வெள்ளரி, வெண்டைக்காயில் உள்ள உடல்நல பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
நாம் வாழும் சூழலில், நம் அருகாமையில் விளையும் காய்கறிகள், பூக்கும் பூக்கள் அனைத்துமே நமது வாழ்க்கையின் உடல்நலத்துக்கு உகந்தவைதான். இவையெல்லாம் மனிதர்களுக்கு இயற்கை அளித்த கொடைதான். எனவே, நம்மை சுற்றியுள்ள உணவுப் பொருட்கள், காய்கறிகள், மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டே நமது உடல்நலனை பேண முடியும். இயற்கை ஆர்வலர் திரு.மரியபெல்சின் அளிக்கும் சில மருத்துவ உணவு முறைகள் குறித்து பார்க்கலாம்.
வெள்ளரிக்காய்
உணவே மருந்து என்ற தத்துவத்துக்கு வெள்ளரிக்காய் சிறந்த எடுத்துக்காட்டு. 95 சதவீத நீர்ச்சத்துடன் சாதாரண நீரைவிட சத்து நிறைந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச் சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள சில வேதிப்பொருட்கள் புற்றுநோய்களைத் தடுக்கின்றன. வெள்ளரிச்சாறில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றை குணமாக்கி ஜீரணத்துக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும்.
Must Read: ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கும்…இட்லி பாட்டிக்கு பரிசாக கிடைத்த வீடு!..
இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் ஹார்மோன் வெள்ளரிக்காயில் உள்ளது. இதனால் சர்க்கரைநோயாளிகளுக்கு வெள்ளரி நல்லது. இதில் உள்ள "ஸ்டிரால்கள்' என்ற கூட்டுப்பொருள்கள் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலிக்கானும் கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வலி நீக்கும் பெருங்கொன்றை... நீரழிவை விரட்டும் சரக்கொன்றை!
கொன்றை மர வகையில் பெருங்கொன்றை என்ற மரம் சாலையோரங்களில் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும். மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும் இதன் இன்னொரு பெயர் இயல்வாகை. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த மரத்தின் பூர்வீகமாக இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா என்று சொல்கிறார்கள்.
கொன்றை மரங்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப்போலவே பெருங்கொன்றைக்கும் மருத்துவக் குணம் உண்டு. இதன் மரப்பட்டைகளை பல்பொடி செய்யப் பயன்படுத்தும் மருந்து சரக்குகளோடு சேர்க்கிறார்கள். பெருங்கொன்றையின் மரப்பட்டையை மட்டும்கூட பொடியாக்கி பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் பட்டையுடன் விளக்கெண்ணெய்விட்டு காய்ச்சி பிரசவ நேரத்தில் வரக்கூடிய வயிற்றுவலிக்கு பூசினால் வலியும், வேதனையும் குறையும். அதேபோல பெருங்கொன்றை மரத்தின் பட்டையுடன் கற்பூரம், யூகலிப்டஸ் இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி சுளுக்கு, வலி, வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் சரியாகும். அதேபோல் பெருங்கொன்றை பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து அதனுடன் தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் குடல் நோய்கள் சரியாகும்.

கொன்றை வகையில் சரக்கொன்றையும் மருத்துவக் குணம் நிறைந்தது. இதை சித்திரைப்பூ என்றும் சொல்வார்கள். கொன்றை வகையில் சிறுகொன்றை, செங்கொன்றை, மயில்கொன்றை என்று நிறைய வகைகள் உள்ளன. கொன்றை மலர் பற்றி நம்ம தமிழ் இலக்கியத்திலும் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது.
சரக்கொன்றையின் பூவையும் அதன் இளங்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம். பூவை கஷாயம் செய்தும் சாப்பிடலாம். ஆவாரம்பூவை எப்படியெல்லாம் சமைத்து பயன்படுத்துவோமே அதேபோல் இதையும் செய்து பயன்படுத்தலாம். சரக்கொன்றையை ஏதாவது ஒருவகையில் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோய் சரியாகும். வயிற்றுக்கோளாறு, மேகக்கோளாறுகளும் சரியாகும். சரக்கொன்றையின் காய் புளியம்பழம் போன்று நீளமாகக் காணப்படும். அதன் உள்ளே காணப்படும் சதைப்பற்றை வழக்கமான புளியைப்போன்று சமையலில் பயன்படுத்தி வந்தால் பித்தம் சரியாகும். குழந்தைகள், கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
வெண்டைக்காய் தண்ணீர்
ஓக்ரா வாட்டர்... வெண்டைக்காய் ஊறல் நீரைத்தான் அப்படி ஆங்கிலத்தில் சொல்கின்றனர். இரவில் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டினால் கிடைப்பதே ஓக்ரா வாட்டர் (நீர்). இதைக் குடிப்பதால் நிறைய பலன் கிடைக்கும். பொதுவாக, சளித் தொந்தரவில் தொடங்கி ஆஸ்துமா சுவாசக்கோளாறுகள் வரை சரியாகும். ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல், குடல் நோய்கள், குடல் புற்றுநோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவும். ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும். எலும்புகள் வலுப்பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்க உதவும் என்று நிறைய நல்ல விஷயங்களை உள்ளடக்கியது இந்த வெண்டைக்காய் ஊறல் நீர் எனப்படும் ஓக்ரா வாட்டர்.
Must Read: ரத்த ஓட்டம் சீராவது முதல் மூட்டுவலிக்கு தீர்வு வரை மண்குளியலின் மகத்துவம்
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை அனுபவங்களை வரும் 14-ந்தேதி நடைபெறவுள்ள பாரம்பரிய மருத்துவ பயிற்சியின்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். இதுபோன்ற ஒரு மருத்துவப் பயிற்சி தேவை என்று பலர் கேட்டிருந்தார்கள். இன்றைக்கு உடல்நலம் குறித்த அக்கறை குறைவாக இருக்கிறது. பலர் தவறான உணவுமுறைகளை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு என்னாலான ஆலோசனைகளை சொல்லி வருகிறேன். முழுமையாக தெரிந்துகொள்ள பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டுமென்று பலர் கேட்டுக்கொண்டதால் ஏற்பாடு செய்தேன். வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More