அம்மா உணவகத்தின் மாடலில் ஆந்திரா, கர்நாடகாவில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதே போல இப்போது ராஜஸ்தானில் எட்டுரூபாய் விலையில் உணவு வழங்கும் இந்திரா ராசாய் யோஜனா எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகள், அங்கன்வாடிகளில் வழங்கப்பட்ட சத்துணவும் கொடுக்கப்படவில்லை.
நமது உடலின் தோல், முடி, நகங்களில் கட்டமைப்புக்கு முக்கியமான தேவை கெரட்டின் என்ற சத்தாகும். இந்த சத்து சில உணவுப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உங்கள் தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பொது ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு இத்தகைய வசதிகள் இல்லாத நிலையில் அவர்களின் படிப்பு தொடர்ந்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக கிராம ப்பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது.
சென்னையின் ருசிமிக்க உணவு வகைகளில் முதல் ஐந்து உணவு வகைகளை நேற்றுப் பார்த்தோம். இன்றைக்கு மீதம் உள்ள ஐந்து உணவு வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
சோறு என்பதை மிக கவனமாக தவிர்த்து சாதம் என்றோ, Rice என்றோ சொல்வதை. நமக்கு இருக்கும் ஆகப்பெரிய பிரச்சனை நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, அதுவே நாம் உண்ணும் சோற்றைக்கூட சோறு என சொல்ல மறுக்கிறது.. இங்கிருந்து ஆரம்பமாகிறது உணவு யுத்தத்தின் முதல் கட்டுரை.
சென்னையில் ருசியான ஃபில்டர் காஃபி 10 ரூபாய்க்கும் கிடைக்கும் 200 ரூபாய்க்கும் அதிகமாக தாஜ் ஹோட்டல் ரெஸ்டாரெண்டிலும் கிடைக்கும். ஃபில்டர் காஃபி புகழ்பெற்றது கும்பகோணம் மட்டும் அல்ல. சென்னையும் கூடத்தான். கும்பகோணத்து காப்பியை டிகிரி காஃபி என்பார்கள்.
இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்ட உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும்போது மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்தத்தை போக்கும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால், உடலுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடும்.
வைத்தியம் சொல்லி ரொம்ப நாளாச்சி. இன்னைக்கி தூதுவேளை பத்தி சொல்றேன். தூதுவேளையை தூதுவளைன்னும் சொல்வாங்க. பொதுவா தூதுவேளை பத்தி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீங்க. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை நரம்பு மண்டலத்தோட செயல்பாட்டை பகிர்ந்துகொடுக்குறது மட்டுமில்லாம அது எல்லாத்தையும் உணவாவும், மருந்தாவும் பிரிச்சி கொடுத்து தூது போறதால இதுக்கு தூதுவேளைனு பெயர் வந்திச்சி. தூதுவேளையில முள் அதிகமாக இருக்கும். இதனாலயே நிறையபேருக்கு இதை பிடிக்காது.
முடக்கத்தான் கீரைகள் வாங்கி ரசம் தயாரித்து எடுத்து தமது தாய்க்கு கொடுத்தார். ஒரு மா த த்தில் அவரது மூட்டு வலி முற்றிலும் அகன்று விட்டது. மருத்துவர்கள் சொன்னபடி அவர் அவரது அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை. முடக்கத்தான் கீரையே அவரது மூட்டுகளை சரி செய்து விட்டது.
உணவு விநியோகத்தில் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஈடுபடும் ஜொமோட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. அண்மையில் இந்த நிறுவனம், வீட்டில் சமைத்த உணவுப் பொருட்களை படம் எடுத்து அதனை வாடிக்கையாளர்களை தமது நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றும்படி அறிவுறுத்தியது.
திண்டுக்கல் நகரம் பூட்டு தயாரிப்புக்கு மட்டுமின்றி, தலப்பாகட்டி பிரியாணிக்கும் புகழ் பெற்றது. திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் 1957-ம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவரால் ஆனந்த விலாஸ் பிரியாணி என்ற பெயரில் கடை ஆரம்பித்தார்.












