கோடைகாலத்தில் நம் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகள் என்ன தெரியுமா?

கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவின் மூலம் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். வெப்பமான காலநிலையில், வியர்வை மூலம் நம் உடலில் உள்ள நீர் சத்து ஆற்றலான எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகிறது. எனவே, கோடைகாலத்தில் நாம் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவு உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓஎன்டிசி தளத்தில் இணைக்கப்படும் தெரு உணவு விற்பனையாளர்கள்…

மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் தளம் டெல்லி மற்றும் லக்னோவில் தெரு உணவு விற்பனையாளர்களை தமது தளத்தில் பரிசோதனை அடிப்படையில் இணைக்க உள்ளது.

1.8 கி.மீக்கு ரூ.150 டெலிவரி கட்டணம் வாங்கிய ஸ்விக்கி

ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து உணவு டெலிவரிக்காக 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.150 கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

200 உணவகங்களில் விதிமீறல் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் தொழில்துறை சாயமான ரோடமைன்-பியின் தடயங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

ஆரோக்கியசுவை அங்காடி வாட்ஸ் ஆப் சமூக குழுவில் இணைவதற்கான அழைப்பு…

ஆரோக்கிய சுவை இணைய இதழ் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தொடங்கப்பட்டது. உடல்நலத்தின் அவசியத்தையும், ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியசுவை செயல்பட்டு வருகிறது.

நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி

உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது.

500வது நாளாக தொடரும் நடிகர் கார்த்தியின் குறைந்த விலை உணவு சேவை

நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக கடந்த 500 நாட்களாக தினமும் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகரம் எங்கும் மணிக்கணக்காக அலைந்து திரியும் ஸ்விக்கி, சொமாட்டோ, கொரியர் சர்வீஸ் செய்யும் நபர்கள், தொழிலாளர்கள் இங்கு உணவு உண்கின்றனர்.

சர்க்கரை இல்லாத விருந்து…மலைவாழ் மக்களின் திருமண விழா

மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியல் என்பது தரைப்பகுதியில் வாழும் மக்களிடம் இருந்து மிகவும் வேறுபட்டதாகும். அவர்களின் பல்வேறு நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு உதாரணமாக திகழ்கின்றன. அண்மையில் முகநூலில் வைரலான கொல்லிமலையில் நடைபெற்ற ஒரு திருமண விழா விருந்து குறித்த தகவல்களை இங்கே பதிவு செய்கின்றோம்.

மென்மையான நீர் தோசை செய்ய எளிமையான டிப்ஸ்

ஒரு டம்ளரில் மாவை எடுத்து ரவா தோசை போல (அ)கரண்டியால் கல்லில் மாவை ஊற்றி கல்லை ஆப்பத்திற்கு சுற்றுவது போல சூற்றி தோசை வார்த்து வேகவிடவும்

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு…

தினந்தோறும் நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியாகும் முக்கியமான செய்திகளின் தொகுப்பு இங்கே இடம் பெறும். இந்த செய்திகளை மேலும் விரிவாகப் படிக்க செய்தி எடுக்கப்பட்ட இணையதளங்களின் இணைப்புகளும் வழங்கப்படுகின்றன. செய்தியின் முடிவில் உள்ள இணைப்பை கிளிக் செய்து விரிவாக செய்திகளை படிக்கலாம்.

“முட்டைக்ரேவியை சூடாக ஆப்பத்தின் மீது ஊற்றினால் ஆப்பம் மென்மையாக ருசியாக இருக்கும்”

ஆப்பம்னா தேங்காய் பால் தான் காம்போவா இருக்கணுமா கொஞ்சம் மாத்தி பார்க்கலாமேன்னு ரசனையா ஒருத்தர் கண்டுபிடிச்சதுதான் இந்த முட்டை க்ரேவி! பொதுவா ஆப்பத்திற்கு கறிக் குழம்பு வகைகள் எல்லாம் பட்டாசா இருந்தாலும், முட்டை க்ரேவிக்குன்னு ஒரு தனி ருசியே இருக்கு.

அண்டை மாநிலங்களில் கள் விற்க அனுமதி..தமிழ்நாட்டில் ஏன் இல்லை? பின்னணியை விளக்கும் பனையேறி பாண்டியன்!

சென்னை எழும்பூரில் உள்ள சமூகவியல் பள்ளியில் அண்மையில் பனை பொருட்கள் விற்பனை குறித்த நிகழ்வுக்காக வந்திருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பனையேறி திரு.பாண்டியன் அவர்களை சந்தித்து உரையாடினேன்.