தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

வேளாண் பொருட்கள் விற்பனை தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பர்ய உணவுத்திருவிழா 

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்ததில் வரும் 26ம் தேதி தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பர்ய உணவுத்திருவிழா நடைபெறுகிறது.

தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பர்ய உணவுத்திருவிழா

கடாஷம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட், நெல் ஜெயராமன் நெல் விதை பாதுகாப்பு மையம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பர்ய நெல் விதைகளை வழங்கி உரையாற்றுகிறார்.

கடாஷம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிறுவனர் சோமசுந்தரம், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.ராஜீவ் ஆகியோர் இந்த விழாவை ஒருங்கிணைக்கின்றனர். இது பற்றிய தகவல்களுக்கு மற்றும் ஸ்டால் புக் செய்ய  9384849550, 9940542355 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வானகம்" நடத்தும் ''விதைகளே பேராயுதம்" ஒரு நாள் பயிற்சி..

இன்றைய சூழலில் தற்சார்பும், உணவு உற்பத்தியை செய்ய விரும்பும் பெரும்பான்மையானோரின் தேடலுக்கு முறையான தீர்வும், வழிகாட்டுதலும் தரும் விதமாக வானகம், தமிழ்நாடு முழுவதிலும் ஒத்த கருத்தில் செயல்படும் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து " இனி விதைகளே பேராயுதம்" நிகழ்வை நடத்தி வருகிறது.. 

அவ்வகையில் வரும் ஞாயிறு 26/09/21 அன்று ஊத்துக்குளியில் நடைபெறும் பயிற்சியில், விதைகள் உற்பத்தி, விதைகள் சேகரிப்பு, விதை நேர்த்தி, விதை பாதுகாத்தல், பருவத்திற்கான விதைகள் தெரிவு செய்தல், நடவு செய்தல், Food forest எனப்படும் உணவுக்காடு அமைத்தல், உணவுக் காட்டின் பயன்கள், மண்ணுக்கான மரங்களை தேர்வு செய்தல், மேட்டுப்பாங்கான நிலத்திற்கான மரங்கள், வறட்சியைத் தாங்கும் மரங்கள், நீரோட்ட மிக்க பகுதிக்கான மரங்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்

Also See: ஆரோக்கிய சுவை யூடியூப்பில் வேளாண் மற்றும் உணவு குறித்த தலைப்பு செய்திகள் 

இது தவிர உயிர்வேலியின் பயன்கள், உயிர் வேலிக்கான மரங்கள் மற்றும் இவற்றைக் குறித்த உங்களின் வினாக்கள் அனைத்திற்கும் தெளிவு பெறலாம்..திரு.எஸ். மோகன்ராஜ் ,திரு. மு. அசோக்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியாளர்ளில் ஒருவரான .உணவுக்காடு அமைத்தலில் வல்லுநராக விளங்கும் எலச்சிபாளையம் எஸ். மோகன்ராஜ் அவர்கள் கடந்த பல வருடங்களாக உணவுக்காடு அமைத்து தரும் பணியை தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களிலும் செய்து வருகிறார்.. 

 

 பழ மரங்கள், மற்ற நிழல் தரும் மரங்கள், மற்றும் காய்கறி வகைகளில்  நாட்டு ரக மரங்கள் மட்டும் தான் என்பதில் சிறிதும் சமரசமின்றி தானே விதைகளிலிருந்து கன்றுகளை வளர்த்து   வேண்டுபவர்களுக்கு விநியோகிக்கவும் செய்கிறார்.. விரும்புவர்களது இடங்களில் தனது கைகளால் நடவு செய்து food forest எனப்படும் உணவுத்தோட்டத்தை உருவாக்கித் தர உதவுகிறார். இவர் உருவாக்கிய உணவுத் தோட்டத்தினால்  பலனடைந்தோரின் @Suguna Muthusamy  @Saroja kumar  முகநூல் பதிவுகளே இதற்கு சாட்சி..

பயிற்சியாளர்களில் ஒருவரான மு.அசோக்குமார் , கடந்த பல வருடங்களாக மரபு ரக விதைகளைக் கொண்டு காய்கறித் தோட்டங்கள்  அமைத்துத் தருவதிலும்,   மரபு ரக காய்கறி விதைகளை தேடித் தேடி பெற்று அவற்றை நண்பர்களுக்கு பகிர்வதிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.. 

Also Read: பச்சை மிளகாய் உண்பதால் இவ்வளவு நன்மைகளா?

பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் விதைப் பகிர்தலின்  மூலம் நண்பர்களைப் பெற்றிருப்பவர். தமிழ்நாடு முழுவதிலும், பள்ளி, கல்லூரி, பொது மக்கள் என அனைவரிடமும் தற்சார்பு, உணவு உற்பத்தி குறித்து தனது களப்பணி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்..இவர்கள் இருவரது அனுபவ அறிவை செவி வழி பெறுவது அடுத்த நம் களப்பணிக்கு முதல் படியாய் நிச்சயமாய் இருக்கும்..

26 | 09 / 21 - ஞாயிறு - காலை 9.30 மணி முதல் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பங்களிப்பு ரூ.500/- இடம்: இயல்வாகை குழந்தைகள் நூலகம், ஊத்துக்குளி. திருப்பூர் மாவட்டம்.முற்பகலில் பனம் பதநீர், நிறைவான மதிய உணவு, மாலை சிற்றுண்டி, கருப்பட்டி தேநீர், வழங்கப்படும்..25 நபர்கள் மட்டும் அனுமதி முன் பதிவு அவசியம் : 9942118080

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments