மயிலாப்பூர் சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த், கிருத்திகா இருவரும் வீட்டில் இருந்த படி ஓய்வு நேரத்தில் பிடி கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து வந்தனர். வீட்டின் வாசலிலேயே வைத்து விற்பனை செய்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல உணவகங்களில் உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படுகின்றன. மதிய உணவுக்காக சாதம் எடுத்து வரும் பாத்திரம் கூட இப்போது பாக்கு மட்டையாக மாறி இருக்கிறது. இது கொரோனா கொண்டு வந்த ஆரோக்கியமான நன்மைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா காலத்துக்கு முன்பு பெரும்பாலான உணவகங்கள் பிளாஸ்டிக் பொருட்களை சார்ந்து செயல்பட்டன.
சத்துகளை எடுத்த பின்னர் வெறும் சக்கையான உணவுகளை எப்போதுமே உண்ணாதீர்கள். அரிசி வெள்ளை வெளேர் என்று இருந்தால்தான் சாப்பிடுகின்றோம். இதனால், அரிசியில் இருக்கும் சத்துகள் எல்லாம் போய் வெறும் சக்கையான உணவைத்தான் உட்கொள்கின்றோம். வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தான, கேக் இவை எல்லாமே கெடுதல்தான். மைதா அல்லது கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இவற்றால் எந்த உடல் நலனும் இல்லை. உடல் நலனுக்குத்தான் கேடு. உடலில் சக்கரை அளவையும் இந்த உணவுகள் அதிகரிக்கக் கூடும்.
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்.ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்.உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.உடலை உரமாக்கும்.உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
எளியவர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு எளிய உணவுகளை உண்டு தங்களது பசியைப் போக்குகின்றனர். ஆனால், அவர்களுக்கும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். சென்னை அருகே முன்னாள் ராணுவத்தினர் இணைந்து குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்து அசத்தி இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு இந்த சேவையை வழங்கியதால் பசியாறிய எளியவர்கள் பலர் அவர்களை வாழ்த்தினர்.
கிரிக்கெட் வீர ரும், பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதி எம்.பி-யுமான கவுதம் கம்பீர் இந்த மதிய உணவுத்திட்டத்தை தமது சொந்த செலவில் நாளை தொடங்க உள்ளார். அவர் திறக்க உள்ள கேன்டீனில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
புறநகர் மின் ரயிலிலோ அல்லது விரைவு ரயிலிலோ பயணிக்கும் போது ரயில் பாதையை ஒட்டி நிறைய பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் தட்டுகள் எல்லாம் கிடப்பதை நாம் பார்க்கலாம். ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலில் தரும் உணவுகளை உண்டு விட்டு அப்படியே பிளாஸ்டிக்கை வெளியே தூக்கிப் போடுவார்கள். நாமும் அப்படித்தான் செய்திருப்போம். இனி அது போன்று செய்யத் தேவையில்லை.
இரவு உணவு அல்லது டின்னர் எப்போது சாப்பிட வேண்டும் என்று வழிமுறைகள் உள்ளன. நமது பாரம்பர்யப்படி இரவு விளக்கேற்றும் முன்பு, அதாவது வீட்டில் மின் விளக்குகளைப் போடும் முன்பு இரவு உணவை முடிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் இது சாத்தியமில்லை. இப்போதெல்லாம் மின்நைட் உணவகங்கள் என்ற பெயரில் நள்ளிரவு திறக்கப்படும் உணவகங்கள் விடியவிடிய செயல்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற கலாசாரமும் அதிகரித்து விட்டது. ஆனால், இவையெல்லாம் உடல்நலத்துக்கு தீங்கானதுதான்.
பொது வெளியில் நடமாடுவது குறைந்து வீட்டுக்குள் அடைந்து கிடைக்கும் நடைமுறைக்கு நாம் எல்லோருமே பழகி விட்டோம். கொரோனா காலத்தில் நடைபெற்ற பல திருமணங்கள் எளிமையான முறையில் மணமகன், மணமகள் குடும்பத்தினரை கொண்டு மட்டுமே நடந்தன. சில திருமணங்கள் நெருங்கிய உறவினர்களை அழைத்து நடத்தப்பட்டன. இன்னும் சில திருமணங்கள் ஆன்லைனில் நடைபெற்றன. இப்போது இன்னொரு நியூநார்மல் ஒன்று தொடங்கி இருக்கிறது. திருமணத்துக்கு போக முடியவில்லையே என்ற கவலை ஒரு புறம் இருக்க திருமண விருந்தை ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் பலருக்கு இருக்கும்.
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் சாலையோர உணவுக்கடைகளை ஸ்விக்கி தமது செயலியில் இணைக்க உள்ளது.
அவசரகால, டிஜிட்டல் உலகில் இளம் வயதினருக்கே மாரடைப்பு போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவில் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் உட்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
நமக்கு ஆற்றல் தருவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. மனம் சோம்பலாக உணரும் போது நடைபயிற்சி செல்லக் கூட நாம் தயங்குவோம். நடைபயிற்சி செல்லாத நாளில் சோம்பல் அதிகரிக்கும். சோம்பல் தன்மையை குறைத்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு சில உணவுகள் உள்ள. அவை என்னவென்று பார்க்கலாம்.












