டான்சிலில் புண் வந்து விட்டால் இதை மட்டும் செய்தால் போதும்...


தொண்டையில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது டான்சில். இது வயது வித்தியாசமின்றி பலருக்கும் வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நடுத்தர வயதினர், முதிய வயதினர் எல்லோருக்கும் வருகிறது.

 ஆனால், டான்சில் என்பது ஒரு நோயல்ல என்று  காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் சொல்கின்றனர். டான்சில் என்பது நமது உடலில் வளரும் ஒரு கூடுதல் உறுப்பு என்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். தொண்டையின் பின்பகுதியில் இருக்கும் இந்த டான்சில் புண் ஆகும்போது அது நமக்குத் தொந்தரவு தருகிறது. சிலருக்கு திடீரென புண்ணாகும். ஒரு சிலருக்கு திரும்ப, திரும்ப புண்ணாகும்.

 டான்சிலின் அறிகுறிகள்

சிலருக்கு திடீரென தொண்டையில் வலி ஏற்படும். காய்ச்சலும் இருக்கும். தொண்டையில் எச்சிலை கூட விழுங்க முடியாத அளவுக்கு எரிச்சல் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் நாக்கை பரிசோதித்தால், நாக்கின் அடிப்புறம் இரண்டு புறமும் சிவப்பான வீக்கம் இருக்கும். இது திடீரென டான்சில் தொந்தரவால் ஏற்படும் மாற்றங்கள்.

இதையும் படியுங்கள்:உணவகங்களில் இயல்புநிலை திரும்பி விட்டதா? ஒரு நேரடி ரிப்போர்ட்!

ஏன் இப்படி புண் ஆகிறது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். மிகவும் குளிர்ச்சியான ஜில் என்ற தண்ணீர் குடித்தால், கோன் ஐஸ்கிரீம் அல்லது ஏதேனும் வேறு ஐஸ்கிரீம் சாப்பிடாலும் அத்தகையவர்களுக்கு டான்சிலில் புண் ஏற்படும்.

அடிக்கடி ஏற்படும் டான்சிலில் பிரச்னை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அடிக்கடி வரும் டாண்சிலை மருத்துவர்கள் செப்டிக் டான்சில் என்று சொல்கின்றனர். தொண்டைய சுற்றி உள்ள பகுதிகள் சிவப்பாக இருக்கும். அப்போது அறுவை சிகிச்சை வாயிலாகத்தான் இந்த டான்சிலை அகற்றுகின்றனர்.

டான்சில் என்பது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. நாம் சாப்பிடும் உணவில் முறையான நடைமுறையை கடைபிடித்தாலும், தினந்தோறும் சீரான உடற்பயிற்சி ஆகியவை மேற்கொண்டால் டான்சில் மீது தொற்று ஏற்படாது. டான்சிலில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மூச்சு பயிற்சி செய்வது நல்லது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர். 

டான்சிலில் இருந்து விடுபட எளிய முறைகள் 

டான்சில் தொந்தரவு இருந்தால் இந்த எளிய வைத்தியத்தை செய்து பாருங்கள். அறுவை சிகிச்சை செய்யாமல் தவிர்க்க இது உதவும். துளசி, இஞ்சி, மிளகு சம அளவு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அதனுடன் பால் சேர்த்துக் குடிக்க வேண்டும். பனங்கல்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதை தினமும் தூங்குவதற்கு முன் இரவில் குடித்து வருவது நல்லது.

டான்சிலில் இருந்து குணம் பெற எளிய மருத்துவ முறைகள்

அதேபோல், புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும், அதில் சிறிது தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் பகல் நேரத்தில் குடிக்கலாம். ஓமம் கிடைத்தால் அதையும் இதேபோல்செய்து குடிக்கலாம். இதையும் பகல் நேரங்களில் ஒன்றிரண்டுமுறை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:குழந்தையின்மையை போக்கும் இந்த பழத்தை தவற விடாதீர்கள்

வெள்ளைப்பூண்டு 10 பல் எடுத்து உரித்து பாலில் (நீர் சேர்த்து) வேக வைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கி பனங்கல்கண்டு சேர்த்துக் குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும். இதை இரவு தூங்கச் செல்வதற்குமுன் செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் இதை முயற்சித்துப் பார்க்கலாம். குழந்தைகள் என்றால் அளவைக் குறைத்துக் கொடுங்கள். பெரியவர்கள் அரை டம்ளர் அளவு கசாயம் குடித்தால் சிறியவர்களுக்கு வயதைப் பொறுத்து ஒரு டீஸ்பூனில் இருந்து கால் டம்ளர் வரை கொடுக்கலாம். முதலில் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்துவிட்டு ஒரு மணி நேர இடைவெளி விட்டு அடுத்து ஒரு டீஸ்பூன் அளவு கொடுங்கள். உதாரணமாகச் சொன்னேன்.

-எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் )

#Tonsillitis  #Tonsil  #CureTonsil  #CureForTonsil   #ENT

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 


 


Comments


View More

Leave a Comments