தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

Also Read: சத்துணவு மையத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

மரபு திண்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி 

ஊத்துக்குளியில் வானகம் நடத்தும், சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி வரும் 03/10/21 அன்று ஞாயிறு காலை 9.30 மணி முதல்மாலை 4 மணி வரை நடைபெறுகிறது  நம் குழந்தைகளை ரசாயனங்கள் கலந்த பாக்கெட் தீனிகளில் இருந்து விடுவித்து  மரபு ரக உணவுகளில் குழந்தைகளுக்கு சுவையான திண்பண்டங்களைத் தர நினைக்கும் பெற்றோர்களுக்கும் இந்த பயிற்சி உதவி அளிக்கும். சீர்தானியங்கள், மரபு ரக அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வும்,  பயன்பாடும் பெருகி வரும் நிலையில் வீட்டிலிருந்தபடியே சீர் தானிய திண்பண்டங்களை மற்றவர்களுக்கு தயாரித்து கொடுக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். 

சிறுதானிய மரபு திண்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி

மாப்பிள்ளை சம்பா அரிசி  மிளகு தட்டுவடை ராகி முடக்கத்தான்       ஓலை பக்கோடா, தினை மிக்சர்  தக்காளி மிக்சர், புதினா மிக்சர் ஆகியவை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். ,இது தவிர இளநீர் முறுக்கு, செவ்வாழை முறுக்கு, சின்ன வெங்காய முறுக்கு, பாலக்கீரை முறுக்கு,  பூண்டு முறுக்கு, புதினா முறுக்கு, கறிவேப்பிலை முறுக்கு, கருப்பட்டி முறுக்கு, ஆகிய முறுக்கு வகைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். 

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

வல்லாரை முறுக்கு, தூதுவளை முறுக்கு, முடக்கத்தான் முறுக்கு ஆகிய மூலிகை முறுக்குகளும் தயாரிக்க பயிற்சி தரப்படுவதுடன், எண்ணெயில்லாத சீர்தானிய பூரி தயாரிப்பு பயிற்சியும் வழங்கப்படும். பாக்கெட்டில் அடைக்கப்படும் தீனிகள் நீண்ட நாட்களுக்கு (Storage ல்) மொறுமொறுப்பு குறையாமலும், எண்ணெய் சிக்கு வாடை வராமல் இருப்பதற்கான தயாரிப்பு நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். 

நம்ம ஊரு சந்தையின் பெருமைமிகு பங்கேற்பாளர்,  திரு.கணேசன் (Cavery foods, பரமத்தி வேலூர்) பயிற்சி அளிக்க உள்ளார்.  திரு. கணேசன் அவர்கள் சீர்தானியம், மரபு அரிசி வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திண்பண்டங்களை  சுவையாக ( சமையல் சோடா, நிறமூட்டி, சுவையூட்டி எதுவுமில்லாமல்) தயாரிப்பதிலும், அதன் றுட்பங்களை பிறருக்கு பயிற்றுவிப்பதிலும் வல்லவர்..நம்ம ஊரு சந்தையில், 2019 ல் ஆரம்பித்து இப்போது வரை, தன் திண்பண்டங்களுக்கென பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்..

பயன் பெற விழைவோர் முன்பதிவுக்கு : 9942118080 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். பயிற்சி பங்களிப்பாக: ரூ.500/- (25 நபர்கள் மட்டும்) தொகை  மட்டும் செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு முற்பகலில் பனம் பதனீர்,மதிய உணவு, மாலை கருப்பட்டி தேநீர் வழங்கப்படும். கலந்துகொள்பவர் அனைவருக்கும், "எண்ணெய் இல்லாத பூரி " சுவைக்க உண்டு. பயிற்சி நடைபெறும் இடம்: இயல்வாகை குழந்தைகள் நூலகம், ஊத்துக்குளி. 

பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய  பயிற்சி

நம் வானகம் 'சென்னையில்'  நடத்தும் பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய  பயிற்சி (பெண்கள் நலன் , குழந்தைகள் நலன்) வரும்  3-10-2021 ( ஞாயிறு ) நடைபெற உள்ளது. 

இதில், குழந்தைகளுக்கான ஆரோக்கிய பராமரிப்பு . பருவ கால நோய்களிலிருந்து குணமடைதல்  மாதவிடாய் கால உடல் நலம் மன நலம் பேணல்  அஞ்சறைப்பெட்டி வைத்தியம் அறிவோம்,  பிரசவகால ஆரோக்கியம் பேணுதல்  சுகப் பிரசவமும் / தாய் சேய் நலமும், உணவே மருந்தென அறிதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். 

Also Read: கொரோனா பக்களைவுக்கு தீர்வு தரும் பூனை மீசை மூலிகை

03-10-2021 அன்று காலை 9.30 முதல் 5.00 வரை நடைபெறும். முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய  9566667708 / 8939014123 என்ற மொபைலில் பதிவு செய்யவும். தாய்வழி அக்குபஞ்சர் சிகிச்சை மையம், சிறுகளத்தூர் ஸ்டாப் ,குன்றத்தூர் சென்னை.என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும். பயிற்சியில்  30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 1000 /- (non-refundable)  புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

(Gpay to  : 9566667708 ) 

(SBI bank A/c) :

R.PraveenKumar

Sb A/c no: 30773919011

State bank of India

Batlagundu Branch

Branch code : 11067

IFSC : SBIN0011067

https://vanagam.org/2021/09/28/சென்னையில்-வானகம்-நடத்து/?utm_source=WhatsApp

#AgriEvents #OrganicTraining #NaturalLife 


Comments


View More

Leave a Comments