ஆனந்தம் என்ற அறக்கட்டளையுடன் சேர்ந்து, சைதாபேட்டை பகுதி திமுகவும் இணைந்து இந்த திட்டத்தை சைதாபேட்டையில் மட்டும் தொடங்கி உள்ளன. காலை 8 மணி வரை கால உணவும், மதியம் 12 மணி முதல் அரை மணி நேரத்துக்கு மதிய உணவும், இரவு உணவும் வழங்கப்படுகிறது.
நம் உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என்பது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிந்து விடும் செயல் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கு கூடுதல் நாட்களும் அவகாசமும் தேவைப்படும். நமது உணவுப் பழக்க வழக்கங்களும், நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையுமே நமது நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கிறது.
தென்மேற்கு பருவமை தொடங்கி உள்ள நிலையில் தண்ணீரில் வளரும் ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு நேரிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே டெங்கு பற்றி அறிந்து அதற்கான பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை, நீங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் விரைவாக குணமடைய உதவும் சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிக அளவு உண்ணும்போது அலர்ஜி ஏற்படாது .நம் உடலின் ஆக்சிஜனேற்றத்துக்கான பாதிப்புகள் குறைந்து வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கிறது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கலாம்,
சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் ஏ, சி ஆகியவை உடம்பில் சேருவதால் உடல் பொலிவுறும். மாம்பழத்தில் உள்ள தாது உப்புகள் ரத்தத்தில் சர்க்கரையுடன் நேரடியாக கலக்கிறது. இதனால் செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன.
சென்னை மேற்கு மாம்பலத்தில் எஸ்.எம்.இயற்கை உணவுபொருட்கள் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க செய்வது மட்டுமே இதன் நோக்கம்.
இளைஞர்களின் வாழ்க்கை சூழல் காரணமாக அவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கிறது. வேலை, படிப்பு என்று அக்கறை காட்டும் இளைய தலைமுறை தங்கள் உடல்நலனை காப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அவசரத்தில் இருக்கிறேன், வேலையில் இருக்கிறேன் என்ற பெயரில் துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கொரோனா அச்சத்தில் இருப்பவர்களுக்காக நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ்... முருங்கை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கொரோனா தொற்று முதல் அலையின்போது திருப்பத்தூரில் அரசின் சித்தமருத்துவமையத்தில் மிகச்சிறப்பான சிகிச்சை தரப்பட்டது. இயற்கை வாழ்வியலோடு இணைந்த சிகிச்சை முறைகளால் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்பினர்.
முக்கியமா ஆளிமாவை சாப்பிட்டா நிறைய தண்ணி குடிக்கணும். இதை தினமும் தொடர்ந்து செஞ்சா அதோட பலனை முழுமையா அனுபவிக்கலாம். இது மலச்சிக்கல், கெட்ட கொழுப்பு, மார்பகப் புற்று நோய், நீரழிவு நோய், ஞாபக மறதி மட்டுமில்லாம உடம்புல உள்ள கழிவுகளை வெளியேத்துறதுக்கும் ஏத்த ஒரு உணவு.
கோவையை சேர்ந்த ருதம்பராபவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் சார்பில் கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் கடந்த 23.4.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மோர்ப் பந்தல் நீர்ப் பந்தல் போல, மூலிகைப் பந்தல்... திருப்பத்தூர் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் பாரம்பரிய மூலிகைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது...












