தோல்நோய்களை குணப்படுத்தும் கருடக்கொடி…
படர் தாமரைக்கு தீர்வு தரும் கருடக்கொடி என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 17ம் தேதி ஆரோக்கிய சுவை இணையதளத்தில் இயற்கை ஆர்வலர் திரு. பசுமை சாகுல் அவர்களின் முகநூல் பதிவை வெளியிட்டோம். கருடக்கொடி படர் தாமரைக்கு ம ட்டுமல்ல, பெரும்பாலான தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இது குறித்து பசுமை சாகுல் தமது முகநூலில் பதிவிட்ட தகவல்கள் மீண்டும் இங்கே வழங்கப்படுகிறது.
Must Read: ஆரோக்கியம் அளிக்கும் வேப்பம்பூ காரக்குழம்பு
தோல்நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சில மூலிகைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் கருட கொடி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சோரியாஸிஸ், வரண்ட தோல், தோலின்மீது வட்ட அடையாளத்தோடு கூடிய வேட்டை நோய் ஆகியவற்றுக்கு கருடகொடி தீர்வாக அமைகிறது.
நாம் ஏற்கனவே கூறியபடி இரத்தத்தை சுத்தி செய்வதோடு உடலில் தேங்கியுள்ள கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். சிறந்த சித்த வைத்தியர்கள் உடல் கழிவுகளை வெளியேற்றம் செய்து தருவார்கள். உடல் கழிவுகளை வெளியேற்றவும் கருடக்கொடி பயன்படுகிறது. மாதம் மூன்றுமுறை கருடக்கொடி சாற்றினை 30 மி.லி வீதம் காலை இரவு இரண்டு நேரம் உணவுக்கு முன்பாக எடுத்து கொள்வது மூலமாக உடல் கழிவையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய முடியும்.
Must Read: முருங்கை விதையின் மருத்துவ அற்புதங்களை தெரிந்து கொள்ளுங்கள்…
தேங்காய் எண்ணையுடன் கருடக்கொடி இலைச்சாறை சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் தலைபரளை சரியாகி பொடுகு நீங்கும். மயிருக்கு உயிர் கொடுக்கும். மயிர்கால்களுக்கு இரத்த ஓட்டம் பாய ஏதுவாகிறது. முடி கொட்டுவது இதனால் தடுக்கப்படுகிறது.
வரண்ட கேசம் பளபளப்பாக மாறும்.
கருடக்கொடியுடன் குப்பைமேனி,வேப்ப இலை, மஞ்சள் சேர்த்து சிறிதளவு தேங்காய் எண்ணை விட்டு அரைத்து தோல்நோய் பாதித்த இடங்களில் பூசி வந்தால் தோல் நோய்கள் மிக விரைவில் குணமாகும். கருடக்கொடி பெரும்பாலும் மலைப்பகுதிகளில் கிடைக்கிறது. மூலிகை பண்ணைகளில் கிடைக்கும் கருடக்கொடி நாற்று வாங்கி வீட்டிலேயே வளர்த்து பயனடையலாம். காணி மற்றும் பழங்குடி இயற்கை வைத்தியர்கள் தோல்நோய்க்கு சிறப்பாக மருந்து தருகிறார்கள். அவர்களின் தோல் மருத்துவத்தில் கருடக்கொடிக்கு முக்கியமான இடம் உண்டு.நலமோடு வாழ்க.
செய்தி, படம்; நன்றி திரு.பசுமை சாகுல்
#SkinDiseases #CureOfSkinDiseases #GarudaKodi #PattiVaithiyam #SkinCare
Comments