உண்ணும் உணவுகளாலே, உடல் வளர்க்கப்படுகின்றது எனும் வாழ்வியலின் அடிப்படை தத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் நம்மை , இயற்கை வாழ்வியல் பாதையில் பயணிக்க அழைக்கின்றது. இயற்கை வாழ்வியலுக்கு திரும்புவோம், பிணியில்லா சமூகம் படைத்திடுவோம் என இந்த திருவிழாவுக்கு வரும்படி போளூர் அர்வின் ஃபார்ம்ஸ் அனைவரையும் அழைக்கிறது.
கோவையில் செஞ்சோலை நடத்தும் மரபுவழி திண்பண்டங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. 10 நபர்களுக்கு மட்டுமே நடைபெறும் இந்த பயிற்சியில் இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பயிற்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதற்கான கட்டணம் என்பது பரஸ்பரம் பகிர்தல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளது.
எது சரியான குறைந்த கலோரி உணவு என்பதை தெரிந்தும், அது சாப்பிட்ட திருப்தியை அளிக்கிறதா என்று அறிந்தும் சாப்பிடுவது மிகவும் முக்கியம். குறைந்த கலோரி கொண்ட அதேசமயம் உங்கள் பசியையும் திருப்தி படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டியதுதான் உடல் எடை குறைப்பில் முக்கியமானது.
கொரோனா கொடுமையினால் மட்டுமல்ல. நாம் வாழும் வீட்டின் அருகே அருகாமைப் பகுதிகளில், கோவில்களில், மசூதிகளில், ஆலயங்களில் உணவின்றி கையேந்தும் பலரை தினந்தோறும் பாரத்து வருகின்றோம். பசிக்காமலேயே பார்டி என்ற பெயரில் சாப்பிட வேண்டுமே என்று கடனுக்கு சாப்பிட்டுவிட்டு ஒரு பிரபல ரெஸ்டாரெண்டில் இருந்து வெளியே வரும்போது நம் எதிரே கையேந்தும் எத்தனையோ பேரை இன்றைக்கும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். கொரோனாவின் கொடூரத்தால் இந்த எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து விட்டது.
தர்பூசணி பழத்தில் அதன் சதைகள் செக்கச்செவேலென இருக்க வேண்டும் என்றும், அதை மட்டுமே ஜூஸாக்கி சாப்பிடுவதையும் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், தர்பூசணியின் தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதையிலும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.
காலையில் காபி டீக்கு பதிலாக வறுத்து ஏலக்காயைப் போட்டு அரைத்த கம்பு மாவை இரண்டு ஸ்பூன் எடுத்து நீரில் கரைத்து கூழ் போல நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். அல்லது ஒரு லிட்டர் அளவுக்கு நீர் கலந்த பாலில் இரண்டு ஸ்பூன் கம்பு மாவை கரைத்து ஊற்றி கொதிக்கவைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் பாயசம் போன்ற சுவையாக இருக்கும் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும்.
தவறான உணவுப்பழக்கம், போதிய ஊட்ட உணவுகளை உண்ணாதது என பல காரணங்களால் கருப்பை கட்டி பிரச்சினை வந்து பெண்களை பாடாய்ப்படுத்துகிறது.
விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தை பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அவ்வகையில் உதட்டிற்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை!… கூடவே குளிர்ச்சிக்கு பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, இப்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.
இந்திய பாரம்பர்யத்தில் மஞ்சள் மங்கலகரமாக பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் மஞ்சள் ஒரு அற்புதமான மருந்தாக பயன்படுகிறது.
குஷ்பு இட்லி என இட்லிக்கு நடிகையின் பெயர் வைத்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். நடிகர், நடிகையரில் பலர் இன்றளவும் உணவு பிரியர்களாக இருக்கின்றனர். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்று வரை பலர் உணவு பிரியர்கள்தான்.
பூசணிக்காய் என்று சொன்னதுமே குண்டான உடல்வாகு உள்ளவர்களைப்பார்த்து கேலி, கிண்டலுக்கான வார்த்தையாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், பூசணிக்காயின் மகத்துவம் தெரிந்தவர்கள் இனி அப்படி பேசமாட்டார்கள். குறிப்பாக, வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி மட்டுமல்லாமல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
டெல்லியில் ஒரு ரூபாய்க்கு உணவு அளிக்கும் உன்னத மனிதர்...












