நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ உதவும் உணவுகள்...

ஆரோக்கியமற்ற மக்கள் தொகையுடன் இந்தியா இளமையாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று இதனை குறிப்பிடுகின்றனர்.இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கக் கூடும்.உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன உணவுகளை உண்பது என்று பார்க்கலாம்.

கொரோனா தொற்றின் போது கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்

கொரோனா பயம் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. லேசா தும்மினாலோ, சளி பிடிச்சாலோ, உடம்பு சுட்டுக்கெடந்தாலோ கொரோனாவாத்தான் இருக்கும்னு பேச்சு. சளி, காய்ச்சல் மற்றும் கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் சிலருக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் ஆலோசனை சொல்கிறேன். பலருக்கும் நல்ல முன்னேற்றம். ஆனால், தேவையற்ற பயம் சிலரை தொற்றிக்கொள்கிறது.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஏற்ற உணவுப் பழக்கங்கள்

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமின்றி சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்தல் முக்கியமானதாகும். மேலும் அதிக குடிநீரை அருந்துவதும் முக்கியமானதாகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

தலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….

நமது வாழ்வியல் என்பது மன அழுத்தம் நிறைந்ததாக மாறி விட்டது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது வித்தியாசமான உணவுப் பழக்கம் ஆகியவைதான் அதற்கு காரணம். தலை வலிக்கிறது என்று சொல்லிக் கொள்வதே ஒரு பெருமை என்று சிலர் கருதுகின்றனர். அந்த அளவுக்கு அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்பதை காட்டிக் கொள்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் செயல்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ எல்லோருக்கும் தெரியும். ஆனா அந்த பூவோட மகிமை நிறையபேருக்கு தெரியாது. இன்னைக்கு மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வர்ற நோய்கள்ல இருதய நோயும் ஒண்ணு. இதுக்கெல்லாம் செம்பருத்தி பூ கைகண்ட மருந்து.

கோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி

நன்னாரி வேரை நன்றாக இடித்து, பாக்களவு பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட, தேகத்தில் சுருக்கங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் உண்டாகாது என்கிறது மூலிகை கற்பமுறை. தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுவதோடு, இரத்தத்தையும் தூய்மையாக்க உதவும் ’மூலிகை சுத்திகரிப்பான்’ நன்னாரி. ஒவ்வொரு முறை உணவருந்திய பிறகும், நன்னாரி வேர் ஊறிய நீரைக்கொண்டு வாய்க்கொப்பளிக்க, பற்களும் ஈறுகளும் பலமடையும்.

சென்னையில் சிறப்பான தரமான இட்லி சாப்பிட ஏற்ற இடங்கள் எது தெரியுமா?

இட்லி என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கியமான ஆவியில் வேக வைக்கப்படும் ஆரோக்கியமான உணவு. சென்னையில் குறிப்பிட்ட சில உணவகங்களில் இட்லி மிருதுவாகவும், சூடாகவும், தொட்டுக்கொள்ள சட்னி வகைகள், பொடி, சாம்பார் என அசத்தல் சைட் டிஷ் களுடன் சாப்பிடலாம். அப்படி சில உணவகங்களை இங்கே பார்க்கலாம்.

சீந்தில்கொடி, ஆரஞ்சுபழம், விரலி மஞ்சள்.. கொரோனாவை விரட்டும் அற்புத இயற்கை மருத்துவம்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அது நம்மிடம் ஏற்படுத்தும் காய்ச்சல், சளி, தொண்டைபுண் ஆகியவற்றின் தாக்கத்துக்கான மருத்துகளைத்தான் தருகின்றனர். காய்ச்சல், சளி, தொண்டைபுண் ஆகியவற்றுக்கு இயற்கை மருத்துவ ஆர்வலர் பெல்சின் அவர்கள் எளிய மருத்துவம் சொல்கிறார்.

குரல் வளத்துக்கு ஆடாதோடை எனும் இயற்கை தந்த வரம்

‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவ பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது.

ஜீரண கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழத்தின் மகிமை..

இலந்தைப்பழம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அளவுல சின்னதா ரொம்பவும் விலை குறைவான இந்த பழத்தை யாரும் பெருசா வாங்கி சாப்பிடுறதில்லை. ஏழைகள் மட்டுமே பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவாங்க. சென்னை மாதிரி இடங்கள்ல சீமை இலந்தைனு ஒண்ணு விப்பாங்க, அதை வாங்கி சாப்பிடுவாங்க.

உ்ங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்

ஆரோக்கியமான சமசீரான உணவு உண்பதன் மூலம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆரோகியமான சமச்சீரான உணவு உண்பதன் வாயிலாக நாள்பட்ட சீறுநீரகப் பிரச்னையில் இருந்து கூட விடுபடலாம். அனைத்து வகையான கழிவுகள், அசுத்தமின்மையையும் அகற்றி ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கு சிறுநீரகம் சீராக செயல்படுவது முக்கியமாகும்.