குழந்தையின்மையை போக்கும் இந்த பழத்தை தவற விடாதீர்கள்


மாதுளையில் எந்த சத்துகள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு சத்துகள் நிறைந்த அற்புதமான இயற்கை தந்த கொடையாக மாதுளை பழம் திகழ்கிறது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாதுளையை சாப்பிட்டால் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் ஏற்படும். 

என்னென்ன சத்துகள் உள்ளன?

மாதுளையில் புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து, சர்க்கரை ஆகிய சத்துகள் உள்ளன. மாதுளத்தை பழச்சாறாக அருந்தினால், வைட்டமின் ஏ, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் கிடைக்கும். மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இரும்பு சத்து, வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற சத்துகளும் மாதுளையில் உள்ளன. 

கல்லீரல் பிரச்னை சரியாகும் 

மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு பிரச்னையை குறையும். கல்லீரல் பாதுகாப்புக்கு இன்றியமையாதது மாதுளை. மாதுளையில் நார்சத்து உள்ளதால், தேவைற்ற உடல் எடை குறையும். உடலை சீராக வைத்துக் கொள்ள விரும்புவர்கள் மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். 

மாதுளை பழத்தின் சத்துகளின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்

மாதுளம் பழ சாற்றில் உள்ள பைட்டோ வேதிப்பொருள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஆண்மை குறைவை சரி செய்கிறது. பழங்கால புராணங்களில் மாதுளை என்பது பாலுணர்வுக்கு உகந்த பழமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. 

மலட்டு தன்மையை போக்கும்

கொழுப்பை குறைத்து உடல் நலத்தை காக்க மாதுளை உதவுகிறது. ஆண், பெண் மலட்டுத்தன்மையைப் போக்க மாதுளை உதவுகிறது. மாதுளைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது. இன்றைக்கு பலர் குழந்தைப்பேறு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். காரணம் பல்வேறு சூழல்களால் ஆண்களது விந்தணுக்கள் சக்தியில்லாமல் இருப்பதே.  எனவே இப்படிப்பட்டவர்கள் ஏதேதோ சிகிச்சையை தேடி அலையாமல் மாதுளம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே நிறைய பலன் அடையலாம். 

இதையும் படியுங்கள்; ஆரோக்கியமான காலை உணவு குறித்து சைலேந்திரபாபுஐபிஎஸ் சொல்கிறார்...

பெண்களுக்கும் உகந்தது

பெண்களும் இந்த மாதுளையை சாப்பிட்டு வருவதனால் ஏதோ காரணத்தால் கரு உண்டாகாமல் தள்ளிப்போகும் பிரச்சினையை சரி செய்யும். இதேபோல் மாதுளம்பூவை தினமும் கசாயம் வைத்து குடித்து வந்தாலும் கருப்பையில்  உள்ள பிரச்சினைகள் நீங்கி குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது. 

மாதுளை,  புளிப்பு மாதுளை, பூமாதுளை என்று 3 வகை உள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உள்ளது. பொதுவாக இனிப்பாக உள்ள மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் சக்தி கிடைக்கும். பித்தத்தைப் போக்குவதோடு இருமலை நிறுத்தக்கூடியது. 

இதையும் படியுங்கள்;நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள் சீத்தா பழம்...


மேலும் பொதுவாக மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், காதுஅடைப்பு, மயக்கம், விக்கல், மந்தம், சூட்டால் வரக்கூடிய காய்ச்சல் போன்றவை சரியாகும். மாதுளம்பிஞ்சை நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சீதபேதி சரியாகும். இப்படி பல்வேறு நோய்களுக்கு மாதுளை நல்ல மருந்தாக உள்ளது. மாதுளையின் தோல் மற்றும் விதைப்பருப்புகளை உலர்த்தி பொடி செய்து  அரை ஸ்பூன் அளவு எடுத்து பால்  அல்லது தேனுடன் 5 முதல் 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  குடல்பூச்சிகள் ஒழியும்.

ஜீரண சக்தி சீராகும்

மாதுளை மற்றும் மாதுளை சாறு இரண்டும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மாதுளை சாப்பிடுவதால் எலும்பு பலம் ஏற்படும். வாதம் போன்றவற்றை தடுக்க முடியும். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.மாதுளையில் வைட்டமின் பி உள்ளதால் ஜீரண சக்தி சீராக உதவுகிறது. 

நம் உடலில் உள்ள கொழுப்பு சத்து, புரதம் போன்றவற்றை ஆற்றல் சக்தியாக மாற்ற மாதுளை உதவுகிறது. இதில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. மாதுளையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், தோல் புற்றுநோயை தடுக்கும் புற்றுநோயின் தீவிரத்தை குறைத்து உடல் நிலை ஆரோக்கியம் மேம்பட உதவும்.  இரண்டாம் வகை நீரழிவு நோயாளிகளுக்கு உதவும். இது தவிர மாதுளையானது இதயத்தை சுத்திகரிக்க உதவுகிறது. 

- எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின்  அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )

#FoodForHeath   #Pomegranate   #HelthTipsForfertility #PomegranateForfertility 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 


 

 

 


 


Comments


View More

Leave a Comments