கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பபட்டவர்கள் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?
கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 4
கொரோனா தாக்கத்தால், கொரோனா சிகிச்சைக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக ஏற்பட உடல்நலக்குறைவுகளுக்கு என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இது இறுதி கட்டுரை.
சீரகதண்ணீரின் சிறப்புகள்
கொரோனா காரணமாக அதிக பாதிப்புகள் இல்லை, லேசாக நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்னை என்று சொல்பவர்கள் சீரக தண்ணீர் குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீ ஸ்பூன் சீரகம், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இதனால் ஜீரண சக்தி சீராகிறது. அசிடிட்டி ஆகாமல் பாதுகாக்கலாம். வாயு பிரச்னை இருக்காது.
அத்திப்பழம் மற்றும் கற்றாழை ஜூஸ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஜீரண சக்தியால் அவதிப்படுபவர்கள், தினமும் இரண்டு அத்தி பழம் எடுத்துக் கொள்ளலாம். கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் காரணமாக, உடல் தண்ணீர் சத்து இல்லாமல் வறண்ட நிலை ஏற்படும். அப்போது மோர் அல்லது தேங்காய் பாலில் கற்றாழை ஜூஸ் கலந்து குடிக்கலாம்.
இதனால் குடல் ஜீரண சக்தி சீராகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. புரோட்டின், கொழுப்பு நிறைந்த உணவுகளை ஜீரணிக்க உதவுகிறது. குடலில் ஜீரண சக்தியை சரியாக வைத்துக்கொள்ளும் பாக்டீரியா சேதம் அடையாமல் பாதுகாக்க மோர் அல்லது தேங்காய் பால் கலந்த கற்றாழை ஜூஸ் உதவும்.
வாழை பழம் உள்ளிட்ட பழங்கள்
பழங்கள் அதிக அளவுக்கு எடுத்துக் கொள்வது நல்லது . பெரிய நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் விட்டமின் சி இருப்பதால் அவற்றை உண்ணும்போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ளும்போது புளிப்பு அதிகமாக இருந்தால் அதிகமான அளவு தண்ணீர் சேர்த்து பருக வேண்டும்.
அனைத்து வகையான வாழைப்பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழங்களில் வைட்டமின் பி6, பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துகள் இருக்கின்றன. வாழைப்பழம் உண்பதால் வயிறு உபாதை உள்ளிட்ட வயிற்று வலிகள், வாயு பிரச்னைகள் ஏற்படாது. வயிற்று பிரச்னையால் மன அழுத்தமாக இருப்பவர்கள் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
சூரிய ஒளியின் மகிமை
இது தவிர தினமும் பத்து நிமிடம் சூரிய ஒளியில் நிற்பது நமது உடலுக்கு நன்மை பயக்கும். வைட்டமின் டி கிடைப்பது நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரே அறைக்குள் அல்லது வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு மன அழுத்தமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடாலம். சூரிய ஒளியில் நிற்பதற்கு முன்பு ஒரு டம்ப்ளர் தண்ணீர் குடித்து விட்டு 10 முதல் 15 நிமிடம் நிற்பது நல்லது. இருக்கவேண்டும். இயற்கையை நம்புங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.
(நிறைவடைந்தது)
இயற்கை மருத்துவர்; டாக்டர் தீபா சரவணன்
இந்த தொடரின் முந்தைய மூன்று பகுதிகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக் செய்யவும்
கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்-1
கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்-2
கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்-3
#DietsForcoronaSideeffects #FoodsForCoronaSideeffects #AfterCoronaFoods #HeathyFoodForCovid
Comments