அரசு அனுமதித்தும் ஹோட்டல்களில் பார்சல் மட்டும் கொடுக்கின்றனர் என் தெரியுமா?

கொரோனாவை தடுக்கும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து பொது ஊரடங்குடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாபிபட அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

எப்படி சாப்பிடுவது என்று தெரியுமா?

உணவு என்பது நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மனம் சிந்திப்பதற்கான ஆற்றலையும் உணவு தருகிறது. எனவே உணவு என்பது இன்றியமையாத ஒன்று. அந்த உணவை ஆரோக்கியமானதாக உண்ண வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆரோக்கியமான உணவை நேரத்துக்கு சாப்பிட்டால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மழைகாலத்துக்கு ஏற்ற உணவு வகைகள்

தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. காற்றில் குளிர்ச்சி கலந்து தென்றல் காற்றாக வீசுகிறது. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவது உண்டு.

தூங்கும் முன்பு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் தெரியுமா?

இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நமது உடல் நிலை மனநிலை இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நமது உணவுகளும் சிறந்த தாக இருக்க வேண்டும்.

மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரித்து மன நலன் காக்கும் உணவுகள்...

உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ, மனநல ஆரோக்கியமும் அந்த அளவுக்கு முக்கியம்தான். நம் மனது சந்தோஷமாக இருப்பதற்கு, நம் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பசிபோக்கும் பண்பால் உயர்ந்து நிற்கும் உயர்ந்த நடிகர் சத்யராஜின் மகள்

திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டசத்து நிபுணர். கடந்த சில ஆண்டுகளாகவே வெளிப்படையாக அதே நேரத்தில் தைரியமாக கருத்துகளை கூறி வருவதன் மூலம் பலராலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

தலைமுடியை வலுப்படுத்தும் இயற்கை உணவுகள்

நாம் எதைப்பற்றி கவலைப்படுகிறோமோ இல்லையோ தலைமுடி கருகருவென இருக்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புகின்றோம். அதனால்தான் இளநரை தோன்றிய பின்னர் கூட டை அடித்து முடியை கருப்பாக ஆக்க முயற்சிக்கின்றோம்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், தினந்தோறும் ஜீரணம் ஆகி கழிவாக வெளியேறுகிறது. ஜீரண சக்தி ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் தடையின்றி கிடைக்கும். ஜீரண சக்தியை நன்றாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்து மிகுந்த இயற்கை உணவுகள்

கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிகப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது. கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக தடுப்பதற்கான மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆடிமாதம் அம்மனை குளிர்விக்கும் கூழ் வார்த்தல்

ஆடிமாதம் என்றாலே அம்மன் மாதம்தான். குறிப்பாக சென்னையில் தெருவெங்கும் அம்மன் கோவில்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ்வார்க்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த முறை கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஆடி கூழ்வார்த்தல் என்பது கொண்டாட்டமாக இல்லாமல், ஆடம்பரம் இன்றி எளிமையாக அவரவர் வீடுகளில் நடைபெற்று வருகின்றது.

பசியின்மையை போக்குவதுடன், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கடுக்காய் எனும் அரும் மருந்து

அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

பாசிப்பயற்றில் பத்து விதமான நன்மைகள்

பாசிப்பயறு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பலர் சாப்பிடுவர். ஆனால், அதில் உள்ள சத்துகள் என்னவென்று தெரிந்து கொண்டால், அதை நீங்கள் மிஸ்பண்ணவே மாட்டீர்கள்.