தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
உணவுத்திருவிழாக்கள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Also Read: உடல் நஞ்சை தீர்க்கும் கரு ஊமத்தை மாதவிடாய் வயிற்று வலி தீர்க்கும் கல்யாண முருங்கை
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
நளன் உணவகம் நடத்தும் 12ஆம் ஆண்டு உயிர் காக்கும் உணவு திருவிழா
நளன் என்றால் உணவு சமைப்பதில் முதன்மையானவன், எல்லாச் சிறப்புகளிலும் முன்னோடி என்று பொருள். ஒரு விருந்தை நளபாகம் என்கிறோம். நாங்கள் அதையே ஏற்றுக்கொண்டதால், எங்கள் ஹோட்டலுக்கு “நளன்” (நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவு) என்று பெயரிட்டோம்.
இன்றைய உலகில், மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் 90% உணவினாலும், 10% சூழ்நிலையினாலும் ஏற்படுகின்றன. உணவையே மருந்தாக உட்கொள்வது என்ற கருத்து மறந்துவிட்டதால், தற்காலத்தில் மருந்தே உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதை மாற்றும் வகையில் நலன் ஹோட்டல் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை வழங்குகிறது.
Also Read: பரோட்டாவின் சுவையை உணரும் நாம் மைதாவின் தீமைகளையும் தெரிந்து கொள்வோம்
100% தூய்மையான மற்றும் உண்மையான மற்றும் அன்புடன் பரிமாறப்படும் முறையான சைவ உணவை நாங்கள் பின்பற்றுகிறோம். அதன் அம்சங்கள் பன்மடங்கு. மூலிகை சூப் வகைகள், விதவிதமான சாதம், விதவிதமான சாம்பார், மூலிகை ரசம், பக்க உணவுகள், துவையல், புட்டு, தோசை வகைகள் தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். நாங்கள் உண்மையான ஆர்கானிக் அரிசி உணவுகள், சோயா மோர், பலவிதமான குழம்பு, வாழைப்பூ வடை ஆகியவற்றையும் செய்கிறோம் மேலும் பல உணவுகள் நளன் ஹோட்டலில் கிடைக்கின்றன.
Also Read: திருச்சியில் முதலாவது தெரு உணவு மையம்…
நளனில் உள்ளத்தை சீராக்க சீரகம், மிதமான மசாலாவிற்கு மிளகு மற்றும் தூய நெய் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய், புளி, மசாலா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பால் பொருட்கள், காளான்கள், உடனடி நூடுல்ஸ், செயற்கை வண்ணங்கள், சுவை அதிகரிக்கும், இனிப்புகள், துரித உணவுகள் போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை.
நளன் உணவகத்தின் சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உயிர்காக்கும் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் இந்த உணவுத்திருவிழா நடைபெற்றது. பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 12 வது ஆண்டாக உணவுத்திருவிழா இந்த ஆண்டு தஞ்சையில் வரும் 30ம் தேதி மாலை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உணவுத்திருவிழாவில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம். உணவுத்திருவிழாவில், 100% தூய்மையான ஆரோக்கியம் நிறைந்த 200க்கும் மேற்பட்ட சித்த சைவ உணவுகள், பாரம்பரிய உணவுகள் சிறுதானிய உணவுகள், மூலிகை உணவுகள் விருந்தாக படைக்கப்பட உள்ளன.

இது தவிர உணவியல் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, உணவுப்பயன்பாட்டு முறைகள் பற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கு ஆலோசனை ஆகியவையும் வழங்கப்படும். கந்தசரஸ் மஹால், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் என்ற முகவரியில் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு உணவுத்திருவிழா தொடங்குகிறது. ஜனவரி இரண்டாம் தேதி இரவு 10 மணிக்கு நிறைவு பெறுகிறது. ஆரோக்கியமான உணவே மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எரிபொருள், நலன் ஹோட்டலில் சுவைத்து பயன் பெறுவோம்
மேலும் விவரங்களுக்கு 95009 54563, 95974 30336, 99404 23896 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இணையதள முகவரி; www.kyatham.org
மலர் சிகிச்சை அறிமுகம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வரும் ஜனவரி 02ம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. மலர் சிகிச்சை அறிமுகம் நடைபெறுகிறது. "எல்லாத்துக்கும் மனசு தான்பிரச்சனை சொல்றோம் ஆனால் அந்த மனசுல எங்க சிக்கல்னு சொல்றது தான் மலர் மருத்துவத்தின் சிறப்பாக இருக்கிறது. உடலின் நோய்களை எப்படி பிரிந்து அணுகிறோமோ அதே போல் மனதின் அணுகுமுறையை 38 விதமாக பிரித்து அதை எப்படி அணுக வேண்டும் என்று மலர் மருத்துவ ஆசான் எட்வாட்டு பாட்ச் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார் .
மனசுக்கும் பூவிற்கும் என்ன சம்பந்தம் மக்கள் அனைவருக்கும் எளிமையான மருத்துவம் சென்று சேரவும் , தனிமனிதனின் அணுகுமுறையை சீர்திருத்தினால் சமூகம் எவ்வாறு மாற்றம் அடையும் என்பதை தெளிவாகவும் , இதை கற்று கொண்டு மலர் சிகிச்சையாளர்கள் எவ்வாறு உதவலாம் எனவும் தெளிவாகவும் ,உறுதியாகவும் விளக்கியுள்ளார்.

நோய் வாய்பட்டாலும் ,அதை சீர்செய்தாலும் மனதின் பங்கு என்ன என்பதையும் தீர்க்கமாய் பகிர்ந்து இவ்வுலகிற்கு விட்டு சென்றுள்ளார் .அப்படி விட்டு சென்றதை நம் புரிதலுக்கும், அனுபவத்திலும் உட்பட்ட சிறந்தவையை பகிர்கின்றோம்.
Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
இந்த அறிமுக முகாமில் மலர் மருத்துவ சிகிச்சையாளர்,திரு.முத்து மணிகண்டன் மலர் மருத்துவம் குறித்து அறிமுகம் செய்கிறார். இதற்கான வகுப்பு கட்டணம் ரூ.500/- மட்டும் வசூலிக்கப்படுகிறது. 25 நபர்கள் மட்டும் அனுமதி என்பதால் முன்பதிவு அவசியம்:. உங்கள் பெயர், ஊர், அலைபேசி எண்ணை 9942118080 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும். இயல்வாகை குழந்தைகள் நூலகம்,கதித்தமலை சாலை,ஊத்துக்குளி. திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது.
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Comments
View More