காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் (சித்தர்கள் சொன்ன காலை உணவின் தத்துவமும், அறிவியலும்)

காலை உணவு ஏன் அவசியம்... காலை டிபனுக்குத் தேவையான இயற்கை உணவுப் பதார்த்தங்கள் எப்படி இருக்க வேண்டும்... இது குறித்து சித்த மருத்துவம் சொல்கிறது... அத்தனை அறிவியல் உண்மைகளையும் பார்ப்போம்!

குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகள் என்ன...வல்லுநர்கள் சொல்வதை கேளுங்கள்...

மழை பெய்யும்போதோ அல்லது குளிரின் போதோ மொறுமொறுப்பான வறுத்த உணவுகளை தின்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால், இந்த உணவுகளால் உங்கள் உடல் எடை கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நிறைவுறா கொழுப்பின் அனுமதி அளவு 3 சதவிகிதமாக குறைப்பு...

உணவுப் பொருட்களில் உள்ள நிறைவுறா கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை 5 சதவிகித த்தில் இருந்து 3 சதவிகிதமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு குறைத்திருக்கிறது. உணவு வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கையை மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை இப்போது நிறைவேற்றி இருக்கிறது.

பெண்களுக்கான ஆரோக்கியமான உணவு முறை என்ன தெரியுமா?

இன்றைய உலகில் பெண்கள் வீட்டிலும் வேலை செய்து விட்டு, அலுவலகத்துக்கும் செல்பவர்களாக இருக்கின்றனர். எனவே, பெண்கள் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். என்னென்ன சத்துமிக்க உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். சத்துமிக்க உணவுகள் என்று நீங்கள் கடைகளில் போய் வாங்க வேண்டியதில்லை. ஏற்கனவே நீங்கள் வீட்டுக்கு வாங்கும் பொருட்களிலேயே சத்துகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

காலையில் எதை சாப்பிட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் தெரியுமா?

ஒரு நாளின் காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் நம் உடலின் ஆற்றலின் தொடக்கமாக அமைகிறது. எனவே காலை உணவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். நான் ரொம்ப பிசி என்றோ அல்லது நான் எப்போதுமே காலை உணவை சாப்பிடமாட்டேன் என்றோ கூறி கொள்வது நீங்களே உங்கள் உடலுக்கு தீங்கு செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

2020 ஆம் ஆண்டு உணவு செயலிகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது 19 லட்சம் வெஜ் பிரியாணி

இனி இப்படி ஒரு ஆண்டு நமக்கு தேவையில்லை எனும் வகையில் கொரோனா ஆண்டாக இருந்தது கடந்த 2020 ஆம் ஆண்டு. வீட்டிலேயே முடங்கி இருந்த பெரும்பாலான மக்கள் உணவு செயலிகளின் வாயிலாக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் உணவு செயலிகளின் வழியே ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

கருவாடு சாப்பிட்டிருக்கிறீர்களா?

கருவாடு என்பது பலர் அறிந்திருக்க வாய்புண்டு ஆனால் நாம் உண்ணும் அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து மிக மிக குறைவான உணவு கருவாடு தான் என்பது பலரும் அறியாதது.

பனிகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள்

பனிப்பிரதேசங்களைவிட நம் பகுதியில் பனியின் அளவு குறைவே என்றாலும், அந்தப் பனியை எதிர்கொள்வதில் நாம் காட்டும் அக்கறையின்மையே எல்லாவற்றுக்கும் காரணம். மாலை முதல் விடியற்காலை வரையிலான நேரங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.

புத்தாண்டின் போது சோமோட்டோ உணவு செயலி வாயிலாக நிமிடத்துக்கு 4 ஆயிரம் ஆர்டர்கள்...

கொரோனா தொற்று காரணமாக வீணாக அலையும் பழக்கம் ம க்களிடம் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தாண்டு அன்று ஜாலியாக உணவகங்களுக்குச் சென்று உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஆண்டு வீட்டில் இருந்தபடியே உணவு விநியோக செயலிகளில் உணவை ஆர்டர் செய்து உண்டனர்.

உணவில் சேர்த்துக்கொள்ளும் கசகசாவால் எத்தனை நன்மைகள் தெரியுமா?

கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். கசகசாவின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம். வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும். கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

மதிய உணவில் ரசம் சாப்பிடுவது முக்கியம் ஏன் என்று தெரியுமா?

நமது பாரம்பர்ய உணவு முறையின்படி வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி ஆகியவற்றை உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டு்ம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில் உடல்நலத்துக்கு நன்மை பயக்கின்றன.

கைப்பக்குவத்தின் ருசியில் சமையல் தொழிலில் சாதித்த பெண்

கணவருடன் ஆலோசனை செய்து கோகுல்சன் ஃபுட் மற்றும் பிராசஸிங் பிரிவை தொடங்கினார். ராணிதா உணவு வகைகளை தயாரிப்பது என்றும், டெலிவரி உள்ளிட்டவைகளை கணவர் பார்த்துக் கொள்வது என்றும் முடிவானது. அதன்படி அவர்களது உணவு நிறுவனம் கொஞ்சம், கொஞ்சமாக வளரத் தொடங்கியது. விரைவிலேயே ஆயிரம் இட்லிகள் தயாரித்துத் தரும்படி ஒரு உணவகத்தில் இருந்து ஆர்டர் கிடைத்தது.