தயிர் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க கூடிய ஒரு உணவு. ஆயுர்வேதத்தின் படி, தயிர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, தயிர் சாதம் முதல் மோர் குழம்பு வரை சில அருமையான, எளிதான மற்றும் சுவாரஸ்யமான தயிர் ரெசிபிகளை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
உணவு, நீர் போன்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாகி வரும் காலத்தை எட்டியுள்ளோம். பெரும்பாலான மக்கள் உணவுப் பற்றாக்குறையின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும், உலகின் சில பிராந்தியங்களில் உணவுக்கான அணுகல் ஒரு ஆடம்பரமாக மாறியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடல் எடையை பாரமரிப்பது என்பது பெரும் சவாலானதாகவே இருக்கிறது. பொது ஊரடங்கு காரணமாக பூங்காங்கள், கடற்கரை அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
நோயைக் கண்டு உலகமே பயந்து நடுங்கும் சூழலில், எதை பற்றியும் கவலைப்படாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவத்திற்காக படித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் சித்த மருத்துவ சகோதர சகோதரிகள் உதவி வருகின்றனர்.
கெட்ட கொழுப்பு அல்லது உயர் கொழுப்பு காரணமாக பல உடல்நலக் கோளாறுகள் உருவாகின்றன. உயர் கொழுப்பு காரணமாகத்தான் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகின்றன. இது தவிர உயர் கொழுப்பு காரணமாக இதய நோய்கள் ஏற்படுகின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உங்கள் குழந்தைகளின் நினைவாற்றல், மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த சரியான உணவுகளை நீங்கள் கொடுக்க வேண்டும். மூளை, உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும்.
வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை உபயோகித்தால் அதனால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமான பலன்கள் ஏராளம் உள்ளன. கருப்பட்டியில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவ ஆலோசகர் திரு.மரியபெல்சன் தந்துள்ள தகவல்கள் நமக்கு பெரும் அளவு நன்மை தரக்கூடியவை.
நெஸ்லே தனது முக்கிய உணவு மற்றும் பான தயாரிப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை “அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய வரையறையை” பூர்த்தி செய்யவில்லை என்பதையும், சில பிரிவுகள் மற்றும் தயாரிப்புகள் எவ்வளவு “புதுப்பித்தாலும்” “ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்காது” என்பதையும் தனது ஆராய்ச்சி குறித்த ஆவணத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
எப்போதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று மனநிலையிலேயே சிலர் இருப்பார்கள். இத்தையகவர்கள் எவ்வளவு சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருப்பார்கள். . நீங்களும் தொடர்ந்து பசியோடு இருப்பது போலவே தோன்றும். ஏன் அப்படி தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதனை தவிர்ப்பது நல்லது.
முன் தயாரிப்பு இல்லாமல் மளிகைக்கடைக்குப் போய் கையில் கிடைக்கும் பொருட்களை அள்ளிப்போட்டுக்கொண்டு வரும் போது நம் மாதாந்திர செலவை மீறி பட்ஜெட் சென்று விடக் கூடும். சிக்கனம் என்ற பெயரில் முக்கியமான அத்தியாவசியமான பொருட்களை வாங்காமல் விட்டு விடுவதும் உண்டு. இப்படி நேராமல் இருக்க மளிகைக்கடைக்கு போகும் முன்பு சில முன் தயாரிப்புகளை செய்ய வேண்டியது முக்கியம்.
நீர் சத்து என்பது மனித உடலுக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று அதே சமயம் முக்கியமானதாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதியாக உடலில் நீர்சத்து நிலைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
கோடை வெயிலில் தினமும் மாம்பழம் சாப்பிடுவதை நம்மால் தவிர்க்க முடியாது. பழங்களின் அரசனான மாம்பழத்தை உண்பதால் உடல் குண்டாகி விடும் என்றும் சிலர் சொல்கின்றனர். இது உண்மையா, பொய்யா என்பதை தெரிந்து கொள்வது நல்லது.












