
நோய்களுடன் கட்டுப்பாடான ரம்லான் நோன்பு இருப்பது எப்படி தெரியுமா?
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது .ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக மாவுச்சத்து அதிக கொழுப்புசத்து அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். பேலியோ வழி ரமலானை அணுகும் போது கீழ்காணும் வகைகளில் நம்மால் மக்களை வகைப்படுத்த முடியும்.
அ. ஆரோக்கியமான உடலுடன் நோய் அற்றவர்கள் வளர் இளம் பருவத்தினர், எந்த இணை நோய்களும் இல்லாத வயது வந்தவர்கள் , முதியோர்கள் இந்த வகையில் வருகிறார்கள் சஹர் ( காலை நோன்பு வைக்க உண்ணப்படும் உணவு ) 3 முதல் 4 முழு முட்டைகள், 100 கிராம் காய்கறிகள்,
100 கிராம் மாமிசம் ( மீன்/ மட்டன்/ பீஃப்/ கோழி) ( எண்ணெயில் அமிழ்த்திப் பொரிக்கக்கூடாது) 1 முதல் 1 ½ லிட்டர் நீர் அருந்த வேண்டும் ( மோர் / தயிர் ) ( இதனுடன் ஒரு டம்பளர் பால் ( இனிப்பில்லாமல்) கூட 20 கிராம் வெண்ணெய் சேர்த்து பருகலாம்
இஃப்தார் ( மாலை நோன்பு திறப்பதற்கு உண்ணப்படும் உணவு) 200 கிராம் பேலியோ காய்கறிகள் போட்டு செய்யப்பட்ட காய்கறி சூப் + 20 கிராம் வெண்ணெய் சேர்த்து க்ரீமி வெஜிடபுள் சூப்,1 லிட்டர் தண்ணீர் அருந்தவும், பேலியோ பனீர் கேரட் வடை ( தோசை சட்டியில் எண்ணெயில் அமிழ்த்தாமல் குறைவான வெப்பத்தில் செய்யப்பட வேண்டும்), பனீர் டிக்கா. இரவு உணவு 300 முதல் 400 கிராம் அளவு மாமிசம், இதனுடன் 1 முதல் 1½ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
ஆ. இணை நோய்களுடன் வாழ்பவர்கள் - நீரிழிவு நோயர்கள் ரமலான் மாத நோன்பு நோற்பதில் இருக்கும் எதிர்பார்க்கப்படும் ஆபத்துகளாக குறை ரத்த சர்க்கரை, அதிக ரத்த சர்க்கரை, நீர்ச்சத்து குறைபாடு, ரத்த உறைதல் தன்மை அதிகரித்தல் ஆகியவை அறியப்படுகின்றன.
Must Read: உடம்புக்கு என்ன தேவை என்பதை கவனித்துக் கேளுங்கள்….
எனவே ரம்லானுக்கு முன்பு உடல் ஆரோக்கியம் குறித்த மதிப்பிட தேவை. ரமலானுக்கு முந்தைய மாதத்தில் தாங்கள் சந்திக்கும் மருத்துவரிடம் கட்டாயம் தங்களது இணைநோய்களை பரிசோதனை செய்து. நோன்பு நோற்பதற்கு ஏற்ற நிலையில் உடல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
மாத்திரைகளில் இன்சுலினில் செய்ய வேண்டிய மாற்றங்களை மருத்துவர் அறிவுரையின்படி மாற்றிக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயர்கள் அதிக அபாயம் கொண்ட நோயாளிகள், Hba1c அளவுகள் 9 க்கு மேல் இருப்பவர்கள் , அடிக்கடி ரத்த சர்க்கரை குறைபாட்டால் அவதிப்படுபவர்கள்,
கடந்த மூன்று மாதங்களுக்குள் கீடோ அமிலத்தன்மைக்கு (DKA) உள்ளானவர்கள், கர்ப்ப கால நீரிழிவு, நீரிழிவு நோயருக்கு ஏற்படும் காய்ச்சல் , அதீத உடல் உழைப்பு செலுத்தவேண்டிய நீரிழிவு நோயர் என பிரிக்கப்படுகின்றனர்.
அதிக அபாயம் கொண்ட சர்க்கரை நோயாளிகள் Hba1c 7.5 முதல் 9 வரை கொண்டவர்கள், ரத்த சர்க்கரைஅளவுகள்150-300 mg/dl கொண்டவர்கள், சிறுநீரக செயல்பாட்டு அழற்சி/ போதாமை - eGFR < 90, தனியாக வாழும் முதியோர், பல்வேறு இணைநோய்கள் ஒன்றாக இருப்பவர்கள் என பிரிக்கப்படுகின்றனர்.
நடுத்தர அபாயம் கொண்ட சர்க்கரை நோயாளிகள் - மாத்திரைகளுடன் / இன்சுலினுடன் நல்ல கண்ட்ரோலில் உள்ள நீரிழிவு உள்ளவர்கள், Hba1c < 7.5, - வேறு இணை நோய்கள் இல்லாதவர்கள் ஆகியோர் இவர்கள் இன்சுலின் மற்றும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையில் குறைத்து/ மாற்றம் செய்து கொள்ள வேண்டும்
குறைந்த அபாயம் கொண்ட நோயாளிகள் மாத்திரை மருந்துகளின்றி உணவு முறை மற்றும் உடல் உழைப்புடன் நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், நீரிழிவு நோயர்கள் நோன்பு வைக்கும் போது கட்டாயம் தனியாக இருக்கக்கூடாது. க்ளூகோமீட்டர் கருவி கொண்டு காலை எட்டு மணி ,மதியம் ஒரு மணி, மாலை ஐந்து மணி ,இரவு எட்டு மணி அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்
ஹைப்போ கிளைசீமியா அலர்ட்
கையில் எப்போதும் க்ளூகோஸ் / சீனி வைத்துக் கொள்ள வேண்டும் தலைசுற்றல் ,படபடப்பு,,வாந்தி குமட்டல்,,வேர்த்துப்போதல்இருப்பின் ரத்த க்ளூகோஸ் அளவுகள் 70 க்கு கீழ் குறைந்தால் ,உடனடியாக நோன்பை முறித்து விட வேண்டும். க்ளூகோஸ் பானத்தை அருந்த வேண்டும். ரத்த க்ளூகோஸ் அளவுகள் 300 க்கு மேல் ஏறாமலும் இருக்க வேண்டும் .கட்டாயம் சீனி/ இனிப்பு கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.
ரத்த கொதிப்பு நோயர்கள்
நல்ல கண்ட்டோரில் ரத்த அழுத்தத்தை வைத்திருப்பவர்கள் நோன்பு நோற்கலாம் , கண்ட்ரோல் இல்லாமல் இருக்கும் மக்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாத்திரைகளை சரிவர மாற்றிக் கொண்டு நோன்பு வைக்க வேண்டும்.
Must Read: நள்ளிரவில் நெஞ்சுவலி; கவனத்தில் கொள்ள சில முதலுதவி குறிப்புகள்…
அதீத ரத்த கொதிப்பு நிலை கொண்டவர்கள் நோன்பு வைப்பதை தவிர்ப்பது நல்லது . ரத்த கொதிப்புடன் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் நோன்பை தவிர்ப்பது நல்லது உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ரத்த கொதிப்பின் அபாய அறிகுறிகள்
தலைசுற்றல், குமட்டல், தடுமாற்றம், தலைவலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். ரத்த அழுத்தமானியில் பரிசோதனை செய்து அழுத்தம் அதிகமாக இருப்பின் நோன்பை முறித்து விட்டு மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
இதய நோய் இருப்பவர்கள் தங்களது இதய நோய் சிறப்பு நிபுணரை அணுகி ஈசிஜி , எக்கோ பரிசோதனைகள் மேற்கொண்டு இதயத்தின்யல்திறனை ஆய்வு செய்து இதய நோய் நிபுணரின் பரிந்துரைப்படி நோன்பு இருக்கலாம்.
இதய செயலிழப்பு & நோன்பு, தீவிரமற்ற இதய செயலிழப்பு EJECTION FRACTION >40 , இருப்பவர்கள் அதிக அபாயம் கொண்ட இதய நோயாளிகளுக்கு அமர்ந்திருக்கின்ற நிலையில் அதிக மூச்சு திணறல் நடந்தால் மூச்சுத் திணறல் நேரிடும். EJECTION FRACTION < 40 இருப்பவர்கள் கட்டாயம் உயிர்காக்கும் மருந்துகளை மாத்திரைகளை நிறுத்தக் கூடாது
இ. மெய்ண்டெணண்ஸ் பேலியோ உணவு முறையில் இருப்பவர்
இதை காமன் மேன் உணவு முறையில் இருப்பவர்களும் கடைபிடிக்கலாம் சஹர் ( காலை நோன்பு வைக்க உண்ணப்படும் உணவு )100 கிராம் வடித்த சோறு , 100 கிராம் காய்கறிகள், 100 கிராம் மாமிசம் ( மீன்/ மட்டன்/ பீஃப்/ கோழி) ( எண்ணெயில் அமிழ்த்திப் பொரிக்கக்கூடாது), 1 முதல் 1 ½ லிட்டர் நீர் அருந்த வேண்டும் ( மோர் / தயிர் )
இஃப்தார் ( மாலை நோன்பு திறப்பதற்கு உண்ணப்படும் உணவு) 200 கிராம் பேலியோ காய்கறிகள் போட்டு செய்யப்பட்ட காய்கறி சூப், 20 கிராம் வெண்ணெய் சேர்த்து க்ரீமி வெஜிடபுள் சூப், 1 லிட்டர் தண்ணீர் அருந்தவும். வடை பஜ்ஜி இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். இரவு உணவாக 1 தோசை , 200 கிராம் மாமிசம் 1 முதல் 1½ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தீவிர நோய் நிலையுடன் இருப்பவர்கள் நோன்பு வைப்பது ஆபத்தில் முடியக்கூடும் டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள், இன்சுலின் கட்டாயமாக தேவைப்படும் டைப் இரண்டு நீரிழிவு நோயாளிகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு / ரத்த கொதிப்பு தீவிர இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் , 3 மாதத்திற்குள் ஆஞ்சியோ/ ஸ்டெண்ட்/ பைபாஸ் செய்து கொண்டவர்கள், 3 மாதத்திற்குள் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள்,இதயத்தின் தசைகள் தடிமன், - இதயத்தின் துடிப்பில் ஏற்படும் சிக்கலான நோய்கள்,இதயத்தின் வால்வு நோய்கள், அடிக்கடி வலிப்பு ஏற்படுபவர்கள், கட்டாயம் மூன்று வேளை மாத்திரை உட்கொள்ள வேண்டியவர்கள்,, கர்ப்பிணிகள் / முதல் ஆறுமாதம் பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் நோம்பு வைப்பது நல்லதல்ல.
உ. சிறப்பு வகுப்பினர்
பிசிஓடி மற்றும் மகப்பேறின்மையால் குழந்தைக்கு காத்திருக்கும் இணையர்கள், பிசிஓடி/விந்தணுக்குறைபாடு உள்ள சகோதர சகோதரிகள் கட்டாயம் இனிப்பை தவிர்க்க வேண்டும், சீனி நாட்டு சர்க்கரை போன்ற இனிப்பு கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும், பால் பருகுவதை தவிர்க்க வேண்டும், தினசரி இஃப்தாருக்கு பிறகு உடல் பயிற்சி செய்யலாம் .
Must Read: புரதத்தால் கிட்னிக்கு ஆபத்து, கொழுப்பால் இதயத்துக்கு ஆபத்து என்பது சரியா?
ஆட்டோ இம்யூன் வியாதிகள் இருப்பவர்கள் தாங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளை சஹர் மற்றும் இஃப்தாருக்கு மாற்றிக்கொண்டு நோன்பை ரியூமடாலஜிஸ்ட் பரிந்துரையில் கடைபிடிக்கலாம், பயறு/ கடலை/ இனிப்பு / நட்ஸ் / தானியங்களை தவிர்க்க வேண்டும்,, பரிந்துரைக்கப்பட்ட ஆட்டோ இம்யூன் ப்ரோட்டோகாலை தொடரவும்
ஊ. ரமலானில் உடல் உழைப்பு
பொதுவாக ரமலானில் அதீத உடல் உழைப்பை தவிர்ப்பது நல்லது வெயிலில் அலைவதை தவிர்ப்பது சிறந்தது எனினும் இஃப்தாருக்குப் பிறகு ஒரு மணிநேரம் நடக்கலாம் / மிதமான உடல் பயிற்சி செய்யலாம். செய்யும் வேலைக்கு ஏற்றவாறு உணவும் நீரும் அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்
எ. ரமலானில் உறக்கம்
இரவு 11 மணிக்குள் உறங்கினால் நான்கு முதல் ஐந்து மணிநேர உறக்கம் கிடைக்கும் முதியவர்களுக்கு இணை நோய்கள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மையினால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதை ஈடு செய்ய மதிய நேரத்தில் உறங்க வாய்ப்பிருப்போர் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் உறங்கலாம்.
ஏ. ரமலானில் நீர்ச்சத்து
ரமலானில் அதிலும் வெயில் காலங்களில் வரும் ரமலானில் அதீத நீரிழப்பு ஏற்படக்கூடும் எனவே சஹர் நேரத்தில் 1½ லிட்டர் நீர் இஃப்தாருடன் 1½ நீர் அருந்தி இரவு உணவுக்கு முன் இன்னொரு 1 லிட்டர் அருந்த வேண்டும்.
அடிக்கடி சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்போர் கட்டாயம் 3 லிட்டர் நீரை அருந்த வேண்டும். மோர், தயிர், எலுமிச்சை சாறு , நெல்லிக்காய் சாறு, வெள்ளரிக்காய் என்று உட்கொள்ளலாம். மெய்ண்டெணணஸ் மக்கள் - தர்பூசணி/ கிர்ணிபழ சாறு அருந்தலாம்.
மேற்கூறிய பரிந்துரைகளை பின்பற்றி பேலியோவுடன் ரமலானை கடைபிடிக்கலாம் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு கட்டாயம் ரமலானுக்கு முன்பான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரை அவசியம்
-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், சிவகங்கை
#ramadanfast #ramdanfastwithdiabetes #healthyramdanfast
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments