புற்றுநோய் குறித்த 15 முக்கிய கேள்விகளும், பதில்களும்…

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலி நிகழ்ச்சியில் நேர்காணல் பதிவு செய்து ஒலிபரப்பினார்கள். அதில் பேசப்பட்ட விஷயங்களை பதிவாக எழுதியிருக்கிறேன்.

இரும்பு சத்து குறைபாடும் தீர்வும்…

இரும்பு சத்து நமது உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும். நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான மனநிலை, தசை வலிமை மற்றும் ஆற்றலுக்கு சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இரும்புச்சத்து முக்கியமானது.

டெங்கு பாதிப்பில் இருந்து மீள உதவும் கரிசலாங்கண்ணி கீரை…

சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

எந்த வகை காய்ச்சல் என கண்டறிவது எப்படி ?

தமிழ்நாட்டில் மழை பொழிந்து குளிர்ந்த பருவ காலம் நிலவும் வருடத்தின் இறுதி மாதங்களில் பல வைரஸ்கள் எளிதாகப் பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துவது இயல்பான ஒன்றாகும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரத்த தட்டணுக்கள்… சரி செய்ய பப்பாளி இலை சாறு முக்கியம்…

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் பயிற்சிகள்

வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும்போது, ​​உடல் அதிக கலோரிகளை எரிக்க முடியாமல், கொழுப்பு சேமிக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. சில உணவு முறை மாற்றங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும்.

வாரம் ஒருமுறை இறைச்சியை வீட்டில் சமைத்து உண்பது ஆபத்து அல்ல..

இதய நோயாளிகள் ,நீரிழிவு நோயாளிகள் , ரத்த கொதிப்பு நோயாளிகள் சிகப்பு இறைச்சி எனப்படும் கால்நடைகளின் மாமிசத்தை நம்பகமான கடையில் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை வாங்கி வீட்டில் சமைத்து உண்ணலாம்.

உடல் எடைகுறைப்பு உணவு முறையை பின்பற்றிய பெண் ஒருவரின் அனுபவ பகிர்வு…

உடல் எடையை குறைப்பதற்காக நான் கடந்த 1ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி கீழ் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றினேன். இதை பின்பற்றும் முன்பு உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உணவு முறைகள் குறித்து உங்கள் நுண்ணூட்ட சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை சூழலில் இனிதே நடைபெற்று முடிந்த மூலிகை மருத்துவ பயிற்சி…

இயற்கை வெளியில் மூலிகை மருத்துவப் பயிற்சி நடத்த வேண்டுமென்பது எனது நீண்டகால திட்டம். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையின் உரிமையாளர் ஐயா இறையழகன் அவர்களிடம் பேசும்போது, மறுப்பேதும் தெரிவிக்காமல் இசைவு தெரிவித்தார்.

உரிய பரிசோதனை, உணவுமுறை மாற்றமே உடல் நலத்தின் அடிப்படை…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் பல அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து மீண்டும் சில புரிதல்கள் தேவை என்பதையும் வலியுறுத்தி உள்ளது.

முடவாட்டுக்கால் கிழங்கு குறித்து அரிய தகவல்களை சொன்ன ஒன் இந்தியா தமிழ்…

மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றுக்கு தீர்வு தரும் வகையில் முடவாட்டுக்கால் கிழங்கை சூப் வைத்துக் குடிக்க வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வாழ்வியலை மேம்படுத்தும் இரண்டு பயிற்சிகளில் பங்கேற்க மறவாதீர்…

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.18000 மதிப்புள்ள உதவிகள்… -முழு தகவல்கள் தரும் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா!

பெண் மருத்துவரும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக Dr.முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு பணப்பயன் மற்றும் ஊட்டச்சத்து திட்டம் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.

சர்க்கரை நோய் பாதித்த ஏழை குழந்தைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை.. கோவை மருத்துவரின் கனிவான சேவை!

சர்க்கரை நோயால் பாதிகப்பட்ட ஏறத்தாழ 1200 குழந்தைகள் மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் அவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். கொஞ்ச செலவு அல்ல, மாதம் 3000 முதல் 20000 வரை நீரிழிவின் வீரியத்தை பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் செலவாகிறது, அனைத்தும் இலவசமாகவே செய்கிறார்.

சித்த மருத்துவ அனுபவ நுணுக்கங்களைச் சொல்லும் தமிழில் வெளியாகும் முதல் புத்தகம்…

​பாரம்பரிய சித்த மருத்துவம் முழுவதுமாக கல்லூரி பாடத்திட்டத்திற்குள் கொண்டு வரப்படவில்லை. பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கும், பட்டதாரி சித்த மருத்துவர்களுக்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழரின் மருத்துவ முறையை பாதுகாக்க முடியும்.

123