தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

கும்பகோணத்தில் மூன்றாவது மாபெரும் விவசாயக் கண்காட்சி

நாம்  விவசாயத்தில் பல விசயங்களை அறிந்து வைத்து கொண்டு வேளாண்மை செய்து வருகிறோம். ஆனால், நாம் இன்னும் அறிந்திட பல விசயங்கள் உள்ளன. அதிலும், குறிப்பாக விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

Also Read: பூசணி அல்வா செய்வது எப்படி?

மேலும், விவசாயத்தில் உள்ள நவீன கண்டுபிடிப்பு கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை சார்ந்த விசயங்களை நாம் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கும்பகோணம் நகரில் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாபெரும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் நவம்பர் 19வெள்ளி, 20 சனி, 21 ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

கும்பகோணத்தில் மூன்றாவது விவசாய கண்காட்சி

SET திருமண மண்டபம், பஸ்நிலையம் எதிரில்., கும்பகோணம் என்ற முகவரியில் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி குறித்த விவரங்களுக்கு 9566712939, 8610744313, 9944292020 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். 

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்

இந்த கண்காட்சியில் விதை முதல் விற்பனை வரை உள்ள அனைத்து உபகரணங்கள் மற்றும் பால் பண்ணை கருவிகள், தீவனங்கள், மாடித்தோட்டம் அமைத்தல், சோலார் பம்ப் செட்டுகள், சொட்டுநீர் பாசனம், இயற்கை வேளாண் உற்பத்தி பயிற்சிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து கருவிகளும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன.

Also Read: நின்று கொண்டே உணவு உண்பது நல்லதா?

இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு போன்றவை குறித்து கருத்தரங்கம் இடம் பெற உள்ளது.

மேலும், இந்த விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்களின் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.

 அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாரம்பரியமானநெல் கண்காட்சியும் இடம் பெற உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முறை குறித்து கருத்தரங்கம் மற்றும் விவசாய அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும், பால் பண்ணை அமைப்பதற்கான புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற உள்ளன.

Also Read: மழை காலத்திற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் தேவை...

இந்த விவசாய கண்காட்சியில் இன்னும் என்னென்ன சிறப்புகள் இடம் பெற உள்ளன என்பதையும், மேலும், விவசாயிகளுக்குகளுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் 9566712939, 8610744313, 9944292020 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த கண்காட்சியில்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயக் கருவி விற்பனை நிறுவனங்கள், விதை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 


 


Comments


View More

Leave a Comments