உணவு விஷயத்தில் மகாத்மா காந்தி மேற்கொண்ட பரிசோதனைகள்…


மகாத்மாவின் உணவுப் பழக்கங்கள் 

மகாத்மாவின் வாழ்க்கை முறை 

லண்டனில் மகாத்மாவின் உணவு 

சைவ உணவு உண்பதில் மகாத்மாவின் பிடிவாதம்

உணவில் மகாத்மா மேற்கொண்ட சோதனைகள்

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா தனது வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தனது உணவு விஷயத்திலும் தனக்குத் தானே பல பரிசோதனைகள் மேற்கொண்டு வாழ்ந்தார். உணவு குறித்து அவர் தனது சத்தியசோதனை வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துகளை இன்றைக்கு நினைவு கூறலாம். 

குறிப்பாக லண்டனில் பாரீஸ்டர் படிப்புக்காக சென்றபோது சைவ உணவு விஷயத்தில் மகாத்மா காந்தி மிகவும் கறாராக இருந்தார். சைவ உணவு உண்ண வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் அவர் தடம் புரளவில்லை. 

அதிகமாக கேட்க வெட்கம்

“என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ    இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்குப்       பிடிக்கவே இல்லை.  எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும்.

அது கூடியவரை  வயிற்றை நிரம்பும்.  ஆனால்,  மத்தியானச் சாப்பாட்டிலும்      இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப்பட்டினிதான். 

மகாத்மா காந்தியின் உணவுப் பழக்கங்கள்

அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி  ஓயாமல் எனக்கு எடுத்துக் கூறிக்      கொண்டே இருந்தார்.  நானும் என் விரதத்தை அதற்குச் சமாதானமாகக்   கூறிவிட்டுப்  பேசாமல் இருந்துவிடுவேன். மத்தியானச் சாப்பாட்டிற்கும்       இரவு உணவுக்கும்  எங்களுக்குப் பசலைக் கீரையும் ரொட்டியும் ஜாமும் இருக்கும்.   நானோ நன்றாகச் சாப்பிடுகிறவன்; பெருவயிறு படைத்தவன். ஆனால்,  இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளுக்கு அதிகமாகக்      கேட்பது சரியல்லவென்று தோன்றியதால்            அதிகமாகக் கேட்கவும் எனக்கு வெட்கம்.போதாததற்கு      மத்தியானத்திலும்,  இரவிலும் சாப்பாட்டில் பாலும் கிடையாது. 

மேலும் மேலும் ஆழ்ந்து,  நான் ஆன்ம பரிசோதனை செய்யச் செய்ய, எனது அகவாழ்விலும் புறவாழ்விலும்   அதிக மாறுதல்களைச்செய்து கொள்ள வேண்டியது அவசியம்   என்ற உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று.        என் செலவுகளிலும்,  வாழ்க்கை முறைகளிலும் மாறுதல்களைச் செய்தேன்.  இதற்கு முன்னாலேயே,  என் உணவிலும் மாறுதலைச்   செய்ய ஆரம்பித்திருந்தேன். சைவ உணவின் முக்கியத்துவத்தைக்    குறித்து   எழுதிய    நூலாசிரியர்கள், அவ்விஷயத்தை வெகு நுட்பமாகப்      பரிசீலனை செய்திருந்ததைக் கண்டேன். இவ்விஷயத்தின் மத,   விஞ்ஞான,  அனுபவ,   வைத்திய அம்சங்களையெல்லாம்    அவர்கள்  ஆராய்ந்திருந்தனர். தருமக் கோட்பாட்டின் ரீதியில் அவர்கள்       ஒரு முடிவுக்கும் வந்தனர்.

சைவ உணவால் செலவு குறைவு 

தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால், தாழ்ந்த உயிரினங்களைத்  தின்று  மனிதன் உயிர் வாழ்வது  என்பது அவ்வுயர்வின்       நோக்கம் அல்ல.  உயர்ந்த இனங்கள்  தாழ்ந்த இனங்களைப் பாதுகாக்க வேண்டும்.    மனிதனுக்கு மனிதன் உதவிக் கொள்ளுவதைப் போல, அவ்விரு இனங்களும் தம்மிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ள   வேண்டும் என்பது    அந்நூலாசிரியர்கள் கண்டமுடிவு.    மனிதன் உண்பது       உயிர்       வாழ்வதற்கேயன்றி, சுகானுபவத்திற்காக       அல்ல        என்பதையும்    அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.    

மகாத்மா காந்தியின் உணவு பழக்கங்கள்

இதை அனுசரித்து அவர்களில் சிலர், புலால் உண்ணாமல்    இருப்பதோடு முட்டை,   பால் சாப்பிடுவதும்  கூடாது என்று சொன்னார்கள் ;    அதன்படி        சாப்பிடாமலும்  இருந்தார்கள்.        மற்றும் சிலர்,   விஞ்ஞான ரீதியில் வேறு ஒரு முடிவுக்கும் வந்தனர்.     மனிதனின்  உடலமைப்பை ஆராய்ந்தால், அவன்  உணவைச்  சமைத்துத் தின்னப் படைக்கப்பட்டவன் அல்ல  என்பதும், பச்சையாகத் தின்று வாழவேண்டிய பிராணியே  என்பதும் தெளிவாகின்றன என்றார்கள். 

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

அப்பத்திரிக்கைக்கு நான் சந்தாதாரனானேன். அச்சங்கத்திலும் சேர்ந்து வெகு  சீக்கிரத்திலேயே அதன் நிர்வாகக்     குழுவிலும் உறுப்பினரானேன்.  சைவ உணவுப் பிரசார     இயக்கத்தின்       தூண்கள்  என்று     கருதப்பட்ட முக்கியஸ்தர்களுடன்   இச்சங்கத்தில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. உணவில் என் சொந்தச்    சோதனைகளையும் செய்ய முற்பட்டேன்.

 ரொட்டியும் பழமும் சாப்பிட்டேன்

வீட்டிலிருந்து  தருவித்திருந்த  மிட்டாய்களையும்,ஊறுகாய்களையும்    சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.  மனம் வேறு வழியில்        திரும்பி விட்டதால், மசாலை     மீதிருந்த மோகம் போய்விட்டது.       மசாலையின்றிச் சமைத்த கீரை,  அப்பொழுது ரிச்மண்டு ஹோட்டலில் சப்பென்று ருசியற்றிருந்தது.  இப்பொழுதோ,சும்மா       வேக வைத்த கீரையே    எனக்கு ருசியாக இருந்தது. ருசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை என்பதை இதுபோன்ற      பல பரீட்சைகள் எனக்குப் போதித்தன.

மகாத்மா காந்தியின் உணவுப் பழக்கங்கள்

சிக்கனத்தைக் கவனிக்க வேண்டும் என்பதும்  எப்பொழுதும் என் நினைவில்   இருந்து வந்தது.    தேயிலை,   காப்பி போன்றபானங்கள் தீமை விளைவிப்பவை    என்றும், கோக்கோ குடிப்பது நல்லதென்றும் கருதியவர்கள்      அக்காலத்தில் அநேகர் உண்டு உடலுக்கு      நன்மையானவைகளை        மாத்திரமே ஒருவர் சாப்பிடவேண்டும் என்று  திடமாக நான் நம்பியிருந்ததால் தேயிலை,காப்பி போன்ற     பானங்களைச்      சாப்பிடுவதை விட்டுவிட்டு,அவற்றிற்குப் பதிலாகக் கோக்கோ சாப்பிடலானேன்.நான் சாப்பிடப்போன உணவு விடுதிகளில் இரண்டு பிரிவுகள் உண்டு.       அவற்றில்  ஒரு பிரிவில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். ஒருவர், அவற்றில் தாம் விரும்புவதைச்   சாப்பிட்டு விட்டு   அதற்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும். 

Also Read: சத்துணவு மையத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

பிரதானமான     உணவுப்     பரிசோதனையோடு   பல சிறு சோதனைகளையும் நடத்தி வந்தேன். உதாரணமாக, மாவுப் பண்டங்கள் எல்லாவற்றையும்    ஒரு சமயம்      விலக்கியிருந்தேன்.  மற்றொரு சமயத்திலோ, ரொட்டியும் பழமும்    மாத்திரமே சாப்பிட்டு வந்தேன். ஒரு  சமயம் பால்கட்டி, பால்,   முட்டைகள் மாத்திரம்   சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.    இந்தக்     கடைசிச் சோதனையைக் குறித்துக் கொஞ்சம் கவனிப்பது முக்கியம்.    இச்சோதனை  இரு வாரங்கள் வரையிலும்கூட       நீடிக்கவில்லை.   மாவு கலந்த பண்டங்களைத் தின்னக்கூடாது   என்று சொன்ன சீர்திருத்தக்காரர்,   முட்டைகளின் மேன்மையைக்       குறித்துப் பிரமாதமாகச் சொன்னதோடு அவை மாமிசமாகா   என்றும் கூறினார். 

முட்டையைத் தின்பதால் உயிருள்ள எதற்கும்      துன்பம்      விளைவித்து விடவில்லை     என்பது வெளிப்படையாகத்       தெரிந்தது.  இந்த வாதத்தில் மயங்கி, என் விரதத்தையும் மறந்துவிட்டு,    நான் முட்டை தின்ன ஆரம்பித்தேன் ஆனால்,       நான் இதில் செய்த தவறு தற்காலிகமானதே.   நான் கொண்டிருந்த விரதத்திற்குப் புதியதொரு வியாக்கியானத்தையே நான் அனுசரிக்க வேண்டும். மாமிசம் என்பதைப் பற்றிய என் தாயாருடைய கருத்தில் முட்டையும்      சேர்ந்ததே   என்பதை நான் அறிவேன். இவ்விதம்        விரதத்தின்    உண்மைக்     கருத்தை    நான் கண்டுகொண்டதுமே,முட்டை   சாப்பிடுவதையும், அப்பரீட்சையையும் ஒருமிக்க விட்டுவிட்டேன்.

விரதம் அனுசரிப்பதிலும் ருசி 

இந்த   வாதத்தில் அடங்கிய,    கவனிக்கத்தக்க   நுட்பமான விஷயம் ஒன்று உண்டு.     இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூன்று வகையான வியாக்கியானங்கள்  கூறப்படுவதை அறியலானேன். இதில் முதல் வியாக்கியானப்படி, மாமிசம் என்பது பறவைகள், மிருகங்களின்  இறைச்சியே.   இந்த வியாக்கியானத்தை    ஒப்புக்கொள்ளும் சைவ உணவுவாதிகள்,    பட்சிகள்,   மிருகங்களின்        மாமிசத்தை உண்ணமாட்டார்கள். ஆனால், மீன் சாப்பிடுவார்கள் ; முட்டைகளும் சாப்பிடுவார்கள்      என்பதைச் சொல்லவே     வேண்டியதில்லை.

Also Read: செப்டம்பர்30: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

மகாத்மா காந்தியின் உணவு முறைகள்

 

ஆனால்,   என் அன்னையாரின்  வியாக்கியானம் ஒன்றே என்னைக் கட்டுப்படுத்தும்  வியாக்கியானம்  என்பதில் நான் நிச்சயமாயிருந்தேன். ஆகையால், நான் மேற்கொண்ட  விரதத்தின்படி நான் முட்டைகள் தின்னலாகாது ;  அப்படியே செய்தேன்.  இதனால் ஒரு கஷ்டம் உண்டாயிற்று.    சைவ உணவு விடுதிகளில் கூடப் பல உணவு வகைகளிலும் முட்டை சேர்க்கிறார்கள் என்பது, விசாரித்ததில் தெரிய வந்ததுதான்  அக்கஷ்டம். பலவகையான களிகள்,  கேக்குகள் ஆகியவைகளில்      முட்டைக் கலப்பு உண்டு.  எனவே இன்னதில் இன்னது இருக்கிறது    என்பது முன்னதாகவே தெரிந்திருந்தாலன்றி, ஒரு குறிப்பிட்ட உணவில்      முட்டை கலந்திருக்கிறதா, இல்லையாஎன்பதைக்      கேட்டுத் தெரிந்துகொள்ள   வேண்டிய சங்கடமான முறையையும் நான் அனுசரிக்க வேண்டியதாயிற்று.   என் கடமையை  உணர்ந்ததன் காரணமாக எனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டதெனினும், இது என் உணவை        இன்னும் எளிதாக்கி விட்டது.  இவ்விதம் எளிதானது எனக்கு இன்னுமொரு   தொல்லையையும் உண்டாக்கியது.நான் ருசித்துச் சாப்பிடத் தொடங்கிய     பல உணவு வகைகளையும் கைவிட நேர்ந்ததே     அத்தொல்லை.   இந்தச் சங்கடங்களெல்லாம் சீக்கிரத்தில் மறைந்து விட்டன. ஏனெனில்,   விரதத்தைக் கண்டிப்பாக அனுசரித்து வருகிறோம்    என்பது   எனக்கு உள்ளூற ஒரு ருசியை உண்டாக்கியது. நாவின்   ருசியைவிட     உள்ளத்தின்   இந்த ருசி, தெளிவாக அதிக    இன்பத்தையும்      சுகத்தையும்    தந்ததோடு நிரந்தரமானதாகவும் இருந்தது.     என்றாலும்,       உண்மையான அவதி இனிமேல்தான் ஏற்பட இருந்தது.     மற்றொரு விரதத்தைப்     பற்றியதே அது. கடவுளின்அருளைப் பெற்றோருக்கு யார்தான் தீங்கு    இழைத்துவிட முடியும்?

 

விரதங்கள் அல்லது   பிரதிக்ஞைகளைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது    பொருத்தமற்றதாகாது. பிரதிக்ஞைகளுக்கு வியாக்கியானம்     கூறுவதிலேயே     உலகமெங்கும்   சச்சரவுகள் உண்டாகின்றன. பிரதிக்ஞை என்னதான்   தெளிவானதாக இருந்தாலும் சரி, தங்களுடைய     காரியத்திற்கு ஏற்றவகையில் அதைப்  புரட்டித் திரித்துக்       கூறிவிடுகிறார்கள்.    அப்படிச்   செய்கிறவர்களைப் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரையில், அரசர்களிலிருந்து உழவர் வரையில், சமூகத்தின்       எல்லா வகுப்பினரிடையேயும் காணலாம். சுயநலம் அவர்களைக் குருடர்கள் ஆக்கிவிடுகிறது.  தெளிவற்ற  ஒரு மனோ பாவத்தினால்      அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதுடன்    உலகத்தையும்,    கடவுளையும் கூட  ஏமாற்றப்பார்க்கிறார்கள்.    ஒரு பிரதிக்ஞையை      யோக்கியமாகக் கூறும் வியாக்கியானத்தை       ஒப்புக்கொண்டு விடுவதுதான் இதில் சிறந்த வழியாகும்.

Also Read : இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)

 

மகாத்மாவின் உணவு பரிசோதனை முயற்சிகள்

மாமிசம் எது என்பதற்கு என் அன்னை கொண்ட   வியாக்கியானமே சரியான வழியின்பபடி எனக்கு உண்மை வியாக்கியானம். இதுவன்றி, என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ, நான் அதிக அறிவு படைத்து விட்டேன் என்ற   அகம்பாவமோ, எனக்குப்போதித்திருக்கக் கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.  இங்கிலாந்தில் நான் செய்த     உணவுச் சோதனைகளெல்லாம், சிக்கனத்தையும்,  தேகாரோக்கியத்தையுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்பட்டவை.      உணவுப் பிரச்சனைக்கும் மதத்துக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றி நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும் வரையில் சிந்திக்கவே இல்லை. அங்கேதான் நான் கடுமையான சோதனைகளை மேற்கொண்டேன்.    அவற்றைக் குறித்துப்    பின்னால் கூறுகிறேன். என்றாலும்,    இவைகளுக்கெல்லாம்   இங்கிலாந்திலேயே   விதை விதைக்கப்பட்டுவிட்டது.   ஒரு மதத்தில் பிறந்தவர்களைவிட    அம்மதத்திற்குப் புதிதாக மாறியவர்களுக்கு, அம்மதத்தினிடம் அதிக அன்பு இருப்பது இயல்பு. சைவ உணவு என்பது அப்பொழுது     இங்கிலாந்துக்கு ஒரு புதிய தருமம்.    எனக்கும்   அப்படியே.   ஏனெனில்,  மாமிசம் சாப்பிட வேண்டியது அவசியம் என்பதில் திட நம்பிக்கையுள்ளவனாக  நான் அங்கே சென்றேன்.    ஆனால்,  அறிவாராய்ச்சியின் மூலம் சைவ உணவே   சிறந்தது என்ற   கொள்கைக்குப் பிறகு மாறி விட்டேன்என்பதை முன்னால் கவனித்தோம். சைவ உணவு    சம்பந்தமாகப் புதிதாக மதம்        மாறியவனுக்கு இருக்கும் உற்சாகம் எனக்கும் இருந்ததால்,    நான் வசித்துவந்த பகுதியான பேஸ் வாட்டரில் ஒரு சைவ      உணவுச் சங்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.  ஸர் எட்வின் அர்னால்டு  அங்கேதான் வசித்தார்.   சங்கத்திற்கு உபதலைவராக      இருக்குமாறு அவரைக்  கேட்டுக்கொண்டேன். ‘வெஜிடேரியன்’   என்ற   சைவ        உணவுப் பத்திரிக்கைக்கு ஆசிரியரான      டாக்டர் ஓல்டுபீல்டு சங்கத் தலைவரானார். நான் அதற்குச் செயலாளனானேன். கொஞ்ச காலம் சங்கம் சரிவர நடந்து வந்தது. ஆனால்,    சில மாதங்களில்     எல்லாம் கலைந்து போய்விட்டது. அடிக்கடி ஓர் இடத்திலிருந்து வேறு ஓர்  இடத்திற்கு மாறிவிடும் என் பழக்கப்படி        அப்பகுதியிலிருந்து  நான் குடி பெயர்துவிட்டதே     சங்கம் கலைந்து    விட்டதற்குக்  காரணம்.என்றாலும் இந்தக்கொஞ்ச காலச் சாதாரணமான அனுபவமே, ஸ்தாபனங்களை உருவாக்கி நடத்துவதில் எனக்குச் சிறிது பயிற்சியை அளித்திருந்தது.”

நன்றி; மகாத்மா காந்தி எழுதிய சத்தியசோதனை 

#MahathmaFoods #MahathmaVegFoods #FoodMethodsOfMahathma #MahathmaFavouriteFood  #GandhiJaynthi

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments