அறுசுவைகளில் இனிப்புக்கு என்றும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிக இனிப்பு எடுத்துக் கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
வளரும் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கும் வகையில் உணவு கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்பட்டால் சில அறிகுறிகள் மூலம் குறைபாட்டைக் கண்டறியலாம்.
அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தவிர்த்து ஆலிவ், சோயா, சூரியகாந்தி அல்லது சோள எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
கால்சியம் மற்றும் ஒமேகா 3 நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவுகளை உட்கொள்வது நல்லது. இயற்கையை அடிப்படையாக க் கொண்ட உணவு முறைகளே பீரியட்ஸ் காலகட்டத்துக்குப் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழி கூறுகிறது. ஆனால், இன்றைய அவசரக்கால யுகத்தில் பலருக்கு ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்பட்டுள்ளது. ரத்தக்கொதிப்பு, இதயநோய் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதை முற்றிலும் குறைப்பது அல்லது தங்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப உப்பின் அளவை குறைத்துக் கொள்வது என்று உணவுப் பழகத்தை மேற்கொள்கின்றனர்.
இந்திய உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள சரியானவற்றை உண்ணுங்கள் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி உணவுகள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். உங்கள் உள்ளூரில் கிடைக்கும் உணவுகளை உண்ணுங்கள். முழு தானியங்கள், புதிய மற்றும் பருவகால காய்கறிகள், பழங்களை உண்ணுங்கள். பல்வேறு வகையான உணவுகள் உண்ணுவதை உறுதிப்படுத்துங்கள். பாரம்பர்ய உணவுகள் மற்றும் உணவு தயாரிப்பில் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றுங்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் ஆரோக்கியமான சரிவிகித சத்துணவு என்ற தலைப்பில் நாம் பின்பற்றவேண்டிய குறிப்புகள் உள்ளன. இந்த கொரோனா பரவல் காலத்தில் எந்த உணவு ஆரோக்கியமாக இருக்கும் என்று தினந்தோறும் பலருக்குச் சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனைத் தெளிவு படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம், ஆரோக்கியமான சீரான சரிவிகித உணவு பற்றிய தகவல்களை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கையை எட்டு, எட்டாக பிரித்தால் 5வது எட்டில் அதாவது 40வது வயதில் இருக்கிறவர்கள் உடல்நலனிலும், உணவு முறையிலும் ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
சென்னையில் உள்ள சிநேகா என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஃபுட் பேங்க் இந்தியா என்ற அமைப்புத் தொடங்கப்பட்டு கொரோனாவில் தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
முடி உதிர்வதைத் தவிர்க்க ஷாம்பு வகைகள் எதையும் பயன்படுத்தத் தேவையில்லை. நான் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொண்டாலே முடி உதிர்வதைத் தவிர்க்க முடியும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பதப்படுத்தப்படுகின்றன. இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளும் பதப்படுத்தப்படுகின்றன.
சென்னை மற்றும் ஐதராபாத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் ஊதியம் குறைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 14ம் தேதி திடீரென வேலை நிறுத்தம் தொடங்கினர். இதனால், சென்னையில் வாடிக்கையாளர்கள் உணவு விநியோகம் தடைபட்டது. ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.












