பாரம்பர்யமான உணவு வகைகளிலும், சிற்றுண்டி வகைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக நாம் இன்றைக்கு தெருதோறும் தேநீர் கடைகளில் சாப்பிடும் உளுந்து வடை அல்லது மெது வடையில் எவ்ளவு சத்துகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஆன்மீகத்தில் வில்வ இலைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வில்வ இலையை மாலையாக கோர்த்து சிவனுக்கு அணிவிப்பார்கள். வில்வத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வில்வபழம், இலை எல்லாவற்றிலம் சத்துகள் உள்ளன. புரதம், தாதுப்பொருட்கள், மாவுப்பொருட்கள், சுண்ணாம்பு, கொழுப்பு சத்துகள் உள்ளன. வைட்டமின் ஈ, இரும்பு சத்து போன்ற சத்துகளும் உள்ளன.
கற்றாழை உடல் சூட்டைத் தணிப்பதுடன் மேகவெட்டை, பெண்களுக்கான மாதவிடாய்க்கோளாறு, ஆண் பெண் இருவருக்கும் சிறுநீர் கழிக்கும் இடங்களில் வரக்கூடிய எரிச்சல், வலி உள்ளிட்ட பல்வேறு நலக்குறைவுகளில் இருந்து பாதுகாக்கும்
கொத்தவரை பொறியல் அல்லதுகூட்டு வைக்கும்போது சிலருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால், அதில் உள்ள சத்துகளையும் அதை வத்தலாக தயாரித்து உண்ணலாம் என்று தெரிந்தால் பின்னர் கொத்தவரையை விடமாட்டீர்கள். ஆம் கொத்தவரையில் உள்ள சத்துகளையும்,அதனை வத்தலாக செய்வது பற்றியும் பார்க்கலாம்.
நமது பாரம்பர்யத்தில் இளநீர், நுங்கு போன்றவை இயற்கையிலேயே நமது தாகம் தணித்து வருகின்றன. காட்சி ஊடகங்களின் வாயிலாக விளம்பர தாக்கத்தின் வாயிலாக கலர், கலரான தோற்றத்தில் சந்தைக்கு வந்தவை மென்பானங்கள். மென்பானத்தில் உள்ள ஆபத்துகள் நமக்கு கேடாக வந்திருக்கிறது.
தாய்ப்பாலுக்கு எந்த பாலும் மாற்றாகாது. ’தாய்ப்பாலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் எங்கள் நிறுவன பால் பவுடரில் இருக்கின்றன…’ என்று கதை கதையாய் அளந்து விட்டாலும் தாய்ப்பாலுக்கு இணையாக எதையும் குறிப்பிட முடியாது.
பாடி ஸ்டிராங்க், பேஸ்மெண்ட் வீக் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலுவை உதாரணம் காட்டும் நகைச்சுவை காட்சி இன்றளவும் நம்மால் ரசிக்கப்படுகிறது. இதனை நகைச்சுவையாக மட்டும் நாம் கருத வேண்டியதில்லை. நமது உடலுக்கு அடித்தளம் போன்றவைதான் கால்களும் அதில் உள்ள மூட்டுகளும். நமது உடலின் எடையை தாங்கக் கூடியவை மூட்டுகள்தான்.
ஒரு நாளின் தொடக்கம் என்பது நல்ல தேநீர் ஆக அல்லது ஒரு நல்ல சுவையான காஃபியாக இருப்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. எனவே வீட்டிலும், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதும் தேநீர் கடை யை தேடுவது நமது வழக்கம்.
இயற்கையின் கொடையில் விளையும் பழங்கள் எண்ணற்ற சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளன. மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் சில பழங்கள் சில நோய்களை தீர்க்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. அத்தகைய பழங்களில் துரியன்பழமும் ஒன்றாம். இந்த பழம் பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று இருக்கும். ஆனால், பலாப்பழம் அளவுக்கு பெரியதல்ல. சிறியதாகத்தான் இருக்கும்.
இயற்கை வேளாண்மை மூலவர்களில் ஒருவரான புளியங்குடி கோமதிநாயகம் அகவை முதிர்ச்சியின் காரணமாக 28ம் தேதி இரவு 10 மணியளவில் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அரிசி மாவால் செய்யப்படும் முறுக்கு எப்போதுமே சுவையான மொறு மொறுப்பான பாரம்பர்ய நொறுக்குத் தீனிகளில் முதன்மையானதாகும். வீட்டிலேயே எளிதாக செய்து சாப்பிடுவதற்கும் ஏற்றதாக இருக்கிறது. முறுக்கிலேயே பல வகைகள் உள்ளன,
ஐசியுவில் இருந்த 80வயதுமுதியவரை ஆங்கில மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் சித்தமருத்துவத்தின் விளைவாக நலம் பெற்றிருக்கிறார். பாரம்பர்ய மருத்துவத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு சாட்சியாக இந்த சம்பவம் திகழ்கிறது..












