இப்போதைய காலகட்டத்தில் யாரைப்பார்த்தாலும் அதிக உடையுடன் காணப்படுகின்றனர். சின்ன குழந்தைகள் கூட அதிக உடையுடன் இருக்கின்றன. உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை, உடல் குறைப்பு அறிவுரைகள் என்று ஏராளமான செய்திகள் இணையதளங்களில் நிரம்பி வழிகின்றன. இங்கே எளிய முறையில் உடலை குறைக்கும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
சின்னகவுண்டர் படத்தில் நலிந்த நிலையில் உள்ள சுகன்யா மொய்விருந்து நடத்தி பணம் வசூலிப்பார். அந்த விருந்தில் பங்கேற்கும் விஜயகாந்த் மொய் சாப்பிட்டுவிட்டு, அந்த இலையின் கீழ் தாலியை வைத்து விட்டு தமது காதலைச் சொல்லுவார்.
கொள்ளு என்ற சத்தான சிறுதானியத்தை குதிரைக்கான உணவாக மட்டுமே ஆக்கிவிட்டோம். உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.
நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அவல் மிகுந்த சத்துகளைக் கொண்டது. குறிப்பாக நார்சத்து மிக்க உணவு. அவலை ஊறவைத்து, நாட்டுசர்க்கரை கலந்து காலைவேளைகளில் சாப்பிட்டால், உடல் எடை குறையும், ஜீரணசக்திக்கு ஏற்றது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் தொலைநோக்கு திட்டத்தில் ஒன்றான மதிய உணவுத்திட்டம் ஏழை மக்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக இருக்கிறது. ஆனால், இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதால் வயிற்றுப் பசியையும், அறிவுப் பசியையும் போக்க வழி இல்லாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் அனைத்து உணவு பொருட்களிலும் இலாபத்திக்காக தரம் இல்லாத கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் கலக்கப்படுகிறது. கண்ணைக் கவரும் நிறமிகள், மணம் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இரசாயனங்கள் (PRESERVATIVES) சேர்க்கப்படுகிறது.
துரியன்பழம்... பார்க்க பலாப்பழம் போன்று இருக்கும். பலாப்பழத்தைவிட அளவில் சிறியது. அதற்காக முழு துரியன் பழத்தையும் ஒருவரால் சாப்பிட்டு விட முடியாது. அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் சூட்டை அதிகரித்து அதிக வியர்வையை ஏற்படுத்திவிடும். ஒருவேளை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், நிறைய தண்ணீர் குடித்து பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இன்று கேன்சர் மருத்துவமனைகள்ல் கூட்டம் குவிவதற்குக் காரணமே நம் உணவு வழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம்தான்.
முக க்கவசம் அணிந்து கொண்டு உணவு உண்ணுவது, தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது என்பது மிகவும் சிர மமான விஷயம். முக கவசத்தை கையால் தொட்டு கீழே தள்ளக் கூடாது என்று என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
சூழலை பயன்படுத்தி எதையுமே சந்தைப்படுத்துவதில் பலர் கெட்டிக்கார ர்கள். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பற்பசை, நுண்ணூட்டசத்துகள், சோப்கள் என்று தினந்தோறும் விளம்பரங்கள் வரிசை கட்டி வந்துள்ளன.
முழு ஊரடங்கு காரணமாக பலர் உணவின்றி தவிக்கின்றனர். வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்கள் தினந்தோறும் பசியோடு பொழுதைக் கழிக்கின்றனர்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வரும் சூழலில் அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில், மாவட்டங்களில் உள்ள பலர் ஒர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் பணியாற்ற முடிகிறது. ஆனால்,சிறு நகரங்களில் இது சாத்தியமில்லை.












