறைக்க உதவும். பரதங்களுக்குப் பதிலாக சப்பாத்திக்குச் செல்லுங்கள், நீங்கள் ஒரு பராத்தாவுக்கு ஏங்கினால் ஆரோக்கியமான எண்ணையைக் கொண்டு சமைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கஙள். கடைசியாக ஒன்றை மனதில் கொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டசத்துகளின் அளவை கருத்தில் கொண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
-ரமணி
#Worldobesityday2022 #HowPrepareChappati #HealthyChappati #BenefitsOfChapati #சப்பாத்தியைவிடஅரிசிநல்லது.
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments