சிறுநீரக கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில்...


நமது சீரற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால்தான் பல நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.சிறுநீரகத்தில் கல் உருவாவது கூட உணவு பழக்கத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.  

பொதுவாக வெயில் காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீர் வறட்சி ஏற்பட்டு சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொல்லை கொடுப்பது வழக்கம்.

அதிக மசாலா ஆபத்து 

அதிக மசாலா கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவது குறிப்பாக மசாலா உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவது, அதிக புளிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுவது. இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆகியவற்றால், சிறுநீரக கல் உருவாகிறது.

இதையும் படியுங்கள்:டான்சிலில் புண் வந்து விட்டால் இதை மட்டும் செய்தால் போதும்...

பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது. அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இது ஏற்படாலம். அதிக உடல் வெப்பம் காரணமாகவும் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர். 

 

சிறுநீரக கற்களை கரைக்க யானை நெருஞ்சில் எனும் தீர்வு

அறிகுறிகள் 

சிறுநீர் கல் உருவானால், எரிச்சல் ஏற்படும். சிறுநீரின் நிறமும் மாறிக் காணப்படும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரக்கூடும். சிறுநீர் கெட்ட நெடி வீசும். இப்படியான அறிகுறி இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது அவசியம். 

யானை நெருஞ்சில் எனும் தீர்வு 

இத்தகைய சூழலில் சிறுநீரகக் கற்களைக் கரைக்க இயற்கை தந்த வரங்களில் ஒன்று யானைநெருஞ்சில் எனப்படும் பெருநெருஞ்சில். வழக்கமாக சென்னை போன்ற ஊர்களில் கோடைக்காலத்தில் யானைநெருஞ்சில் வளரத் தொடங்கிவிடும். யானைநெருஞ்சில் தாவரத்தின் இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. சிறுநீரக கோளாறை இது முழுமையாகத் தீர்க்கிறது. 

யானை நெருஞ்சில் மூலம் சிறுநீரகக் கற்களை எளிதாகக் கரைத்துவிடலாம். மே மாத இறுதியில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வளரத் தொடங்கிவிட்ட யானைநெருஞ்சில் இப்போதுதான் துளிர் விடத் தொடங்கியிருக்கிறது. ஒருசில இடங்களில் நீர்வளம் நிறைந்த இடங்களில் ஒன்றிரண்டு யானைநெருஞ்சில் செடிகள் வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும் பெருவாரியாக இப்போதுதான் வளரத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் காடு போன்று வளர்ந்து கிடக்கும்.  

மழைகாலத்தில் வளரும்

வடகிழக்கு பருவமழைக் காலத்தின் இறுதிப்பகுதியில் செழித்து வளர்ந்து காய் காய்த்து உதிர்த்துவிட்டு அழுகி மண்ணோடு மண்ணாகிவிடும். அதன்பிறகு தென்மேற்கு பருவமழைக் காலத்தில்தான் மீண்டும் வளரத் தொடங்கும். அதுவரை அதன் இருப்பிடத்தை நம்மால் கண்டுபிடிப்பது கஷ்டம். மண்ணுக்குள் மறைந்துகிடக்கும். ஆனால். தென்மாவட்டங்களில் எல்லா காலச் சூழலிலும் இந்த யானைநெருஞ்சிலைப் பார்க்கமுடிகிறது.

 

இதையும் படியுங்கள்:உணவகங்களில் இயல்புநிலை திரும்பி விட்டதா? ஒரு நேரடி ரிப்போர்ட்!

எப்படி காய்ச்ச வேண்டும்?

யானைநெருஞ்சில் முழுச் செடியையும் அரை லிட்டர் சுத்தமான நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவநிலைக்கு மாறும். நன்றாக அலசிய அந்த நீரை வடிகட்டி குடித்துவிட்டு மீண்டும் வெறும் தண்ணீர் அரை லிட்டர் அளவு குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் குடித்துவந்தால் சிறுநீரக் கற்கள் தானாகக் கரைந்துவிடும். இந்த வைத்தியத்தை ஏற்கெனவே சிலருக்கு செய்து கல்லை அகற்றியிருக்கிறேன். நம்பிக்கையுடன் செய்யலாம்.

இதற்கும் தீர்வாக இருக்கும் 

வெண்தேமல், வெள்ளைப்படுதல், உடல்சூடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த யானைநெருஞ்சில் அருமையான மருந்து. ஆண் மலட்டுத்தன்மை , விந்தணு குறைபாடுகளையும் இது சரி செய்கிறது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். உடலில் உள்ள அதீத கொழுப்புகளையும் கரைக்கவல்லது. இரத்த குழாயில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. வயிற்றுப் புண், உடல் வலி ஆகியவற்றையும் தீர்க்கிறது.  

-எம்.மரியபெல்சின்

( திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் )

#YannaiNerunjil  #CureForKidneyStone  #LargeCaltrops

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 


 


Comments


View More

Leave a Comments